என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Marathon"
- 5ம் தேதி அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
- மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
சென்னையில் வரும் 5ம் தேதி நடைபெற இருக்கும் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 5.1.2025(ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து, அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயணத்தை வழங்குவதற்காக, மெட்ரோ ரெயில் சேவைகள், வருகின்ற 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும்.
மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.
மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் மராத்தான் பந்தயம் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான 7-வது சென்னை மராத்தான் பந்தயம் ஜனவரி 6-ந்தேதி நடக்கிறது. ஸ்கெச்சர்ஸ் பெர்பாமன்ஸ் நிறுவனம் இந்த பந்தயத்துக்கு முதன்மை ஸ்பான்சராக இருக்கிறது.
முழு மராத்தான் (42.195 கிலோ மீட்டர்), அரை மராத்தான் (32.186 கிலோ மீட்டர்). 10 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது. புதிதாக பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கிலோ மீட்டர்) சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.25 ஆயிரம் ஆகும்.
முழு மராத்தான் பந்தயம் பெர்பெக்ட் 20 மைலர் ஆகிய போட்டிகள் அதிகாலை 4 மணிக்கு நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்குகிறது. மினி மராத்தான் 4.30 மணிக்கும், 10 கிலோ ஓட்டம் 6 மணிக்கும் தொடங்குகிறது.
மராத்தான் பந்தயத்துக்கான டிஷர்ட் மற்றும் பதக்கத்தை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சென்னையில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தினார். #ChennaiMarathon






