search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரத்தான் ஓட்டம்"

    • மானாமதுரையில் மாரத்தான் ஓட்டம் நடந்தது.
    • மானாமதுரை அருகேயுள்ள பீசர்பட்டிணம் வரை 5.5 கி.மீ ஓட்ட தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இங்குள்ள ஹார்ட்புல்னெஸ் தியான மையம் சார்பில் நடத்தப்பட்ட பசுமைப்புரட்சி மாரத்தான் ஓட்டத்தை மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோட்டாட்சியர் சுகிதா, நகர்மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாரத்தான் ஓட்டத்தில் மாணவ, மாணவிகள், பெரியவர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். மானாமதுரை அருகேயுள்ள பீசர்பட்டிணம் வரை 5.5 கி.மீ ஓட்ட தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் சுரேந்தர் முதலிடத்தையும், அய்யனார் 2-ம் இடத்தையும், ஹரிஷ் 3-ம் இடத்தையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் ஹரிணி முதலிடத்தையும், கோபிகா 2-ம் இடத்தையும், வர்ஷா 3-ம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சுழற்கேடயங்கள், பதக்கங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு சுவைமிகு உணவும், மரகன்றுகளும் வழங்கப்பட்டது.

    • மேயர் ஆர்.பிரியா சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    சென்னை:

    சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தினை மேயர் ஆர்.பிரியா இன்று சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர், இந்த மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஆர்.பிரியா பரிசுகளை வழங்கினார். இதில், ஆண்கள் பிரிவில் முதலிடம் சச்சின் பிரிய தர்ஷன், இடண்டாமிடம் தட்சிணாமூர்த்தி, மூன்றா மிடம் ஜோஷ்வா, பெண்கள் பிரிவில் முதலிடம் செல்வி லாவன்யா, இரண்டாமிடம் புனிதா, மூன்றா மிடம் செல்வி ஜெகதீஸ்வரி ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    மேலும், மாணவர்களில் கோபிநாத், கிஷோர் குமார், ஹரிஷ், ஹரிபாலன், மாணவிகளில் அபிநயா, பாபி ஹோலா, நிஷா ஆகியோருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த ரெட்ரன் மாரத்தானில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றிய அடிப்படை அறிவு அதிகப்படுத்துதல், போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிர்த்தல், இளைஞர்களுக்கிடையே பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பாலியல் நடத்தையை ஊக்குவித்தல், எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் பால்வினைத் தொற்று தொடர்பான சேவைகளை ஊக்குவித்தல், காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குதல், தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவித்தல் போன்றவையாகும். இந்நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்

    வேலூர்:

    வேலூரில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டும் எய்ட்ஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் இன்று நடந்தது.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்த னியாக நடத்தப்பட்டது. இதில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாணவர்கள் கிரீன் சர்கிள், மீன் மார்கெட், கோட்டை சுற்றுசாலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று நேதாஜி மைதானத்தில் முடித்தனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி உள்ளிட்டோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடந்தது
    • எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையின் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    காலை கிரிவலப் பாதை அண்ணா ஆர்ச் முதல் காஞ்சி சாலையில் உள்ள அபய மண்டபம் வரை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இதனை திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களை நினைவு பரிசாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வழங்கி கவுரவித்தார்.

    முன்னதாக போதைக்கு அடிமை ஆகாமல் இருப்பது குறித்தும், அதுக்கு அடிமையானவர்களை போதையில் இருந்து மீட்டெடுக்கும் வகையிலும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • 10 கி.மீ., 5 கி.மீ மற்றும் 5 கிலோ மீட்டர் நடைபயணம், மூன்று சுற்றுகளாக நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 கி.மீ., 5 கி.மீ மற்றும் 5 கிலோ மீட்டர் நடைபயணம், மூன்று சுற்றுகளாக நடைபெற்றது.

    இதில் தொழிலாளர்கள், மருத்துவர்கள், நர்சுகள், சிறுவர், சிறுமியர், பெண்கள், மாணவ மாணவிகள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். பி.எம்.சி.டெக். கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.குமார் கொடியசைத்து, மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    .10 கி.மீ. தூரத்தை கர்நாடக மாநிலம் சந்தாபுரம் பகுதியை சேர்ந்த நஞ்சுண்டப்பா (36) என்பவரும், 5 கி.மீ தூரத்தை ஓசூரை சேர்ந்த ஹரிஷ் என்ற மாணவரும் முதலாவது இடத்தில் வந்தனர். இவர்களுக்கு முதல் பரிசு தொகையான தலா 6,000- ரூபாய் மற்றும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    • இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு நடந்தது
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் வேலூர் கோட்டை அருகிலிருந்து வேலூர் மக்கான் சிக்னலில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள், பணியாளர்கள் ஜுனியர் ரெட்கிராஸ் மாணவர்கள், பொதுமக்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம், ைசக்கிள் போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதில் வேலூர் சரக டி.ஐஜி முத்துசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம், எஸ்.பி. ராஜேஷ் கண்ணா, பல்க்கலைகழக பதிவாளர் விஜயராகவன், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் மாரத்தான் போட்டி வேலூரில் துவங்கி காட்பாடி பிரம்மபுரத்தில் நிறைவு பெற்றது.

    சைக்கிள் போட்டி வேலூரில் தொடங்கி சேர்க்காட்டில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் நிறைவுபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும்.
    • பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஓல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42 கிமீ, 32 கிமீ, 21 கிமீ மற்றும் 10 கிமீ) மாரத்தான் ஓட்டம் நாளை (8-ந்தேதி) நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணி முதல் நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கப்பட்டு காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே.சாலை, இ.சி.ஆர். வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை சென்றடையும்.

    இந்நிகழ்ச்சி தொடர்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    * அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

    * போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை சாலைக்கு வழியாக திருப்பி விடப்பட்டு வாலாஜா பாயின்ட் அண்ணாசாலையில் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹைரோடு, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * மத்திய கைலாசிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது, அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஓல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

    * மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்.எல். பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாரத்தான் ஓட்டம் காரணமாக நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் அறிவித்துள்ளார்.

    சோழிங்கநல்லூர் சந்திப்பிலிருந்து, சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் செம்மொழி சாலையாக செல்ல வேண்டும்.

    அதேபோல், மேட்டுக்குப்பம் ராஜ் நகர் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜீவ்காந்தி சாலையில் வலது புறமாக செல்ல வேண்டும். மேலும், மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும், வேளச்சேரி பிரதான சாலை பள்ளிக்கரணை வழியாக செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்
    • கீரமங்கலத்தில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 21 கி.மீ. தொலைவிளான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கீரமங்கலம் சிவன் கோவில் அருகே தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார். அங்கிருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், நகரம், குளமங்கலம் வழியாக மீண்டும் கீரமங்கலத்தை அடைந்தது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 8 வயதுக்கும் மேற்பட்ட 400 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • 1000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் டாக்டர் அப்துல்கலாம் 91-வது பிறந்தநாளை முன்னிட்டும், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அப்துல் கலாம் கனவு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    இந்த மாரத்தான் போட்டியை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

    மாரத்தான் போட்டியானது 11 மற்றும் 21 கிலோமீட்டர் தூரம் ஆகிய இரு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 1000த்திற்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    இந்த மாரத்தான் போட்டியானது வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் தொடங்கிய அம்மூர், மாந்தாங்கல் முத்துக்கடை ஆகிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், டி.எஸ்.பி பிரபு, ரோட்டரி ஆளுநர் பழனி, மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், வன்னிவேடு ஊராட்சிமன்ற தலைவர் கற்பகராணி சக்திவேல், வாலாஜா ஸ்போட்ஸ் கிளப் தலைவர் பாலாஜி, அப்துல் கரீம் மற்றும் கிளப் நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    ×