மானாமதுரையில் மாரத்தான் ஓட்டம்

மானாமதுரையில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. மானாமதுரை அருகேயுள்ள பீசர்பட்டிணம் வரை 5.5 கி.மீ ஓட்ட தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மானாமதுரையில் மாரத்தான் ஓட்டம்
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இங்குள்ள ஹார்ட்புல்னெஸ் தியான மையம் சார்பில் நடத்தப்பட்ட பசுமைப்புரட்சி மாரத்தான் ஓட்டத்தை மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோட்டாட்சியர் சுகிதா, நகர்மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாரத்தான் ஓட்டத்தில் மாணவ, மாணவிகள், பெரியவர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். மானாமதுரை அருகேயுள்ள பீசர்பட்டிணம் வரை 5.5 கி.மீ ஓட்ட தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் சுரேந்தர் முதலிடத்தையும், அய்யனார் 2-ம் இடத்தையும், ஹரிஷ் 3-ம் இடத்தையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் ஹரிணி முதலிடத்தையும், கோபிகா 2-ம் இடத்தையும், வர்ஷா 3-ம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சுழற்கேடயங்கள், பதக்கங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு சுவைமிகு உணவும், மரகன்றுகளும் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com