search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் நாளை போக்குவரத்து மாற்றம்
    X

    வேலூரில் நாளை போக்குவரத்து மாற்றம்

    • மயான கொள்ளை திருவிழாவை முனனிட்டு நடவடிக்கை
    • பழைய பாலாற்று பாலம் வழியாக மட்டுமே வேலூர்-காட்பாடி இடையிலான போக்குவரத்து நடைபெறும்

    வேலூர்:

    வேலூரில் மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி நாளை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை புதிய பாலாறு பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. பழைய பாலாறு பாலம் வழியாக வாகனங்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் மயானக் கொள்ளை திருவிழா நாளை (19-ம் தேதி) கொண்டா டப்படவுள்ளது. இதில், வேலூர் பாலாற்றங்கரை மயானப் பகுதியில் நடைபெறும் விழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்வார்கள்.

    பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்ப டவுள்ளனர். விழாவை யொட்டி, வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக பாலாற்றங்கரைக்கு எடுத்து செல்வார்கள். ஊர்வ லத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பல்வேறு சாமி வேடமிட்டு வருவார்கள்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள பாலாற்றங்கரை பகுதியில் உள்ள மயானப்பகுதியை சீர் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றன. அங்கு பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், பாதுகாப்பு பணிகள் தொடர்பாக வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மயானக்கொள்ளை விழா நடைபெறும் நாளில் (19-ம் தேதி) பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை புதிய பாலாற்று பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

    பழைய பாலாற்று பாலம் வழியாக மட்டுமே வேலூர்-காட்பாடி இடையிலான போக்குவரத்து நடைபெறும். மேலும், ஊர்வலம் தடையில்லாமல் நடைபெறுவதற்காக மின் நிறுத்தம் செய்யப்படும். 2 போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் தற்காலிகமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சாமி ஊர்வலத்தில் டி.ஜே ஒலிபரப்புக்கு அனுமதியில்லை. அதேபோல், எந்த இடத்தி லும் மயானக்கொள்ளை தொடர்பான டிஜிட்டல் பேனர்கள் வைக்க அனுமதியில்லை.

    பொதுமக்கள் வசதிக்காக பாலாற்றில் 100 போகஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு 2 கண்காணிப்பு கோபுரங்க ளில் இருந்தபடி கண்கா ணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    பொதுமக்களுக்காக 2 இடங்களில் தண்ணீர் தொட்டி வைக்கப்படும். புதிய பஸ் நிலையத்துக்கு கிரீன் சர்க்கிள், செல்லியம்மன் கோவில் நுழைவு பாதை வழியாக வந்து செல்ல வேண்டும். காட்பாடி வழியாக வந்து செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×