search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tobacco"

    • மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு வைத்து இருந்தார்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் மற்றும் முத்தூர் பகுதியில் வெள்ளகோவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தூர், ஊடையம் ரோட்டில் வெள்ளகோவில், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 36) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு வைத்து இருந்தார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாசவநாயக்கன்பட்டி டாஸ்மாக் மதுபான கடை அருகே அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த கருப்பையன் (49) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    தீவிர நடவடிக்கை

    இதையடுத்து உணவு பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தீவிரமாக கண்காணித்து சீல்வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் புகையிலை பொருட்கள் விற்கப்படும் கடைகளை கண்காணித்து சமீபத்தில் அதிரடி சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 13 கடை உரிமை யாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் சேலம் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ஆட்டையாம்பட்டியில் ஒரு மளிகை கடை, ஓமலூர் அருகே செலவடையில் ஒரு மளிகை கடை, எடப்பாடி, ஜலகண்ட ாபுரம் பிரதான சாலையில் ஒரு மளிகை மற்றும் ஒரு பீடா கடை, பெரியசோரகை மாட்டுக்காரன் வளைவில் 2 பெட்டிக்கடைகள், நங்கவள்ளியில் ஒரு பெட்டிக்கடை உள்பட 13 பெட்டி கடைகளுக்கும் சீல் வைக்கும் நடவடிக்கையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    இன்றும், நாளையும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ள தால் தற்போது அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையடுத்து நாைள மறுநாள் திங்கட் கிழமை முதல் இந்த 13 கடைகளும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரி பேட்டி

    இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் கூறுகையில், கடந்த 2022-2023-ம் ஆண்டில் 33 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் புகையிலை விற்று கடை உரிமையாளர்கள் சிக்கினால் அந்த கடைகள் சீல் வைக்கப்படுவதுடன், கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் 13 கடைகள் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார். 

    • பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • போலீசார் யாசர் அராபத்(39) என்பவரை கைது செய்தனர்

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பெட்டிக்கடையில் இருந்த 17 பொட்டலம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் யாசர் அராபத்(39) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட 89 கிலோ புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது.
    • கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பல்லடம்- பெத்தாம்பாளையம் ரோட்டில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது அந்த வழியே மோட்டர் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 மூட்டைகளுடன் வந்த வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் புகையிலை பொருட்கள் கடத்துவது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். அவர்கள் பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்சா மகன் அக்பர் சேட்(37) பல்லடம் மங்கலம் ரோடு இளங்கோ விதியைச் சேர்ந்த சதாம் புதின் மகன் அசாருதீன்(22) என்பதும் அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட 89 கிலோ புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து 89 கிலோ புகையிலை பொருட்களையும், அதனைக் கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டர் சைக்கிளையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மத்திய சுகாதார அமைச்சகம் 2 மாதம் புகையிலை இல்லாத இளைய தலைமுறை என்ற விழிப்புணர்வை தொடங்கியுள்ளது.
    • புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தால் யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்ற தகவலும் அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புற்றுநோய், நுரையீரல் நோய், இருதயநோய், பக்கவாதம் உட்பட நாள்பட்ட நோய்களுக்கு புகையிலை முக்கிய ஆபத்து காரணியாகும்.

    உலக சுகாதார அமைப்பின் தரவின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சத்து 35 ஆயிரம் பேர் புகையிலையால் இறக்கின்றனர். இதையடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் 2 மாதம் புகையிலை இல்லாத இளைய தலைமுறை என்ற விழிப்புணர்வை தொடங்கியுள்ளது.

    வருகிற 31-ந் தேதியுடன் விழிப்புணர்வு முடிவடைய உள்ளது. இதையொட்டி புதுவை மாநிலத்திலும் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் அனைத்தும் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதிகளாக அரசு அறிவித்துள்ளது.

    இதன்படி அரசு அலுவலகங்களில் புகையிலை பொருட்களை பயன்படுத்தவும், கொண்டு செல்லவும் அனுமதியில்லை. இதுகுறித்த அறிவிப்பு பலகை நுழைவுவாயில், காத்திருப்பு இடங்களில் வைக்கப்படும். புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தால் யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்ற தகவலும் அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.

    • 160 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வீட்டில் பதுக்கிய வாலிபரை கைது செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருச்சுழி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையி லான தனிப்படை போலீசார் தமிழ்பாடி பகுதியிலுள்ள ஒத்தவீடு பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.அப்போது ஆறுமுகம் (வயது34) என்பவரது வீட்டில் சோதனை நடத்தி னர். அங்கு 160 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஆறுமு கத்தை கைது செய்தனர். இதையடுத்து திருச்சுழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 91 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செல்லூர் வணிக வளாகம் ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வ விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அங்கிருந்து 91 கிலோ புகையிலை பொருட்கள், 4 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள், ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 160 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய ஜலில் இப்ராகிம்(61), எஸ்.ஆலங்குளம் அலமேலு நகர் ராஜேந்திரன் மகன் பாண்டியராஜன்(27), ஒத்தக்கடை அண்ணாமலை நகர் மாரியப்பன் மகன் கணேசன்(39), செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு கருப்புசாமி மகன் முருகேசன் (58), செல்லூர் பூந்தமல்லி மாரியப்பன் மகன் தினேஷ் குமார் (26), மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி 5-வது குறுக்கு தெரு திருச்சிற்றம்பலம் மகன் அருண்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

    • திருமங்கலம் அருகே வேனுடன் 131 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேர் தப்பி ஓடினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சோளம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு ஒரு சரக்கு வேன் வந்தது. அதில் 3 ேபர் இருந்தனர். அந்த வேனை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் வேனில் சோதனையிட்டனர். அதில் ஏராளமான பண்டல்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது மொத்தம் 131 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இந்தநிலையில் வேனில் வந்த 2 பேர் தப்பியோடினர். ஒரு வாலிபர் போலீசிடம் சிக்கினார்.

    அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர் திருச்சுழி அருகே உள்ள கட்டத்தான்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(29) என்பதும், தப்பியோடியவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆவினிப் பட்டியை சேர்ந்த கோவிந்த ராஜ், சானார்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி என்பது தெரியவந்தது. புகையிலை பொருட்களை வேனுடன் பறிமுதல் செய்த வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 ேபரை தேடிவருகின்றனர்.

    • புகையிலை பொருள், மது விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி மெயின்ேராட்டில் மல்லி போலீசார் ேராந்து சென்றனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். விசாரணையில் அவர் கிருஷ்ணன் கோவில் தெருைவ சேர்ந்த ஜோதிராஜ்(30) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 500 மற்றும் 168 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    சிவகாசி இரட்டை பாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தட்டலைப்பட்டி விலக்கு அருகே 2 வாலி பர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தனர். போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது ரூ.40 ஆயிரம் மதிப்புடைய 19 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது.

    மேலும் விசாரணை யில் அவர்கள் தாயில் பட்டி யைச் சேர்ந்த கார்த்தீ ஸ்வரன் (24), வரதராஜ் (27) என்பது தெரிய வந்தது. அவர்களி டமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    • புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாமிநாதபுரத்தை சேர்ந்த மிக்கேல்ராஜ்(41). இவர் ஆலங்குளம் முக்கு ரோட்டில் பெட்டி கடை வைத்துள்ளார். ரோந்து போலீசார் இவரது கடையில் சோதனையிட்டபோது 2½ கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது.

    அதனை பறிமுதல் செய்த ஆலங்குளம் போலீசார் மிக்கேல்ராஜை கைது செய்தனர். சிவகாசி மாரிமுத்து தெருவை சேர்ந்தவர் சிவா. இவர் அந்த பகுதியில் உள்ள தியேட்டரின் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    போலீசார் ரோந்து சென்று சோதனையிட்டபோது 150 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருதகுளத்தில் உள்ள நெல்லை பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெல்லை மாவட்டம் மருதகுளத்தில் உள்ள நெல்லை பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி புகையிலையின் தீமைகள் பற்றி எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சுகாதார அலுவலர் தமிழ் செல்வன், கலந்து கொண்டு பேசினார்.  நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக புகையிலை அலுவலர் டாக்டர் சுபலெட்சுமி புகையிலை  மற்றும் போதை பொருள் உபயோகத்தால் ஏற்படும் தீமைகள் பற்றியும், வாழ்க்கையில் இதனால் ஏற்படும் சீர்கேடுகளை பற்றியும், பல உதாரணங்களோடு விரிவாக எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில்  கல்லூரியின் அனைத்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் சமூக ஆர்வலர் டேவிட் பொன்ராஜ், புகையிலை மற்றும் போதை பொருள் பற்றிய உறுதிமொழியை மாணவர்கள் மத்தியில் வாசித்தார். கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் முஜீப் முகம்மது முஸ்தபா வரவேற்றார்.

    கல்லூரியின் விளையாட்டு இயக்குநர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார். மாவட்ட சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன் , சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    புகையிலை பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த மே 23-ஆம் தேதி நிறைவடைந்தது.
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். குட்கா பொருட்கள் குறைந்த விலையில் விற்பதும் இளைஞர்கள் அதை அதிகம் பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.  

    இந்நிலையில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவும், அந்த பொருட்களால் உடலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததாலும், புகையிலை பொருட்களுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தடை விதித்து வருகிறது.

    இந்த தடை கடந்த மே 23-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த தடையை மேலும் ஒராண்டுக்கு நீடித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களை தயாரிக்கவும், விநியோகிக்கவும், பாதுகாக்கவும் மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
    ×