search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alwarpet"

    • ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முன்புறம் குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய் பதிக்கும் பணி நடைபெற உள்ளது.
    • மியூசிக் அகாடமியில் இருந்து டி.டி.கே. சாலை,எல்டாம்ஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம்.

    சென்னை பெருநகர காவல்துறையின் போக்கு வரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முன்புறம் குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய் பதிக்கும் பணி நடைபெற உள்ளது.

    இதையொட்டி, அந்தப் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 3 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இதன்படி, டி.டி.கே. சாலையில் இருந்து மியூசிக் அகாடமி நோக்கி செல்லும் வாகனங்கள் ஆழ்வார்பேட்டை போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முரேஸ் கேட் சாலையில் சென்று வலதுபுறம் திரும்பி சேஷாத்ரி சாலை, கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக கதீட்ரல் சந்திப்பை அடையலாம்.

    அங்கிருந்து வாகனங்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லலாம். மியூசிக் அகாடமியில் இருந்து டி.டி.கே. சாலை,எல்டாம்ஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆழ்வார்பேட்டையில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest #ATMrobbery

    சென்னை:

    ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோட்டில் கனரா வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை. நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைக்க முயன்றனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே கொள்ளை கும்பல் தப்பிச் செல்ல முயன்றது.

    அவர்களில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் அமைந்தகரையை சேர்ந்த நந்தகுமார், வேலூரை சேர்ந்த குமார் என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பிகள், ராடுகள் கைப்பற்றப்பட்டன.

    சரியான நேரத்தில் போலீசார் வந்ததால் ஏ.டி.எம். கொள்ளை தடுக்கப்பட்டது. இதனால் அதிலிருந்த பல லட்சம் பணம் தப்பியது.

    பிடிபட்ட 2 பேரும் வேறு எந்த கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னை ராமாபுரத்தில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் கொள்ளையர்கள் சிக்கவில்லை. இந்த கொள்ளை முயற்சியில் பிடிபட்ட 2 பேருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். #arrest #ATMrobbery

    ×