search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "implemented"

    • என்னுடைய பில் என்னுடைய அதிகாரம் என்கிற புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
    • ஜி.எஸ்.டி., பில்களை பதிவேற்றம் செய்வோர் குலுக்கல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்

    திருப்பூர்:

    நுகர்வோரிடம் வசூலிக்கும் வரி முறையாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், வரி ஏய்ப்புகளை குறைப்பதற்காகவும், மத்திய அரசு, மேரா பில் மேரா அதிகார் அதாவது என்னுடைய பில் என்னுடைய அதிகாரம் என்கிற புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இதற்காக பிளேஸ்டோர், ஆப்ஸ் ஸ்டோரில் பிரத்யேக செயலியும் பயன்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 1-ந்தேதி அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. மொபைல் செயலியில் நுகர்வோர், தங்கள் பெயர், மொபைல் எண்ணை அளித்து எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். பொருட்கள் வாங்கும் போது ஜி.எஸ்.டி., பிடித்தம் செய்ததற்கான பில்லை போட்டோ எடுத்து இந்த ஆப் ல் அப்லோட் செய்ய வேண்டும். ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் 25 பில்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.

    ஜி.எஸ்.டி., பில்களை பதிவேற்றம் செய்வோர் குலுக்கல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவி க்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமாக அசாம், ஹரியானா, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள், புதுச்சேரி, டாமன், டையு, தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பகுதிகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.திட்டம் துவங்கிய 51 நாட்களிலேயே இந்த செயலி மூலம் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 972 ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றம் செய்ய ப்பட்டுள்ளன.

    இம்மாதம் மட்டும் குஜராத்தில் 93,576, அசாம் - 15,850, ஹரியானா - 35,429, புதுச்சேரி - 8,677, டாமன், டையூ, தாத்ரா நகர் - 1,351 என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 883 ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து திருப்பூர் ஆடிட்டர்கள் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு தடுப்பதற்கான புதுமையான முயற்சியாக, மேரா பில் மேரா அதிகார் திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளது. வணிகர் வழங்கும் ஜி.எஸ்.டி., பில், இந்த திட்டத்தில் மொபைல் ஆப் வாயிலாக நுகர்வோரிடமிருந்து அரசுக்கு சென்றடைந்து விடும்.

    இதனால் குறிப்பிட்ட வணிகர் முறையாக வரி செலுத்துகிறாரா, வரி ஏய்ப்பு நடைபெறுகிறதா என்பதை சுலபமாக கண்டறிய முடியும். அதனடிப்படையில் வரி ஏய்ப்பு தடுப்பு, ஏய்ப்பு வரியை வசூலிப்பது போன்ற துறைசார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

    வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள அரசுக்கு வரி வருவாய் இன்றியமையாததாக உள்ளது. இந்த திட்டம் மூலம் தாங்கள் செலுத்தும் வரி, முறையாக அரசுக்கு சென்றடைய வேண்டும் என்கிற பொறுப்பு நுகர்வோர் மத்தியில் அதிகரிக்கும். திட்டம் நடைமுறையில் உள்ள 3 மாநிலங்களில் நுகர்வோர் ஆர்வமுடன் ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளதால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை மத்திய அரசு விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • அதிவேக இணைய சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.
    • அதிவேக இணைய சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு (டான்பி நெட்) நிறுவனம் பாரத்நெட் திட்டம் பகுதி 2 மூலம் இணையதள சேவை வழங் கும் திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் 2 மாதங்க ளில் முழுமையாக நிறைவ டையும். சிவகங்கை மாவட் டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 445 கிராம ஊராட்சிகளில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள், தரை வழி யாகவும், மின்கம்பங்கள் மூலமாகவும் இணைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

    இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. அங்குள்ள அறை ஊராட்சி மன்ற தலைவரால் பராமரிக் கப்படுகிறது.

    அதேபோல் உப கரணங்களை பாது காக்கவும், தடையில்லா மின்வசதியை உறுதி செய்ய வும் ஊராட்சி செய லாளர்க ளுக்கு பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல் படுத்தப்படும்போது ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் அனைவரும் அவர்கள் வசிக்கும் இடத்தி லேயே அதிவேக இணைய சேவையை பெற முடியும்.

    ஒவ்வொரு ஊராட்சி யிலும் அமைக்கப்பட்டுள்ள மின்கலன், இன்வெர்ட்டர், ரூட்டர், கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் தமிழ்நாடு அரசின் உடை மையாகும். இவைகளை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபா்கள்மீது இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்-பெற்றோர் நல சங்கம் வலியுறுத்தல்
    • புதிய சட்டத்தையோ அல்லது சட்ட திருத்தத்தையோ கொண்டு வந்தால், மத்திய அரசின் ஒப்புதலை பெறவேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்க தலைவர் ராஜ்பவன் வை.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ படிப்பில் புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10-சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த கவர்னர் நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது.

    ஏற்கனவே புதுவை அரசு இது சம்பந்தமான கோப்பினை தயார் செய்து ஆளுநருக்கு சமர்பித்துள்ள நிலையில், புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதாலும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி பார்வையின் கீழ் செயல்படுவதாலும், எந்தவொரு புதிய சட்டத்தையோ அல்லது சட்ட திருத்தத்தையோ கொண்டு வந்தால், மத்திய அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கல்வி ஆண்டே (2023-2024) மேற்படி 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஒதுக்கப்பட்டால் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்ட 370 இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்) இடங்களில் 37 இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்) இடங்களை அரசு பள்ளி மாணவர்கள் இடம் பெற வாய்ப்புகிட்டும்.

    இதே போல் 138 இளநிலை மருத்துவ(பி.டி.எஸ்) இடங்களில் 14 இளநிலை மருத்துவ (பி.டி.எஸ்) இடங்களை அரசு பள்ளி மாணவர்கள் இடம் பெற வாய்ப்பு கிட்டும். தற்போது இது சம்மந்தமான கோப்பை சுகாதாரத்துறை தயார் செய்து புதுவை அரசு அமைச்சரவை ஒப்புதலை பெற்று சட்டத்துறை, மற்றும் நிதித்துறை, ஒப்புதலைப் பெற வேண்டும்.

    ஆளுநரிடம் மேற்படி கோப்பினை கையொப்பம் பெற்று அதனை புதுவை அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அதன் பரிந்துரையைப் பெற்று 10 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே பெற்று தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்தது. .
    • அரசு ஆஸ்பத்திரிக்கு எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



    புதிதாக திறக்கப்பட்டுள்ள ஓபுளாபடித்துறை பாலத்தில் வந்த வாகனங்கள் மோதி இன்று விபத்து ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. தென் மாவட்டத்தின் மிக முக்கிய மருத்துவமனையாக இது உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகன பயன்பாடு அதிகம் காணப்படுகிறது.

    இதுபோல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், ஊழியர்கள், பயிற்சி டாக்டர்கள் மற்றும் 200-க்கும் குறைவில்லாத ஆம்புலன்சுகள் தினமும் பயணிக்கும் முக்கியமான சாலையாகவும் உள்ளது.

    இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட ஓபுளாபாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ள பனகல் சாலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க ஒருவழிப்பாதையாக மாற்ற போலீசார் திட்டமிட்டு போக்குவரத்து மாற்றத்தை இன்று நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

    அதன்படி கோரிப்பா ளையம் சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பு நோக்கி செல்லக்கூடிய வாகன போக்குவரத்தில் மாற்றம் இல்லை. திருவள்ளுவர் சிலை, அண்ணா பஸ் நிலை யத்தில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய அரசு பஸ் மற்றும் வர்த்தக வாகனங்கள் பனகல் சாலை-சேவாலயம் சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, இடதுபுறமாக திரும்பி வைகை வடகரை சாலையின் வலதுபுறமாக சென்று செல்லூர், தத்தனேரி மற்றும் திண்டுக்கல் சாலைக்கு செல்ல வேண்டும்.

    தமுக்கம், தல்லாகுளம் செல்லும் வாகனங்கள் வைகை வடகரை சாலையை பயன்படுத்தி குமரன் சாலையில் வலதுபுறமாக திரும்பி பாலம் ஸ்டேஷன் சாலை, கோரிப்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.

    சிம்மக்கல் வழியாக பெரியார் பஸ் நிலையம் செல்லும் பஸ்கள் வைகை வடகரை சாலை வழியாக புதிதாக கட்டப்பட்ட ஓபுளா பாலம், முனிச்சாலை சந்திப்பு, யானைக்கல் வழியாக செல்ல வேண்டும். இதன் மூலம் ஏ.வி. பாலத்தின் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

    ஆனால், மருத்துவ மனைக்கு செல்லும் டாக்டர்கள், ஊழியர்கள் சிவசண்முகம்பிள்ளை சாலை கிழக்கு வாசல் வழியாக ஆஸ்பத்திரிக்கு செல்லலாம். சிவசண்மு கம்பிள்ளை சாலையில் இருந்து கோரிப்பாளை யத்திற்கு வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்புலன்சுகள் வைகை வடகரை, சிவ சண்முகம்பிள்ளை சாலை, மருத்துவமனை கிழக்கு வாசல் மற்றும் கோரிப்பா ளையம் சந்திப்பு வழியாக மருத்துவமனைக்கு செல்லலாம்.

    இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக சில வாகன ஓட்டிகள் அவதிபட்டனர். சிறுசிறு விபத்துக்கள் ஏற்பட்டன. இந்த விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    மத்திய அரசு வேலைகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு 1-ந்தேதி முதல் வழங்கப்படும். #10PercentReservation #CentralGovernment
    புதுடெல்லி:

    மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது.

    இதுதொடர்பாக அரசியல் சாசனத்தின் 124-வது திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது சட்ட அந்தஸ்தை பெற்றுவிட்டது.

    இதையடுத்து மத்திய அரசு வேலைகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் நடைமுறை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இதுகுறித்த முறையான உத்தரவை மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை பிறப்பித்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் சலுகையை பெறாதவர்கள், அவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக இருக்கிறபோது அவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் சலுகையைப் பெற அடையாளம் காணப்படுவார்கள்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, மத்திய அரசு பணிகள் மற்றும் சேவைகளில் பிப்ரவரி 1-ந்தேதி அல்லது அதற்கு பின்வரும் அனைத்து நேரடி ஆள் சேர்ப்பிலும் வழங்கப்படும்.

    மேலும் 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட விவசாய நிலம், நகராட்சி பகுதிகளில் ஆயிரம் சதுர அடியோ, அதற்கு மேலோ பரப்பளவு கொண்ட வீடு, 300 சதுர அடியோ அதற்கு மேலோ பரப்பளவு கொண்ட வீட்டு மனை, நகராட்சி தவிர்த்து பிற பகுதிகளில் 600 சதுர அடியோ அதற்கு மேலோ வீட்டுமனை உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர் தெரிவித்தார். #OmMathur #BJP
    ஜெய்ப்பூர்:

    பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படாத ஒரு நகரம் கூட கிடையாது. நாடு, தர்மசத்திரம் ஆக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஆகவே, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

    இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தொடங்கிய இந்த திட்டத்தை நிறைவேற்ற முந்தைய காங்கிரஸ் அரசுக்கு தைரியம் இல்லை. இந்த விஷயத்தில், ராகுல் காந்தி தனது முன்னோர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #OmMathur #BJP #tamilnews 
    ×