என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு கோவையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
- ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, கிராஸ்கட் வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
- தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை லட்சக்கணக்கானோர் கடை வீதிகளில் திரள வாய்ப்புள்ளது.
கோவை,
தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவதற்காக கோவையில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, கிராஸ்கட் வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வருகிறார்கள்.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை லட்சக்கணக்கானோர் கடை வீதிகளில் திரள வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் 24-ந் தேதி வரை கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்து மாற்ற விவரம் வருமாறு:-
ஒப்பணக்கார வீதியில் பொதுமக்களின் வாகனம் நிறுத்த அனுமதி கிடையாது.அந்தந்த கடையின் வாகன நிறுத்துமிடம் அல்லது மாநகராட்சி வாகன நிறுத்துமிடத் தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
ஆத்துப்பாலத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக, அவிநாசி ரோடு செல்லும் வாகனங்கள், ஒப் பணக்கார வீதியை பயன்படுத்தாமல், உக்கடத்தில் இருந்து வாலாங்குளம், சுங்கம் வழியாக சென்று விடலாம்.
உக்கடத்தில் இருந்து மேட்டுப்பாளையம், மருதமலை, தடாகம் செல்லும் வாகனஓட்டிகள், பேரூர் பைபாஸ் ரோடு, செல் வபுரம் ரவுண்டானா, செட்டி வீதி, சலிவன் வீதி, காந்தி பார்க் வழி யாக செல்லலாம்.
பாலக்காட்டில் இருந்து கோவை மாநகருக்குள் வரும் வாகனங்களில், போத்தனுார், சுந்தரா புரம், பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிக்கு செல்லும் வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் சுண்ணாம்பு காளவாயில் இருந்து இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி ரோடு, உக்கடம் வழியாக செல்லலாம்.
உக்கடத்தில் இருந்து கோவைபுதுார், மதுக்கரை, பாலக் காடு செல்லும் வாகனங்கள், பேரூர் பைபாஸ் ரோடு, புட்டுவிக்கி ரோடு வழியில் செல்ல வேண்டும்.
காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பொருள் வாங்க வருபவர்களை தவிர, ஆர்.எஸ்.புரம், வட வள்ளி, மேட்டுப்பாளையம் செல்லும் வாகன ஓட்டிகள், 100 அடி சாலை, சிவானந்தா காலனி சாலையை பயன்படுத்தி செல்லலாம்.
காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பொருள் வாங்க வருபவர்கள், மாநகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்தையோ அல்லது அந்தந்த கடையின் பார்க்கிங் இடத்தையோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். சனி, ஞாயிறு விடு முறை நாட்களில், கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தை வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்த லாம். சாலையில் வாகனம் நிறுத்தக்கூடாது.
இவ்வாறு மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.