search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN government"

    • போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய தாழ்தள மின்சார பஸ்கள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
    • பங்கு பெறுவதற்கு தகுதியான ஆவணங்களுடன் ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறைக்கு 100 மின்சார ஏ.சி. தாழ்தள பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    கால நிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நகர்ப்புறங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய தாழ்தள மின்சார பஸ்கள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    அதை செயல்படுத்தும் விதமாக இப்போது 100 ஏ.சி. மின்சார பஸ்கள் வாங்குவதற்கு அரசு டெண்டர் கோரி உள்ளது. மின்சார பஸ்களுடன் சார்ஜிங் தீர்வு மற்றும் டிப்போ மேம்பாடு பணிகளுக்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரிக் ஏ.சி. பஸ்கள் வழங்கும் நிறுவனம், சார்ஜிங் மையம் மற்றும் சர்வீஸ் மையத்தையும் அமைத்து தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதில் பங்கு பெறுவதற்கு தகுதியான ஆவணங்களுடன் ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

    • தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    • கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார்.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக தெரிகிறது. தனது ராஜினாமா முடிவை முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டார். இதுவரை தனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக சண்முகசுந்தரம் கூறி உள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை, கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

    • 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
    • பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான அவர் கடந்த 2022-ம் ஆண்டு பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.

    பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான அவர், கடந்த 2022-ம் ஆண்டு பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

    முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொடர்ந்து பணியில் நீடித்து வந்த சண்முகசுந்தரம் ராஜினாமா கடிதத்தை தற்போது அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.

    புதிய தலைமை வழக்கறிஞரை அரசு விரைவில் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்தது.
    • ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு சேர்த்து அனுப்பப்பட்டது. இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் பல குடும்பத் தலைவிகள் தங்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

    அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்தது.

    இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு வரும் 10-ந்தேதி ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    11.85 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்திருந்த நிலையில் 2 லட்சம் பேருக்கு இம்மாதமே உதவித்தொகை கிடைக்கும்.

    மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளது. ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    வரும் 10-ந்தேதி முதல் 1.15 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.
    • போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.

    பொங்கலுக்கு முன்பாக இந்த ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. 

    அதன் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மதியம் பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல குடும்பத் தலைவிகள் தங்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்துள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு சேர்த்து அனுப்பப்பட்டது. இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் பல குடும்பத் தலைவிகள் தங்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்துள்ளது. 8 சிறப்பு தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில் மகளிர் உரிமைத்திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாதமே உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • மேல்முறையீட்டு மனு மீது நடவடிக்கை எடுக்கவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் 2-ம் கட்டமாக கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு சேர்த்து அனுப்பப்பட்டது. இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் மேலும் பல குடும்பத் தலைவிகள் தங்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்து வருகிறது.

    அந்த வகையில் 8 சிறப்பு தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    • 7 பேர் டி.ஐ.ஜி. பதவியில் இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
    • 10 பேர் போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    சென்னை:

    1999-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆனந்த குமார் சோமானி, தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஐ.ஜி. பதவியில் இருந்து கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜெயஸ்ரீ (2004 பிரிவு), சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகணன் (2006 பிரிவு) ஆகிய 7 பேர் டி.ஐ.ஜி. பதவியில் இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    ஐ.பி.எஸ். அதிகாரிகள் வெண்மதி (2009 பிரிவு), அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார் தாகூர், மகேஷ்குமார், தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, ராமர் (2010 பிரிவு) ஆகிய 10 பேரும் போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் திருநாவுக்கரசு முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.

    இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்தார்.

    • பொதுமக்களிடம் இருந்து 1579 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
    • பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.

    கோவை:

    தமிழகத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காணும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கான தொடக்க விழா கோவையில் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி எஸ்.என்.ஆர் கல்லூரி, கருமத்தம் பட்டி கொங்கு வேளாளர் திருமண மண்டபம், பேரூர் ராமலிங்கஅடிகளார் அரங்கம், மலுமிச்சம்பட்டி திவ்யம் மகால் ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது பொதுமக்கள் திரண்டுவந்து கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு சென்றனர். அந்த வகையில் மட்டும் 1026 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதுதவிர மற்ற அரசுத்துறைகள் தொடர்பான 1284 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று உள்ளன. அவை தற்போது முதல்வரின் முகவரி துறையின்கீழ் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

    கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் வாயிலாக கடந்த 18-ந்தேதி மட்டும் 2310 கோரிக்கை மனுக்கள் குவிந்து உள்ளன. அவை உடனடியாக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

    இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் மேற்கு மண்டலம் வடவள்ளி காமாட்சி அம்மன் கோவில் திருமண மண்டபம், வடக்கு மண்டலம் சரவணம்பட்டி சமுதாயக்கூடம், மத்திய மண்டலம் செம்பட்டி காலனி மாநகராட்சி பள்ளி, கிழக்கு மண்டலம் சிங்காநல்லூர் திருமண மண்டபம், பொள்ளாச்சி நகராட்சி மகால், காரமடை மேட்டுப்பாளையம் சிவன்புரம் காலனி கொங்கு மகால் மற்றும் அன்னூர், கிணத்துக்கடவு, ஆனைமலை டவுன் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    இதில் பொதுமக்களிடம் இருந்து 1579 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இதுதவிர முதல்வ ரின் முகவரி துறைக்கு வந்திருந்த 816 மனுக்களையும் சேர்த்து மொத்தம் 2396 கோரிக்கை மனுக்கள் வந்து சேர்ந்து உள்ளன.

    கோவை மாவட்டத்தில் கடந்த 18, 19-ந்தேதிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களில் மட்டும், பொதுமக்களிடம் இருந்து 4705 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று உள்ளன.

    இதுதொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 18-ந்தேதி மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதன்மூலம் 2310 கோரிக்கை மனுக்கள் கிடைக்கப்பெற்று உள்ளன. அதேபோல நேற்று நடந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு 2395 மனுக்களை அளித்து உள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களின் வாயி =லாக 4705 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.

    இதுதவிர் சிறப்பு முகாம்கள் நடக்கும் பகுதியில் இ-சேவை மையம் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு 50 சதவீதம் கட்டணத்தில் தேவையான ஆவணங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு 13 அரசு துறைகளுடன் தொடர்புடைய 52 விதமான சேவைகளை உடனடியாக பெற இயலும். மேலும் பொது மக்கள் அளிக்கும் மனுக்களில் தகுதியான விண்ணப்பங்களுக்கு 30 நாட்களில் தீர்வு பெற்றுதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதிவரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது தண்ணீர் வடிந்து வருவதால் மக்கள் மின்சார இணைப்பு, நெட்வொர்க் வசதியை பெற்றுள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்து பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கன மழையால் வெள்ளை பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது தண்ணீர் வடிந்து வருவதால் மக்கள் மின்சார இணைப்பு, நெட்வொர்க் வசதியை பெற்றுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் மாவட்ட கலெக்டர்கள் மூலமாக செய்யப்பட்டு வருகின்றன. தன்னார்வ நிறுவனங்களும், மக்களுக்கு உதவி செய்து வருகின்றன.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

    இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் கட்டணம் இல்லாமல் நிவாரணப் பொருட்களை அனுப்ப அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தலின்படி நெல்லை, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்களுக்கு நிவாரண பொருட்கள் கட்டணமின்றி இலவசமாக அனுப்பப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

    தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்கள் அனுப்ப இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தூத்துக்குடி மாவட்டத்துக்கு செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
    • நிவாரண பொருட்களை வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் அலுவலர்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    கனமழை, வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண பொருட்களை வழங்க பலர் முன்வந்துள்ளனர். இந்த பணியை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூலம் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்படுகி றார். அவரது செல்போன் எண் 7397770020 ஆகும். பாதுகாப்பு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள்விளையாட்டரங்கம் செயல்படும்.

    தூத்துக்குடியில் உள்ள இந்த கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்களாக கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா (செல்போன் எண்-8973743830), தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம் (9943744803), கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா (9445008155) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் இந்த பணிகளை ஒருங்கிணைக்க நெல்லை மாவட்ட நகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் (9442218000) நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை உதவி கலெக்டர் (பயிற்சி) கிஷன் குமார் (9123575120), நெல்லை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ரேவதி (9940440659) ஆகியோர் இந்த பணியை ஒருங்கிணைப்பார்கள்.

    இந்த பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா செயல்படுவார். நிவாரண பொருட்களை வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்காணும் அலுவலர்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை அனுபவத்தை வைத்து தென் மாவட்டங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்த திட்டத்தின் தொடக்க விழா கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

    * மழை வெள்ள பாதிப்பில் இருந்து தென் மாவட்ட மக்களை காப்போம்.

    * மீட்பு பணி தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன்.

    * தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுமையாக குவிக்கப்பட்டுள்ளது.

    * தற்போது தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    * சென்னை அனுபவத்தை வைத்து தென் மாவட்டங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * அரசின் சேவைகளை எளிதில் மக்களிடம் கொண்டு செல்வதற்கு மக்களுடன் முதல்வர் திட்டம் உதவியாக இருக்கும்.

    * முகாம் அமைத்து மனுக்கள் பெறப்பட்டு 30 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மக்களுடன் முதல்வர் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும்.

    * மக்கள் அடிக்கடி அணுகும் துறைகளாக 13 துறைகள் கண்டறியப்பட்டு அதன் வாயிலாக தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×