என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
வெள்ளகோவில் - முத்தூரில் புகையிலை-மது விற்ற 2பேர் கைது
- மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு வைத்து இருந்தார்.
- போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் மற்றும் முத்தூர் பகுதியில் வெள்ளகோவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தூர், ஊடையம் ரோட்டில் வெள்ளகோவில், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 36) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு வைத்து இருந்தார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாசவநாயக்கன்பட்டி டாஸ்மாக் மதுபான கடை அருகே அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த கருப்பையன் (49) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






