வேலூரில் மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டி

இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு நடந்தது கலெக்டர் தொடங்கி வைத்தார்
வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். 
வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். 
Published on

வேலூர்:

இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் வேலூர் கோட்டை அருகிலிருந்து வேலூர் மக்கான் சிக்னலில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள், பணியாளர்கள் ஜுனியர் ரெட்கிராஸ் மாணவர்கள், பொதுமக்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம், ைசக்கிள் போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

இதில் வேலூர் சரக டி.ஐஜி முத்துசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம், எஸ்.பி. ராஜேஷ் கண்ணா, பல்க்கலைகழக பதிவாளர் விஜயராகவன், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் மாரத்தான் போட்டி வேலூரில் துவங்கி காட்பாடி பிரம்மபுரத்தில் நிறைவு பெற்றது.

சைக்கிள் போட்டி வேலூரில் தொடங்கி சேர்க்காட்டில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் நிறைவுபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com