search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பணிகள்"

    • நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இடது புற பகுதியில், போக்குவரத்து தடைபடாமல் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தென்காசி செல்லும் இடதுபக்க பகுதியில் இரு வழிக்கான பாலம் முழுமையாக தொடங்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை திட்டமானது ரூ. 430.71 கோடிகள் மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப்ப டுகிறது.

    ரெயில்வே மேம்பாலம்

    போக்குவரத்து அதிகம் நெருக்கடி கொண்ட பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் மேம்பால பணிகள் தொடங்கி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் 900 மீட்டர் நீளமும் 20மீட்டர் அகலமும் கொண்டது. இடது புறம் 22 பில்லர்களும், வலது புறம் 22 பில்லர்களும் சேர்ந்து மொத்தம் 44 பில்லர்களுடன் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

    தற்போது நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இடது புற பகுதியில், போக்குவரத்து தடை படாமல் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தண்டவாளத்திற்கு கிழக்கு பகுதியில் 13 பில்லர்களும், மேற்கு பகுதியில் 9 பில்லர்களும் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.

    மாநில நெடுஞ்சாலைத்துறை

    தென்காசி செல்லும் இடதுபக்க பகுதியில் இரு வழிக்கான பாலம் முழுமை யாக தொடங்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. தூண்களுக்கான அடித்தளம் அமைத்து, வட்ட வடிவிலான பில்லர் கான்கிரீட் மீது பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

    பொதுவாக தண்ட வாளத்திற்கு மேலே அமைய இருக்கும் பால பகுதிகளை ரெயில்வேதுறை செய்து வந்த நிலையில் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையே செய்து வருகிறது.

    வரைபடம்

    இது குறித்து குறும்பலா பேரியை சார்ந்த ராஜசேகர பாண்டியன் என்பவர் எழுத்து பூர்வமாக கேட்ட கேள்விக்கு நெடுஞ்சாலைதுறை அளித்த பதிலில், "பாவூர்சத்திரத்தில் அமைக்கப்படும் ரெயில்வே மேம்பாலத்தின் ரெயில்வே பகுதிக்கான வரைபடம், மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் ரெயில்வே பகுதியில் வேலை தொடங்கப்படும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது."

    இது குறித்து ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:- ரெயில்வே துறையின் அலட்சியம் காரணமாக பல்வேறு இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் தண்டவாளத்திற்கு மேற்பகுதியில் அந்தரத்தில் தொங்குகின்றன. பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலத்தை பொறுத்த வரை ரெயில்வே துறைக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் போதிய புரிந்துணர்வு, ஒருங்கி ணைப்பு இல்லை.

    வாகனங்கள் அணிவகுப்பு

    தற்போது ரெயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் ரெயில்வே கேட் அதிக முறை மூடப்படுவதோடு, வாகனங்கள் இருபுறமும் கிலோ மீட்டர் கணக்கில் அணிவகுத்து நிற்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா இதுகுறித்து கூறுகையில், சென்னையில் உள்ள ரெயில்வே முதன்மை பால பொறியாளரிடம், மதுரை ரெயில்வே கோட்ட பொறியாளரிடமும் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால வரைபட அனுமதியை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் வரைபடங்களை வழங்காமலும் போதிய கால அவகாசம் தராததாலும் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாங்கள் கேட்கும் கூடுதல் தகவல்களையும் உடனடியாக வழங்கினால் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்றனர்.

    எனவே தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக ரெயில்வே துறைக்கு பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால வரைபடம் சம்பந்தமான போதுமான தகவல்களையும் கொடுத்து குறித்த நேரத்தில் ஒருங்கி ணைப்பு செய்து பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் சரண் வேலை பார்த்து வந்தார்.
    • ராட்சத பள்ளங்களில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்ந்து வருகிறது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து அம்பை செல்லும் சாலையில் வசித்து வருபவர் தேவதாஸ். இவரது மகன் சரண்(வயது 20). இவர் ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

    தவறி விழுந்து பலி

    நேற்று மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த சரண், மீண்டும் மார்க்கெட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் ஆலங்குளம் ஊர்மடை பகுதியில் சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் சரண் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், சரண் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளம் பஜார் பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் புகார் கூறி வருகின்றனர். ஆலங்குளத்திற்கு மேல்புறம் மலைக்கோவில் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை சாலைப்பணி முடிவடைந்து விட்ட நிலையில் ஊர்மடை பகுதியில் இருந்து தொட்டி யான்குளம் வரையிலான சாலை அப்படியே கிடக்கிறது.

    இந்த சாலையில் ராட்சத பள்ளங்கள் உள்ளது. அதில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்ந்து வருகிறது. தினமும் அந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் சாலையின் இருபுறமும் கடை வைத்திருப்பவர்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமம் அடைகின்றனர் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே காலம் தாழ்த்தாமல் சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விஜய் வசந்த் எம்.பி.,மேயர் மகேஷ் பங்கேற்பு
    • 18 மாதங்களில் ரூ.134 கோடி செலவில் பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    சுதந்திர தினத்தை ஒட்டி நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை மேயர் மகேஷ் ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றை மேயர் மகேஷ் நட்டார். பின்னர் அவர் பேசியதாவது:- நாகர்கோ வில் மாநகராட்சி அலுவலகம் ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். சுதந்திரத்தை பெறுவதற்காக பல தியாகங்கள் இன்னுயிர் நீத்துள்ளார்கள்.

    குமரி மாவட்டத்தை சேர்ந்த தியாகிகளும் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அந்த சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி சிறந்த மாநகராட்சி ஆக விளங்குவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 18 மாதங்களில் ரூ.134 கோடி செலவில் பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரம் பேணி பாதுகாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்சிலதா, என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெட்டூர்ணி மடத்தில் உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய் வசந்த் எம்.பி. கொடி ஏற்றி வைத்தார். மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோவில்கள் அலுவலகத்தில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் துளசிதரன், ராஜேஷ், சுந்தரி மற்றும் அதிகாரிகள் கலந்து

    கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 31-வது வார்டு மேலராமன்புதூர் கீழ தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும், 44-வது வார்டுக்குட்பட்ட கேம்ப் ரோடு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைக்கும் பணியையும்

    மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து எஸ்.எல்.பி. பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற அவர், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் செல்வ குமார், மாமன்ற உறுப்பினர் சோபி, நவீன்குமார், தி.மு.க மீனவரணி மாநில துணைச் செயலாளர் நசரேத் பசலியான், மணி வேல்முரு கன், பகுதி செயலாளர் சேக்மீரான், ஜீவா, வட்ட செயலாளர்கள் துரைசாமி, இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • ஆலங்குளம் பேரூராட்சியில் அமைக்கப்பட்ட சாலையை முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு திறந்து வைத்தார்.
    • புதிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தொடங்கி வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சி 3-வது வார்டில் பேவர் பிளாக் சாலை திறப்பு மற்றும் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

    ஆலங்குளம் பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலையை முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு திறந்து வைத்தார். அப்பகுதியில் பேரூராட்சி பொது நிதி ரூ.7 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் பேரூராட்சி துணைத் தலைவர் ஜாண் ரவி, பேரூராட்சி உறுப்பினர்கள் எஸ்.டி.சாலமோன்ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், ஆரோக்கியமேரி, காங்கிரஸ் நகரத் தலைவர் வில்லியம் தாமஸ், வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் அருணாசலம், மோகன்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தோவாளை தாழக்குடி சாலையில் ரூ.3.87 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் பாலப்பணி
    • அனைத்து பணிகளையும்- விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட நெடுஞ் சாலைத்துறையின் கீழ் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தோவாளை தாழக்குடி சாலையில் ரூ.3.87 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் பாலப்பணிகளும், மருங்கூர் சாலை பகுதியில் நபார்டுதிட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சிறு பாலப்பணிகளும், அழகியபாண்டிபுரம் ஒருங்கிணைந்த உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பணிகளும், சித்திரங்கோடு சுருளோடு சாலை காயக்கரை பகுதியில் மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் பாலப்பணிகளும் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

    மேலும் குளச்சல்- திருவட்டார் சாலை வேர்கிளம்பி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மீட்புப்பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.1.22 கோடி மதிப்பில் நடை பெற்றுவரும் சாலை அகலப்படுத்தும் பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும்- விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை செயற்பொறி யாளர் பாஸ்கரன், அரசு ஒப்பந்ததாரர் கேட்சன், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • 27-வது வார்க்குட்பட்ட வடிவீஸ்வரம் தெருவில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டிலும் கான்கிரீட் தளம்
    • 36-வது வார்டு கே.பி 2-வது குறுக்கு தெருவில் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டிலும் கான்கிரீட் தளம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்க்குட்பட்ட வடிவீஸ்வரம் தெருவில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டிலும், 36-வது வார்டு கே.பி 2-வது குறுக்கு தெருவில் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டிலும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாநகராட்சி உதவி பொறியாளர் சுஜின், மாமன்ற உறுப்பினர்கள் கோபாலசுப்பிரமணியன், ரமேஷ் ஜெயவிக்ரமன், செயற்குழு உறுப்பினர் சதாசிவன், மாநகர துணை செயலாளர் வேல்முருகன், வட்டச் செயலாளர்கள் முருகன், ஜெயகிருஷ்ணன், வழக்கறிஞர் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் சாலை ரூ.2 கோடியே 36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பொறக்குடியிலிருந்து பரமநல்லூர் மேனாங்குடி வரையிலான சாலை 2650 மீட்டர் தொலைவிற்கு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் சாலை ரூ.2 கோடியே 36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளைதிரு மருகல் ஒன்றிய பொறியாளர்கள் கவிதாராணி, செந்தில் ஆகியோர் பார்வையிட்டு சாலை அகலம் மற்றும் உயரம் அரசு அறிவித்த அளவிற்கு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.

    பின்னர் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர்.இந்த ஆய்வின்போது சாலை ஆய்வாளர் விமலா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×