என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா
- விஜய் வசந்த் எம்.பி.,மேயர் மகேஷ் பங்கேற்பு
- 18 மாதங்களில் ரூ.134 கோடி செலவில் பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
நாகர்கோவில் :
சுதந்திர தினத்தை ஒட்டி நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை மேயர் மகேஷ் ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றை மேயர் மகேஷ் நட்டார். பின்னர் அவர் பேசியதாவது:- நாகர்கோ வில் மாநகராட்சி அலுவலகம் ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். சுதந்திரத்தை பெறுவதற்காக பல தியாகங்கள் இன்னுயிர் நீத்துள்ளார்கள்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த தியாகிகளும் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அந்த சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி சிறந்த மாநகராட்சி ஆக விளங்குவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 18 மாதங்களில் ரூ.134 கோடி செலவில் பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரம் பேணி பாதுகாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்சிலதா, என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெட்டூர்ணி மடத்தில் உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய் வசந்த் எம்.பி. கொடி ஏற்றி வைத்தார். மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோவில்கள் அலுவலகத்தில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் துளசிதரன், ராஜேஷ், சுந்தரி மற்றும் அதிகாரிகள் கலந்து
கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.






