search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவில்"

    • நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.
    • நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில், ஏதாவது ஒரு நாகம் கோவிலில் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    ஒருவருக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும், குழந்தை பாக்கியம் இருக்காது. மேலும் சகல செல்வங்களும் படிப்படியாக குறையும் என்கிறார்கள்.

    ஒருவர், நாக சதுர்த்தி தினத்தன்று வயலில் ஏர் இறங்கி உழுதார். அப்போது சில பாம்பு குட்டிகள் ஏரில் சிக்கி இறந்துவிட்டன. கோபம் கொண்ட தாய் நாகம், அந்த குடும்பத்தையே கொன்றது. ஆனால் அவரது ஒரு மகள் மட்டும் தப்பினாள். பக்கத்து கிராமத்தில் வசித்த அவள், தனது வீட்டு சுவரில் நாகத்தின் படம் ஒன்றை வரைந்து அதை பயபக்தியுடன் வணங்கி வந்தாள். இதை கண்ட தாய் நாகம், அவளை தீண்டாமல் மனம் மாறி திரும்பியது. திரும்பும்போது, அந்த பெண்ணிடம், 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டது.

    'நீ தீண்டியதால் இறந்த என் குடும்பத்தினர் மிண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என்று கேட்டாள் அந்த பெண். தாய் நாகம் மனம் இரங்கி, அந்த குடும்பத்தினரை உயிர்பிழைக்கச்செய்தது. மேலும், நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.

    சிறப்புமிக்க அந்த நாக சதுர்த்தி வருடா வருடம் ஜூலை மாதம் வருகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில், ஏதாவது ஒரு நாகம் கோவிலில் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    அவ்வாறு செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். இது வரை இல்லாமல் இருந்த குழந்தை பாக்கியமும் கிட்டும். வாழ்க்கையில் அனைத்துவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும்.

    • மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர்.
    • பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப் படுத்திவிடுவார்கள்.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருப்பர். குறிப்பிட்ட நாளில் இரவு சுமார் 10.30 மணிக்கு மேலே அல்லது ஆண்களும் குழந்தைகளும் உறங்கிய பின்னரோ விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடுவர்.

    மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர். பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர். அந்த கொழுக்கட்டையின் வடிவம் வித்தியாசமானதாக இருக்கும். அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போடமாட்டார்கள்.

    அனைத்தும் தயாரானதும் ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். பிறகு ஒளவையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர்.

    இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே உண்பார்கள். இந்த விரதத்தில் ஆண் குழந்தைகள் உள்பட ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப் படுத்திவிடுவார்கள்.

    இந்த விரதம் ஒவ்வொரு செவ்வாயில் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துவர். இப்படி விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும், குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

    • நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக்கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு.
    • அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை.

    அம்மன் கோவில்களில் முளைப்பாரிக்கு தனியிடம் உண்டு. இதனை முளைப்பாலிகை என்று சொல்வது தான் சரியாகும். பேச்சு வழக்கில் முளைப்பாரி என்றே கூறுகிறோம்.

    நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக்கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு! பெண்கள் இதைச்சுமந்து செல்லும் போது அந்த அழகைக் காணலாம். அதே நேரம் வெறும் அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை.

    முளைப்பாரி எப்படி செழித்து உயரமாக வளர்கிறதோ, அதுபோல குடும்பம் தழைக்கும். பெண்ணுக்கு நல்ல கணவன் அமைவான் என்று சொல்வார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நவதானியப் பாலிகை தெளித்து வளர்த்து, தம்பதிகள் அதை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் இதற்காகத் தான்.

    • ஆடிப்பூரம் ஆண்டாளின் அவதாரத் திருநாள்! பூமாதேவியானவள் ஆண்டாளாக அவதரித்தாள் என்கிறது புராணம்.
    • ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தை மிக்க அற்புதமாக கொண்டாடுகிறார்கள்.

    ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. முன்னோர்கள் ஒரு ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரித்து இருக்கிறார்கள்.

    ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். தை முதல் ஆனிவரை உத்ராயனம். ஒன்று மாரி காலத்தின் ஆரம்பத்தையும் அடுத்தது கோடை காலத்தின் துவக்கத்தையும் காட்டுகின்றன.

    இந்த புண்ணிய காலகட்டங்களில் தீர்த்த ஸ்நானம் மிகவும் விசேஷம். ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் துவக்கமே ஏற்படுகிறது.

    ஆடி மாதம் பண்டிகைகளின் ஆரம்பம்! பூமாதேவி அவதரித்த ஆனந்த் மாதம். அம்மனுக்கு ப்ரீதியான ஆடி மாதம் பண்டிகைகளின் கொண்டாட்டம்.

    ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளியும் செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்! நமக்கு அருள்பாலிக்க அம்மன் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நலமெல்லாம் சொரியும் மங்கல மாதம் தான் இந்த ஆடி மாதம்.

    அதற்கு காரணம் ஆடிப் பூரம்!

    ஆடிப்பூரம் ஆண்டாளின் அவதாரத் திருநாள்! பூமாதேவியானவள் ஆண்டாளாக அவதரித்தாள் என்கிறது புராணம்.

    ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வாரின் பிருந்தாவனத்திலே பிராட்டியார் கோதை அவதரித்தார்கள். 'கோதையா! அவள் கருணையின் கொழுந்து' என்று போற்றி பணிகின்றோம்.

    'சூடிக்கொடுத்த சுடர்க் கொடி நாச்சியார் ஆண்டாள்' தான் பாடிக் கொடுத்த பாமாலையால் பரமனை சேவித்து அவரிடமே ஜக்கியமானாள்.

    ஆண்டாள் பிறந்த அந்த தினத்தை ஆடிப்பூரம் என்று அனைவரும் கொண்டாடிக்களிக்கின்றோம்.

    இன்றும் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தை மிக்க அற்புதமாக கொண்டாடுகிறார்கள்.

    இதேபோல 'ஆடி பதினெட்டு' என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விசேஷமான பண்டிகை நாளாகும். அந்த பண்டிகை வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம்.

    முன்பு ஆடிப்பூரத் திருநாளின்போது காவேரியும், தாமிரபரணியும், வைகையும் வெள்ளப் பெருக்கெடுத்து, பொங்கிப் பெருகி ஓடும்.

    ஆடிப்பூர நந்நாளன்று அணங்கையர் புத்தாடை உடுத்திக் கோவிலுக்குச் செல்வர். மாலையில் தேங்காயம் சாதம், தயிர் சாதம், புளியஞ்சாதம், பாயசம் போன்ற சித்ரா அன்னம் தயாரித்து அம்மனுக்கு நிவேதிப்பர். பிறகு குடும்பத்துடன் அனைவரும் மாலையில் நதிக்கரைக்கு சென்று சித்ரா அன்னத்தை உண்டு மகிழ்வர்.

    ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் விசேஷமான பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்.

    கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்குப் பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

    கரக ஆட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை இவைகளுடன் கேளிக்கையும் கொண்டாட்டங்களும் நடைபெறும்.

    இந்த ஆடி மாதத்தில் புன்னைவனம் என்றழைக்கப்படும் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    'அரியும் சிவனும் ஒன்றே' என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள் பார்வதி தேவி. அதற்காக புன்னைவனத்தில் தவமிருந்தாள் அம்பிகை.

    அம்பிகையின் தவத்திற்கு திருவுள்ளம் கனிந்த பெருமான் சங்கரநாராயணராக காட்சி தருகிறார். அதே தலத்தில் ஐயன் சங்கரலிங்க மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையை மணந்து கொள்கிறார்.

    ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் இந்த ஆடித்தபசு பண்டிகையைக் காண பக்தர்கள் கூட்டம் வெள்ளம் எனப்பெருகும்!

    இவ்வாறு அம்பிகைக்கு உகந்ததான ஆடி மாதத்தில் வரும் செவ்வாயும், வெள்ளியும் விரதம் இருந்து நாம் அம்மனின் பேரருளைப் பெறுவோமாக!

    ஆடி ஸ்பெஷல்

    ஆடிப்பெருக்கு தினத்தில் மன்னார்குடி ஸ்ரீசங்கர மடத்தில் இருந்து மாலை புறப்படும் 'காவிரி அம்மன் உலா' ஆற்றங்கரையை அடையும். திரளான பக்தர்களுடன் மேள தாளத்துடன் இந்த உலா செல்லும். படிக்கரையில், காவிரி அம்மனாக அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்குக்கு பூஜைகள் நடக்கும். சந்தனாபிஷேகம், பாலாபிஷேகம், தேனாபிஷேகம் முதலியவற்றை பொதுமக்களின் சங்கல்பத்துடன் துவங்கி, காவிரி அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடக்கும். ஸ்ரீகாஞ்சி மடத்தில் பக்தர்கள் மற்றும் உள்ளூர்க்காரர்கள் முயற்சியுடன் இந்த வைபவம் நடந்து வருகிறது. காவிரி அம்மனுக்கு அர்ச்சகர் தீபாராதனை காட்டும்போது, அங்கு கூடி இருக்கும் உள்ளூர் மக்கள், கங்கையில் ஆரத்தி விடுவது போல் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி நதி நீரில் மிதக்க விடுவர்.

    • விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கீழக்கரை

    மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட கற்பூர வலசை கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

    தொடர்ந்து புனித நீர் குடங்களை கோவில் விழா கமிட்டியினர், கிராம முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். அப்போது கருடன் வானில் வட்டமிட, மேளதாளத்துடன், வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. இதையொட்டி பட்டணம் காத்தான் ஊராட்சி தலைவர் எம். சித்ரா மருது, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர், அ.தி.மு.க. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    • கும்பாபிஷேகத்துக்கான பூமி பூஜை தொடங்கியது.
    • தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.

    இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி, கோவில் செயல் அலுவலர் சத்திய நாராயணன், ஊர் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். 

    ×