search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic change"

    • மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்தது. .
    • அரசு ஆஸ்பத்திரிக்கு எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



    புதிதாக திறக்கப்பட்டுள்ள ஓபுளாபடித்துறை பாலத்தில் வந்த வாகனங்கள் மோதி இன்று விபத்து ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. தென் மாவட்டத்தின் மிக முக்கிய மருத்துவமனையாக இது உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகன பயன்பாடு அதிகம் காணப்படுகிறது.

    இதுபோல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், ஊழியர்கள், பயிற்சி டாக்டர்கள் மற்றும் 200-க்கும் குறைவில்லாத ஆம்புலன்சுகள் தினமும் பயணிக்கும் முக்கியமான சாலையாகவும் உள்ளது.

    இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட ஓபுளாபாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ள பனகல் சாலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க ஒருவழிப்பாதையாக மாற்ற போலீசார் திட்டமிட்டு போக்குவரத்து மாற்றத்தை இன்று நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

    அதன்படி கோரிப்பா ளையம் சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பு நோக்கி செல்லக்கூடிய வாகன போக்குவரத்தில் மாற்றம் இல்லை. திருவள்ளுவர் சிலை, அண்ணா பஸ் நிலை யத்தில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய அரசு பஸ் மற்றும் வர்த்தக வாகனங்கள் பனகல் சாலை-சேவாலயம் சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, இடதுபுறமாக திரும்பி வைகை வடகரை சாலையின் வலதுபுறமாக சென்று செல்லூர், தத்தனேரி மற்றும் திண்டுக்கல் சாலைக்கு செல்ல வேண்டும்.

    தமுக்கம், தல்லாகுளம் செல்லும் வாகனங்கள் வைகை வடகரை சாலையை பயன்படுத்தி குமரன் சாலையில் வலதுபுறமாக திரும்பி பாலம் ஸ்டேஷன் சாலை, கோரிப்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.

    சிம்மக்கல் வழியாக பெரியார் பஸ் நிலையம் செல்லும் பஸ்கள் வைகை வடகரை சாலை வழியாக புதிதாக கட்டப்பட்ட ஓபுளா பாலம், முனிச்சாலை சந்திப்பு, யானைக்கல் வழியாக செல்ல வேண்டும். இதன் மூலம் ஏ.வி. பாலத்தின் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

    ஆனால், மருத்துவ மனைக்கு செல்லும் டாக்டர்கள், ஊழியர்கள் சிவசண்முகம்பிள்ளை சாலை கிழக்கு வாசல் வழியாக ஆஸ்பத்திரிக்கு செல்லலாம். சிவசண்மு கம்பிள்ளை சாலையில் இருந்து கோரிப்பாளை யத்திற்கு வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்புலன்சுகள் வைகை வடகரை, சிவ சண்முகம்பிள்ளை சாலை, மருத்துவமனை கிழக்கு வாசல் மற்றும் கோரிப்பா ளையம் சந்திப்பு வழியாக மருத்துவமனைக்கு செல்லலாம்.

    இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக சில வாகன ஓட்டிகள் அவதிபட்டனர். சிறுசிறு விபத்துக்கள் ஏற்பட்டன. இந்த விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 30-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 30-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் அருகில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    அதாவது, ராசிபுரம்-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் வாழப்பாடி வழியாகவும் (வாழப்பாடி திம்மநாயக்கன்பட்டி சாலை), தம்மம்பட்டி-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் தம்மம்பட்டி-கெங்கவல்லி சாலையை பயன்படுத்தி மஞ்சினி வழியாக ஆத்தூருக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    எனவே, மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் முடியும் வரை கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் சேலம் கோட்ட பொறியாளர் தேவகி தெரிவித்துள்ளார்.

    • ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முன்புறம் குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய் பதிக்கும் பணி நடைபெற உள்ளது.
    • மியூசிக் அகாடமியில் இருந்து டி.டி.கே. சாலை,எல்டாம்ஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம்.

    சென்னை பெருநகர காவல்துறையின் போக்கு வரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முன்புறம் குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய் பதிக்கும் பணி நடைபெற உள்ளது.

    இதையொட்டி, அந்தப் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 3 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இதன்படி, டி.டி.கே. சாலையில் இருந்து மியூசிக் அகாடமி நோக்கி செல்லும் வாகனங்கள் ஆழ்வார்பேட்டை போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முரேஸ் கேட் சாலையில் சென்று வலதுபுறம் திரும்பி சேஷாத்ரி சாலை, கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக கதீட்ரல் சந்திப்பை அடையலாம்.

    அங்கிருந்து வாகனங்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லலாம். மியூசிக் அகாடமியில் இருந்து டி.டி.கே. சாலை,எல்டாம்ஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணிகள் திருச்சி பிரதான சாலை அஸ்வின் பேக்கரி முதல் முங்கப்பாடி வரை நடைபெறுகிறது.
    • இந்த பணிகள் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் சேலம் குகை திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணிகள் திருச்சி பிரதான சாலை அஸ்வின் பேக்கரி முதல் முங்கப்பாடி வரை நடைபெறுகிறது. இதற்கான பணி இன்று காலை தொடங்கியது.

    இந்த பணிகள் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் சேலம் குகை திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சேலம் பழைய பஸ் நிலையத்திலிருந்து ராசிபுரம், மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி, மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் வள்ளுவர் சிலை சந்திப்பு, மாவட்ட கலெக்டர் அலுவலக சந்திப்பு, 4 ரோடு சந்திப்பு, லீ பஜார், சண்முகா பாலம், சந்தைப்பேட்டை வழியாக நெத்திமேடு அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றன.

    புலிக்குத்தி சந்திப்பில் இருந்து பிரபாத் சந்திப்பு செல்ல வேண்டிய இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் புலிக்குத்தி பிரதான சாலை, சிவனார் தெரு, கருங்கல்பட்டி சாலை வழியாக திருச்சி சாலை சென்றன.

    இந்த போக்குவரத்து மாற்றத்தால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கூடுதலாக போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம்.
    • பயணத்தை மாற்றி திட்டமிட்டு கொள்ளவும்.

    கோவை,

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு, கோவையில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை அவினாசி ரோடு பழைய மேம்பாலம்,குட்ஷெட் ரோடு, புருக்பீல்டு ரோடு, சிந்தாமணி சந்திப்பு, கவுலிபிரவுன்ரோடு, லாலி ரோடு, மருதமலை ரோடு ஆகியவற்றில் இன்று மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரையும், நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    அதன்படி, அவினாசியிலிருந்து நீலாம்பூர், சின்னியம்பாளையம் வழியாக கனரக, சரக்கு வாகனங்கள் நகருக்குள் வர தடை விதிக்கப்படுகிறது. மாறாக, எல். அன்ட். டி. பைபாஸ் ரோடு, சிந்தாமணிப்புதூர், ஒண்டிப்புதூர், ராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம். கோவை நகரிலிருந்து அவினாசிக்கு செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் அண்ணா சிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் எல். அன்ட். டி. பைபாஸ் ரோடு செல்லலாம்.

    காளப்பட்டி ரோடு வழியாக வரும் கனரக, சரக்கு வாகனங்கள் சிட்ரா சந்திப்பை அடைய தடை விதிக்கப்படுகிறது. காளப்பட்டி நால்ரோடு, மயிலம்பட்டி, தொட்டிபாளையம் வழியாக செல்லலாம். சத்தி சாலை, சரவணம்பட்டி பகுதிகளிலிருந்து அவினாசி ரோடு, திருச்சி ரோட்டுக்கு செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் கணபதி, காந்திபுரம் மேம்பாலம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம்.

    மருதமலை ரோடு, தடாகம் ரோடு வழியாக வரும் வாகனங்கள் கவுலிபிரவின் ரோடு, சிந்தாமணி வழியாக செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது.அதற்கு மாறாக பாரதிபார்க் ரோடு, வடகோவை மேம்பாலம், காந்திபுரம்அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம்.

    மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம்.

    பொதுமக்கள் அவினாசி ரோடு, வழியாக பழைய மேம்பாலம், குட்ஷெட் ரோடு, புருக்பீல்டு ரோடு, சிந்தாமணி சந்திப்பு, கவுலிபிரவுன் ரோடு, லாலி ரோடு, மருதமலை ரோடு ஆகிய பகுதிகளில் செல்ல வேண்டியது இருந்தால் தங்களது பயணத்தை மாற்றி திட்டமிட்டு கொள்ளவும்.

    அவினாசி ரோடு, சின்னியம்பாளையம் வழியாக, கோவை நகருக்குள் நகருக்குள் வரும் கார், இதர வாகனங்கள், தொட்டி பாளையம் பிரிவு, மயிலம்பட்டி, காளப்பட்டி நால்ரோடு, சரவணம் பட்டி வழியாக செல்லலாம். விமான நிலையம், ெரயில் நிலையம், ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே தொட்டிபாளையம் பிரிவிலிருந்து நகருக்குள் அனுமதிக்கப்படும்.

    அவிநாசி ரோடு, பழைய மேம்பாலத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மேற்குறிப்பிட்ட மேம்பாலத்தின் கீழே செல்லலாம். மருதமலைரோடு, தடாகம் ரோடு வழியாக வாகனங்கள் ஜி.சி.டி., பாரதிபார்க் ரோடு, வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம். மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மயான கொள்ளை திருவிழாவை முனனிட்டு நடவடிக்கை
    • பழைய பாலாற்று பாலம் வழியாக மட்டுமே வேலூர்-காட்பாடி இடையிலான போக்குவரத்து நடைபெறும்

    வேலூர்:

    வேலூரில் மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி நாளை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை புதிய பாலாறு பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. பழைய பாலாறு பாலம் வழியாக வாகனங்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் மயானக் கொள்ளை திருவிழா நாளை (19-ம் தேதி) கொண்டா டப்படவுள்ளது. இதில், வேலூர் பாலாற்றங்கரை மயானப் பகுதியில் நடைபெறும் விழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்வார்கள்.

    பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்ப டவுள்ளனர். விழாவை யொட்டி, வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக பாலாற்றங்கரைக்கு எடுத்து செல்வார்கள். ஊர்வ லத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பல்வேறு சாமி வேடமிட்டு வருவார்கள்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள பாலாற்றங்கரை பகுதியில் உள்ள மயானப்பகுதியை சீர் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றன. அங்கு பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், பாதுகாப்பு பணிகள் தொடர்பாக வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மயானக்கொள்ளை விழா நடைபெறும் நாளில் (19-ம் தேதி) பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை புதிய பாலாற்று பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

    பழைய பாலாற்று பாலம் வழியாக மட்டுமே வேலூர்-காட்பாடி இடையிலான போக்குவரத்து நடைபெறும். மேலும், ஊர்வலம் தடையில்லாமல் நடைபெறுவதற்காக மின் நிறுத்தம் செய்யப்படும். 2 போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் தற்காலிகமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சாமி ஊர்வலத்தில் டி.ஜே ஒலிபரப்புக்கு அனுமதியில்லை. அதேபோல், எந்த இடத்தி லும் மயானக்கொள்ளை தொடர்பான டிஜிட்டல் பேனர்கள் வைக்க அனுமதியில்லை.

    பொதுமக்கள் வசதிக்காக பாலாற்றில் 100 போகஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு 2 கண்காணிப்பு கோபுரங்க ளில் இருந்தபடி கண்கா ணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    பொதுமக்களுக்காக 2 இடங்களில் தண்ணீர் தொட்டி வைக்கப்படும். புதிய பஸ் நிலையத்துக்கு கிரீன் சர்க்கிள், செல்லியம்மன் கோவில் நுழைவு பாதை வழியாக வந்து செல்ல வேண்டும். காட்பாடி வழியாக வந்து செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • டிரோன்கள் பறக்க தடை
    • முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை யையொட்டி வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரி வித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன் கிழமை) சென்னையில் இருந்து ரெயிலில் காட்பாடிக்கு வருகை தருகிறார்.

    அவர் இன்று மற்றும் நாளை (வியாழக்கிழமை) காட்பாடி, வேலூர் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    போக்குவரத்து மாற்றம்

    இதையொட்டி வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்தூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சேர்க்காடு மற்றும் இ.பி. கூட் ரோடு வழியாக வேலூருக்கு செல்ல வேண்டும்.

    குடியாத்தம் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வடுகன்தாங்கல், விரிஞ்சிபுரம் வழியாக வேலூர் பைபாஸ் செல்ல வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வரும் கனரகவாகனங்கள் சாத்துமதுரை, தங்ககோவில் வழியாக பெங்களுரூ பைபாஸ் சாலைக்கு செல்ல வேண்டும்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதிக்குள் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான் ஊர்திகள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான் ஊர்திகளை பறக்கவி டும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் காவல்து றையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கோவை போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கோவை

    கோவை மேட்டுப்பா ளையம் ரோட்டில் உள்ள சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து சிந்தாமணி, ஹோம் சைன்ஸ் வழியாக, மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் அவினாசிலிங்கம் மனை யியல் கல்லூரியில் இடது புறம் திரும்பி பாரதி பார்க் ரோடு ஜி.சி.டி., தடாகம் ரோடு, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையலாம்.

    கோவையில் இருந்து சிந்தாமணி, ஹோம் சைன்ஸ் வழியாக கோவிலுக்கு வரும் வாகனங்கள் பாரதிபார்க் ரோட்டில் இருந்து வலதுபுறம் திரும்பி ராஜா அண்ணாமலை ரோடு வழியாக, ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில், வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம்.

    மேட்டுப்பாளையம், துடி யலூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சங்கனூர் சோதனைச் சாவடியில் இடது புறம் திரும்பி, கண்ணப்ப நகர் புறக்காவல் நிலையம், தயிர் இட்டேரி, சிவானந்தா காலனி வழியாக நகருக்குள் வரலாம்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவிலுக்கு வரும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையம், அதற்கு அருகில் உள்ள பூண்டு குடோன் வாகனம் நிறுத்தும் இடங்களிலும், இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஹிப்கோ மோட்டார் கம்பெனி வளாகத்திலும் நிறுத்திவிட்டு, கோவிலுக்கு செல்லலாம். மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையத்தை தாண்டி எந்த வாகனங்களும் செல்ல இயலாது.

    காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மற்றும் இதர பஸ்கள் மற்றும் வாகனங்கள், ஜி.பி., சிக்னல். சத்தி ரோடு, நம்பர் 3 பஸ் நிலையம் கணபதி, சங்கனூர் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையலாம்.காந்திபுரத்தில் இருந்து கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும், கிராஸ்கட் ரோடு,சிந்தாமணி சந்திப்பு, ஹோம் சைன்ஸ் வழியாக சென்று ராஜா அண்ணாமலை ரோட்டில் வலது புறம் திரும்பி அழகேசன் ரோட்டில் உள்ள, ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லலாம்.தடாகம், கணுவாய், இடையர்பாளையம் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கோவில்மேடு சோதனைச் சாவடி, அவிலாகான்வென்ட் பள்ளி, ஜி.சி.டி., லாலிரோடு வழியாக நகருக்குள் வரலாம்.

    தடாகம், கணுவாய், இடையர்பாளையம் பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அவிலாகான் வென்ட் பள்ளியில் இருந்து இடது புறம் திரும்பி என்.எஸ்.ஆர்., ரோடில் எஸ்.பி. ஐ.,ல் வலது புறம் திரும்பி ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம். போக்குவரத்து மாற்றத்தி ற்கு ஏற்ப பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். சாலையோர பார்க்கிங் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்து வதற்காக ஒதுக்கீடு செய்ய ப்பட்டுள்ள இடங்களி ல் மட்டும், வாகனங்களை நிறுத்த அனுமதி க்கப்பட்டுள்ளது.பொதுமக்கள், போக்குவ ரத்து மாற்றத்திற்கு ஏற்ப வாகன ஓட்டிகளும், பக்தர்களும் ஒத்துழைப்பு கொடுத்து, பயணத்தை விரைவாக மேற்கொள்ள, கோவை போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும்.
    • பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஓல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42 கிமீ, 32 கிமீ, 21 கிமீ மற்றும் 10 கிமீ) மாரத்தான் ஓட்டம் நாளை (8-ந்தேதி) நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணி முதல் நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கப்பட்டு காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே.சாலை, இ.சி.ஆர். வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை சென்றடையும்.

    இந்நிகழ்ச்சி தொடர்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    * அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

    * போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை சாலைக்கு வழியாக திருப்பி விடப்பட்டு வாலாஜா பாயின்ட் அண்ணாசாலையில் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹைரோடு, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * மத்திய கைலாசிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது, அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஓல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

    * மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்.எல். பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாரத்தான் ஓட்டம் காரணமாக நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் அறிவித்துள்ளார்.

    சோழிங்கநல்லூர் சந்திப்பிலிருந்து, சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் செம்மொழி சாலையாக செல்ல வேண்டும்.

    அதேபோல், மேட்டுக்குப்பம் ராஜ் நகர் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜீவ்காந்தி சாலையில் வலது புறமாக செல்ல வேண்டும். மேலும், மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும், வேளச்சேரி பிரதான சாலை பள்ளிக்கரணை வழியாக செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் நடக்கிறது
    • பொதுமக்கள் ஒத்து ழைப்பு அளிக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சா லையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை சாவடி வரை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் நடக்கிறது.

    இந்த பணியை நெடுஞ்சாலை, மின் சாரத்துறையினர் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள உள்ள னர். இப்பணிகள் முடியும் காலமான சுமார் 15 நாட்க ளுக்கு இந்த சாலையில்போக் குவரத்து மாற்றம் செய்யப்ப டுகிறது.

    குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக வேலூர் செல்லும் வாகனங் கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வடுகன் தாங்கல், காட்பாடி வழியாக செல்ல வேண்டும்.

    வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 48-ஐ பயன்படுத்தி செதுவாலை, விரிஞ்சி புரம் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை 75-ஐ அடைந்து வடுகன்தாங்கல் வழியாக குடியாத்தம் செல்ல வேண்டும்.

    குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்லும் வாகனங்கள் குடியாத்தத்தில் இருந்து மேல்பட்டி சாலையில் உள்ளி கூட் ரோடு சந்திப்பை அடைந்து ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்ல வேண்டும். கிருஷ்ணகிரி மார்க்கத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்லும் வாகனங் கள் மாதனூர் - உள்ளி கூட்ரோடு மும்முனை சந்திப்பு வழியாக மேல்பட்டி சாலை வழியாக குடியாத்தம் செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றம் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணி முடியும் வரை நடைமுறைப்படுத்தப்படும். மற்றநேரங்களில் தற் போது உள்ளபடி அதே சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். கனரக வாகனங்கள் பள்ளிகொண்டாவிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உள்ள தாலும், மழைநீர் வடிகால் வாய்கள் நீண்ட காலத்துக்கு பயன்படுத்த பணிகளை மேற் கொள்ள வேண்டி உள்ளதால் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி தவிர்க்க முடியாது. போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாகனங்கள் அனைத்தும் கே.ஜி.தியேட்டர், அரசு கலைகல்லூரி சாலை சந்திப்பு வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லலாம்.
    • லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம் சாலை வழியாக ராமநாதபுரம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்லலாம்.

    கோவை,

    கோவை ரேஸ்கோர்ஸில் மாநகராட்சி சார்பில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற நிகழ்ச்சி நாளை காலை 5 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக கீழ் கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்சி ரோடு-வெஸ்ட் கிளப் சந்திப்பிலிருந்து ரேஸ்கோர்ஸ் வழியாக செஞ்சிலுவை சங்கம் அடைந்து காந்திபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் கிளாசிக் டவர், ெரயில் நிலையம், செஞ்சிலுவை சங்கத்தை அடைந்து காந்திபுரம் செல்லலாம்.

    காந்திபுரத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் வழியாக திருச்சி சாலை செல்லும் பஸ்கள் அனைத்தும் அவினாசி சாலை அண்ணா சிலை சந்திப்பில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம் சாலை வழியாக ராமநாதபுரம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்லலாம்.

    திருச்சி ரோடு-வெஸ்ட் கிளப் சந்திப்பிலிருந்து ரேஸ்கோர்ஸ் கே.ஜி.தியேட்டர் வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் சாலையில் இருந்து கிழக்கு நோக்கி திரும்பி ஸ்கீம் ரோடு அல்லது தாமஸ் பார்க் சந்திப்பு, காஸ்மோபாலிடன் கிளப் சந்திப்பை அடைந்து திருஞானசம்பந்தம் சாலை வழியாக அவினாசி சாலையை அடைந்தும் அல்லது தாமஸ் பார்க், அப்துல் ரஹீம் சாலை, காமராஜர் சாலை வழியாக அவினாசி சாலையை அடைந்தும்,செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    ஓசூர் சாலையில் இருந்து கே.ஜி.தியேட்டர் வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்ல ரேஸ்கோர்ஸ் சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் கே.ஜி.தியேட்டர், அரசு கலைகல்லூரி சாலை சந்திப்பு வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
    • வாகனங்களை மாநகராட்சி நிறுத்தும் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

    கோவை,

    தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் 24-ந்தேதிவரை பொதுமக்கள் செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தங்களது வாகனங்களை மாநகராட்சி நிறுத்தும் இடம் அல்லது கடை உரிமையாளர்களின் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். ஆத்துப்பாலத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதியை பயன்படுத்தாமல் உக்கடத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி வாலாங்குளம், சுங்கம் வழியாக செல்ல வேண்டும்.

    உக்கடத்தில் இருந்து மேட்டுப்பாளையம், மருதமலை, தடாகம் செல்லும் வாகன ஓட்டிகள் பேரூர் பைபாஸ் செல்லும் ரவுண்டானா, செட்டி வீதி, சலீவன் வீதி காந்திபார்க் வழியாக செல்ல வேண்டும்.

    பாலக்காட்டில் இருந்து கோவை வரும் வாகனங்கள் போத்தனூர், சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் சுண்ணாம்பு காளவாயில் இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி ரோடு உக்கடம் வழியாக செல்ல வேண்டும்.

    உக்கடத்தில் இருந்து கோவைப்புதூர் மதுக்கரை மற்றும் பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம் ரவுண்டானா புட்டுவிக்கிரோடு வழியாக செல்லலாம்.

    காந்திபுரம் கிராஸ்கட்ரோட்டில் பொருட்கள் வாங்க வருபவர்கள் தவிர, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, மேட்டுப்பாளையம் செல்லும் வாகன ஓட்டிகள் 100 அடி சாலை, சிவானந்தா காலனி சாலையை பயன்படுத்தி செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    காந்திபுரம் கிராஸ்கட்ரோட்டில் பொருட்கள் வாங்க வருபவர்கள் மாநகராட்சி வாகன நிறுத்த இடங்கள், கடைகளின் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்களில் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தை வாகனம் நிறுத்தும் இடங்களாக பயன்படுத்தலாம்.

    சாலைகளில் வாகனங்களை நிறுத்த கூடாது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×