search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 polls"

    மத்தியில் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று நிர்மலா சீதாராமன் பேசினார். #NirmalaSitharaman
    ஐதராபாத்:

    ஐதராபாத்தில், பா.ஜனதா ஏற்பாட்டில், முன்னாள் ராணுவத்தினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    நாட்டின் பாதுகாப்புக்கும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது அவசியம். அவர் மீண்டும் ஆட்சி அமைப்பது நிச்சயம்.

    பிரதமர் மோடி, தனது குடும்பத்துக்காக உழைக்கவில்லை. நாட்டுக்காக உழைக்கிறார். அதனால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்காக, தெலுங்கானா மக்கள், பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

    முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக மத்திய அரசு எவ்வளவோ திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த தேசிய போர் நினைவுச்சின்னம், இந்த ஆட்சியில் பணி முடிந்து திறக்கப்பட்டது.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான விமானப்படையின் தாக்குதலை ஒட்டுமொத்த நாடும் பாராட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், சிலர் அதற்கு ஆதாரம் கேட்பது வெட்கக்கேடு.

    இவ்வாறு அவர் கூறினார்.
    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர் தெரிவித்தார். #OmMathur #BJP
    ஜெய்ப்பூர்:

    பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படாத ஒரு நகரம் கூட கிடையாது. நாடு, தர்மசத்திரம் ஆக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஆகவே, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

    இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தொடங்கிய இந்த திட்டத்தை நிறைவேற்ற முந்தைய காங்கிரஸ் அரசுக்கு தைரியம் இல்லை. இந்த விஷயத்தில், ராகுல் காந்தி தனது முன்னோர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #OmMathur #BJP #tamilnews 
    நாடாளுமன்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடப்போவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் கூறினார். #MohammadAzharuddin #IndianCricketCaptain
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பின்னர் 2014-ம் ஆண்டு தேர்தலில் ராஜஸ்தானின் டோங்-சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலத்தின் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அசாருதீன் தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    செகந்திராபாத் தொகுதி மக்களுக்கு பணி செய்ய விரும்புகிறேன். இந்த தொகுதியில் நான் கடினமாக உழைத்து வருகிறேன். இங்குள்ள ஏராளமான கிராமங்களுக்கு சென்று விவசாயிகள் மற்றும் பிற மக்களிடம் பேசினேன். அப்போது அவர்கள், தங்கள் தொகுதியில் நான் போட்டியிடுவதை வரவேற்றனர்.

    இந்த தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி தலைமையிடமும், மாநில பொறுப்பாளரிடமும் எனது விருப்பத்தை தெரிவித்துள்ளேன். நான் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவதையே கட்சியும் விரும்புவதாக நினைக்கிறேன். எனினும் இங்கு நான் கேப்டன் இல்லை. இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது கட்சிதான்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த முறை போட்டியிட்ட போதும் வெற்றிக்காக கடுமையாக உழைத்தேன். ஆனால் எப்போதும் உங்களால் பாதுகாப்பாக விளையாட முடியாது. எப்போதும் பாதுகாப்பான விளையாட்டை விரும்பும் நபர் நான் இல்லை.

    இவ்வாறு அசாருதீன் கூறினார்.

    முன்னதாக, தெலுங்கானாவில் இருந்து பாராளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தலில் அசாருதீன் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநிலப்பிரிவு அவருக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.  #MohammadAzharuddin #IndianCricketCaptain #tamilnews 
    ×