search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை பொருட்கள்"

    • 91 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செல்லூர் வணிக வளாகம் ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வ விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அங்கிருந்து 91 கிலோ புகையிலை பொருட்கள், 4 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள், ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 160 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய ஜலில் இப்ராகிம்(61), எஸ்.ஆலங்குளம் அலமேலு நகர் ராஜேந்திரன் மகன் பாண்டியராஜன்(27), ஒத்தக்கடை அண்ணாமலை நகர் மாரியப்பன் மகன் கணேசன்(39), செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு கருப்புசாமி மகன் முருகேசன் (58), செல்லூர் பூந்தமல்லி மாரியப்பன் மகன் தினேஷ் குமார் (26), மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி 5-வது குறுக்கு தெரு திருச்சிற்றம்பலம் மகன் அருண்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

    • துறையூர் அருகே பெரம்பலூர் சாலை பகுதியில் துறையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் பின் தொடர்வதை கண்டு கடத்தல் புள்ளிகள் மின்னல் வேகத்தில் காரை ஓட்டி சென்றனர்.

    திருச்சி

    பெங்களூருவில் இருந்து காரில் கடத்த முயன்ற ரூ.2லட்சம் மதிப்பிலான குட்காவை மண்ணச்சநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    துறையூர் அருகே பெரம்பலூர் சாலை பகுதியில் துறையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்தப்போது, வாகனம் நிற்காமல் சென்றது. இதில் சந்தேகமடைந்த துறையூர் போலீசார் வாகனத்தை பிடிக்க துரத்தினர். போலீசார் பின் தொடர்வதை கண்டு கடத்தல் புள்ளிகள் மின்னல் வேகத்தில் காரை ஓட்டி சென்றனர். பின்னர் போலீசார் நெருங்கியதால் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

    இதையடுத்து காரில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 50 மூட்டை குட்கா இருந்தது தெரியவநதது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். தொடர்ந்து குட்கா மற்றும் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த குட்கா பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்டது உறுதியானது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லாரியின் உள்ளே துணி மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதாகவும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து, அங்கிருந்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார்
    • லாரியின் உள்ளே இருந்த துணி மூட்டைகளை அகற்றிய போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 டன் எடையும், சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பது வந்தது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கும்பகோணம் -விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் தா பழூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சிலால் கிராமத்தில் வாகன தணிக்கை ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரில் இருந்து கும்பகோணம் நோக்கி லாரி ஒன்று வந்தது. உடனே போலீசார் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    லாரியின் உள்ளே துணி மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதாகவும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து, அங்கிருந்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியின் உள்ளே இருந்த துணி மூட்டைகளை அகற்றிய போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 டன் எடையும், சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பது வந்தது. பின்னர் கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது பற்றி தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×