search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை பாக்கியம்"

    • ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.
    • மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

    ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும்.

    சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும்.

    ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.

    ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும்.

    ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.

    புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது.

    இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியை செய்து கொள்ள நன்மை உண்டாகும்.

    மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

    மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.

    • முத்தாரம்மன் கோவில் பின்புறம் ஒரு அரசமரம் உள்ளது.
    • குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாரிசுக்காக தொட்டில் கட்டுகின்றனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பின்புறம் ஒரு அரசமரம் உள்ளது. இதன் அடிப்பாகத்தை கூர்ந்து கவனித்தால் யானையின் பாதம் போல் இருக்கும். இருமனம் இணைந்து திருமணம் நடக்கும்போது உடனே வாரிசு வர வேண்டும் என்று வேண்டுதல் செய்து இந்த மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர்.

    திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாரிசுக்காக தொட்டில் கட்டுகின்றனர். பக்தர்களின் வேண்டுதல்களை வேண்டியபடி நிறைவேற்றி அருள்புரியும் அன்னையின் அருள் காட்டாற்று வெள்ளம்போல் பாய்வதால்தான் ஆண்டுக்கு ஆண்டு பக்தர்களின் கூட்டமும் அலைமோதுகிறது.

    • குழந்தையில்லாதவர்கள் வந்து பிரார்த்தனை செய்தால் குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
    • கிருஷ்ணஜெயந்தி அன்று நடக்கும் உறியடி திருவிழா மிகவும் பிரபலம்.

    திண்டுக்கல் நகரில் யாதவ மேட்டுராஜக்காபட்டி என்ற இடத்தில் கடந்த 1984-ம் ஆண்டு கிருஷ்ணன் கோவில் பஜனைமடம் அமைக்கப்பட்டது. நாளடைவில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இந்த இடத்தில் கிருஷ்ணனுக்கு கோவில் எழுப்பவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஏனெனில் இங்கு வந்து பஜனை நடத்தும் பக்தர்களுக்கு பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்து வந்தன.

    குழந்தைகளுக்கு நல்ல அறிவாற்றலும், வணிகர்களுக்கு தொழில் விருத்தியும், குடும்பத்தில் அமைதியும் நிலவி வந்தது. குறிப்பாக குழந்தையில்லா பெண்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்ததால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. அவ்வாறு பல ஆண்டுகள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் குழந்தை பெற்ற பெண்கள் தங்கள் குழந்தையை இந்த கோவிலில் கிருஷ்ணன் முன்பு படுக்கவைத்து முதன்முதலாக உணவு கொடுப்பார்கள்.

    அவ்வாறு கொடுக்கும்போது அந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி நீண்டநாள் வாழும் என நம்பப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய இந்த கிருஷ்ணன் கோவிலில் முதன்முதலாக 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன்பின் 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    உறியடி திருவிழா

    ஒவ்வொரு வருடமும் கிருஷ்ணஜெயந்தி அன்று இங்கு நடத்தப்படும் உறியடி திருவிழா மிகவும் பிரபலமாகும். திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே இப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    கிருஷ்ணஜெயந்தி நாளில் இப்பகுதிகளை சேர்ந்த பல்வேறு குழந்தைகள் கண்ணன் வேடமிட்டு, கோவிலுக்கு வந்து ஆடிப்பாடி மகிழ்வதும், மறுநாள் உறியடி திருவிழா நடத்தி அதில் இப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்கும் காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவார்கள்.

    இதுமட்டுமின்றி கிருஷ்ணபரமாத்மாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    • நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.
    • நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில், ஏதாவது ஒரு நாகம் கோவிலில் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    ஒருவருக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும், குழந்தை பாக்கியம் இருக்காது. மேலும் சகல செல்வங்களும் படிப்படியாக குறையும் என்கிறார்கள்.

    ஒருவர், நாக சதுர்த்தி தினத்தன்று வயலில் ஏர் இறங்கி உழுதார். அப்போது சில பாம்பு குட்டிகள் ஏரில் சிக்கி இறந்துவிட்டன. கோபம் கொண்ட தாய் நாகம், அந்த குடும்பத்தையே கொன்றது. ஆனால் அவரது ஒரு மகள் மட்டும் தப்பினாள். பக்கத்து கிராமத்தில் வசித்த அவள், தனது வீட்டு சுவரில் நாகத்தின் படம் ஒன்றை வரைந்து அதை பயபக்தியுடன் வணங்கி வந்தாள். இதை கண்ட தாய் நாகம், அவளை தீண்டாமல் மனம் மாறி திரும்பியது. திரும்பும்போது, அந்த பெண்ணிடம், 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டது.

    'நீ தீண்டியதால் இறந்த என் குடும்பத்தினர் மிண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என்று கேட்டாள் அந்த பெண். தாய் நாகம் மனம் இரங்கி, அந்த குடும்பத்தினரை உயிர்பிழைக்கச்செய்தது. மேலும், நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.

    சிறப்புமிக்க அந்த நாக சதுர்த்தி வருடா வருடம் ஜூலை மாதம் வருகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில், ஏதாவது ஒரு நாகம் கோவிலில் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    அவ்வாறு செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். இது வரை இல்லாமல் இருந்த குழந்தை பாக்கியமும் கிட்டும். வாழ்க்கையில் அனைத்துவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் கிராமத்தில் உள்ள மருதாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவில் உள்ளது.
    • சிவபெருமான் வேடம் அணிந்தவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் கிராமத்தில் உள்ள மருதாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிறுதொண்டு நாயனாரின் அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவபெருமான் மாறுவேடமிட்ட கைலாய வாத்தியங்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலுக்கு சென்றார்.

    அப்போது சிறுதொண்டர் நாயனார் குழந்தை வரம் வேண்டி சிவபெருமானிடம் வரம் கேட்ட பிறகு குழந்தை பிறந்தது. இதனை சிவபெருமானின் புராண வரலாற்று பாடல்கள் மூலம் எடுத்துரைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இக்கோவிலில் விழா நடைபெறும். விழாவினை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதனையடுத்து சிவபெருமான் வேடம் அணிந்தவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஆயிரத்துக்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மண்டியிட்டு மடிச்சோறு வாங்கி வழிபாடு செய்தனர். இதனால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும், குடும்ப பிரச்னைகள் தீறும் என்பது ஐதீகமாகும்.

    இவ்விழாவில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×