கீரமங்கலத்தில் மாரத்தான் ஓட்டம்

அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் கீரமங்கலத்தில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது
கீரமங்கலத்தில் மாரத்தான் ஓட்டம்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 21 கி.மீ. தொலைவிளான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கீரமங்கலம் சிவன் கோவில் அருகே தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார். அங்கிருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், நகரம், குளமங்கலம் வழியாக மீண்டும் கீரமங்கலத்தை அடைந்தது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 8 வயதுக்கும் மேற்பட்ட 400 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com