என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை பாக்கியம்"

    • திதி தேவதை பிரம்ம தேவனின் மானச புத்ரி.
    • முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது.

    சஷ்டி என்பவள் ஒரு திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். சஷ்டி எனும் திதி தேவதையானவள் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள்.

    இவள் பணி அதோடு மட்டும் நின்று போவதில்லை. மாதர்களுக்கு கரு உருவாக்குபவள், உருவாக்கிய கருவை உடனிருந்து காப்பவள், அக்கரு சிறப்பாக வளர உதவி புரிபவள், பிறந்த அந்த சிசுக்களை பலாரிஷ்ட தோஷங்கள் ஏற்படாமல் காப்பாற்றுபவள்.

    திதி தேவதை பிரம்ம தேவனின் மானச புத்ரி. முன்பொரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றபோது இவள் தேவர்கள் சேனையின் பக்கம் இருந்து உதவி புரிந்ததால் தேவசேனையென்றும் ஓர் பெயர் பெற்றாள். (இந்திரனின் மகளாகப் பிறந்து முருகப் பெருமானை திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்த தெய்வானை என்பவள் வேறு இவள் வேறு) அப்போது அந்த தேவசேனைகளின் பதியாகத் திகழ்ந்த (தேவசேனாபதி) முருகனுக்கு இந்த திதி தேவதையான சஷ்டி தேவி மிகவும் பிரியமுடையவளாக திகழ்ந்தாள். அதனால்தான் முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது.

    • தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
    • தைப்பூச திருவிழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

    தென்காசியில் இருந்து கடையம் செல்லும் பாதையில் பயணிக்கும்போது சற்று மேற்கு நோக்கி பார்த்தால், வெள்ளைப் பட்டை தீட்டியது போல் ஒரு அழகிய மலைக்குன்று நம் கண்களுக்கு தென்படும். யானை படுத்திருப்பது போன்று காட்சியளிக்கும் அந்த மலைதான், தோரணமலை. யானைக்கு 'வாரணம்' என்ற பெயர் உண்டு. அந்த வகையில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்ட இந்த மலை, காலப்போக்கில் மருவி, 'தோரணமலை' என்று அழைக்கப் படுவதாக சொல்லப்படுகிறது. இந்த தோரணமலையில் உள்ள முருகன் கோவில், பல்வேறு சிறப்புகளை தன்னுள்ளே தாங்கி நிற்கிறது.

    தல வரலாறு

    சிவன் - பார்வதி திருமணத்தின்போது வடக்குப் பகுதி தாழ்ந்து, தெற்குப் பகுதி உயர்ந்தது. அதை சமன் செய்ய சிவபெருமானின் உத்தரவின்பேரில், தென்திசை நோக்கி பயணித்தார், அகத்தியர். இங்குள்ள மலை வளத்தை கண்டு வியந்த அகத்தியர், சித்தர்களுக்கான பாடசாலை ஒன்றை அமைத்தார். அதில் மருத்துவம் உள்பட அனைத்துவிதமான பாடங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டன. அங்கு பயின்ற சித்தர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிறருக்கும் பயிற்றுவித்தனர். அப்போது அவர்கள் வழிபட்ட முருகன்தான், தற்போது தோரண மலையில் குடிகொண்டு அருள்புரிகிறார்.

    அகத்தியர் இந்த மலையில் இருக்கும்போது, காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி ஏற்பட, குணம்பெற வேண்டி அகத்தியரிடம் வந்தார். அகத்தியர், மன்னனின் நாடி பார்த்தபோது, மன்னனின் தலையில் தேரை இருப்பது தெரியவந்தது. மன்னன் குளிக்கும்போது தவளையின் குஞ்சு நாசி வழியே தலைக்குச் சென்று வளர்ந்துள்ளதாக அகத்தியர் விளக்கினார். இதையடுத்து கபால அறுவை சிகிச்சை மேற்கொண்ட அகத்தியர், தலைக்குள் இருந்த தேரையை எப்படி வெளியே எடுப்பது என்று சிந்தித்தார்.

    அப்போது, அவரது சீடராக இருந்த வாய்பேச முடியாத ராமதேவன் என்ற சிறுவன், ஒரு கலசத்தில் தண்ணீரை வைத்து அலம்பினான். தண்ணீர் சத்தத்தை கேட்ட தேரை துள்ளிக் குதித்து வெளியே வந்தது. இதனால் அந்த சிறுவனுக்கு 'தேரையர்' என பெயர் சூட்டி, அவனை தோரணமலையில் தங்கி இருந்து மருத்துவ சேவை செய்யும்படி பணித்தார், அகத்தியர். அதன்படி தேரையர் இங்கேயே தங்கி இறுதியில் முக்தியும் அடைந்தார். காலப்போக்கில் இங்கு வழிபாடு நின்றதோடு, முருகன் சிலையும் காணாமல் போனது.

    பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், ஆதிநாராயணன் என்பவரின் மூதாதையர் ஒருவர் கனவில் தோன்றிய முருகன், தான் தோரணமலையில் இருப்பதாகவும், அங்குள்ள சுனையில் மறைந்து இருக்கும் தன்னுடைய சிலையை குகையில் நிறுவி வணங்கும்படியும் கூறினார். அதன்படி சுனையில் மறைந்து இருந்த முருகன் சிலையை மீட்டு, குகையில் ஸ்தாபித்து வணங்கி வந்தார்.

    இதுபற்றி கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் கூறும்போது, "எங்கள் மூதாதையர் வழியில் நாங்கள் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறோம். எனது தந்தை ஆதிநாராயணன், பள்ளி ஆசிரியராக இருந்தபடியே மீதி நேரங்களில் இந்த மலையில் முருகனுக்கு தொண்டு செய்துவந்தார். கடையம் சுற்றுவட்டார பகுதிக்கு மட்டுமே தெரிந்த தோரணமலை ஆலயத்தை, சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஊர் மக்களும் அறியும்படி செய்ய நினைத்தார்.

    அந்த காலத்தில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே, அவர் தான் வைத்திருந்த சைக்கிளில் ஒவ்வொரு சினிமா தியேட்டராக சென்று, தோரணமலை பற்றிய பட காட்சியை தியேட்டரில் போடும்படி கேட்பார். இறைப் பணி என்பதால், அவர்களும் மனமகிழ்ச்சியோடு பணம் ஏதும் பெறாமல், படத்தின் இடைவேளையின்போது தோரணமலையை காட்டினார்கள். இப்படிதான் பல்வேறு மாவட்டங்களுக்கும் தோரணமலையின் புகழ் பரவியது.

     

    கிரிவலம் செல்லும் பக்தர்கள்

    மேலும், வைகாசி விசாகத்தை சிறப்பாக கொண்டாட எண்ணிய ஆதிநாராயணன், சிறப்பு பூஜையோடு நின்றுவிடாமல் விடிய விடிய பக்தர்களை அங்கேயே இருக்கவைக்க யோசித்தார். அதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் உதவியோடு கலையரங்கம் கட்டி, அதில் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தார். இதனால் வைகாசி விசாகத் திருவிழா மக்கள் வெள்ளத்தில் களை கட்டியது. கொஞ்சம் கொஞ்சமாக தோரணமலையின் புகழ் பல பகுதிகளுக்கு பரவியது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

    இதனால் பலரிடம் உதவி கேட்டு, அவர்களே திருப்பணி செய்தனர். அப்படிதான் மலைமீது ஏற படிக்கட்டுகள், மலை அடிவாரத்தில் தார் சாலை, கிணறு, தங்குவதற்கு தாழ்வாரங்கள், அகன்ற மலைப்பாதை, ஆங்காங்கே இளைப்பாற ஆறு மண்டபங்களும் அமைக்கப்பட்டன. தந்தையின் வழியில் நானும் ஆன்மிகப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். தற்போது தோரணமலை ஆலயத்தில் தினமும் மதியம் அன்னதானம், ஞாயிறு மற்றும் கடைசி வெள்ளிக்கிழமை, பவுர்ணமி கிரிவல நாட்களில் காலையில் சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.

    தோரணமலை முருகனின் பக்தர்களால், பல மாணவர்கள் தத்தெடுக்கப்பட்டு படிக்க வைக்கப்படுகிறார்கள். தோரணமலையில் நூலகம் ஒன்றும் உள்ளது. அதில் ஆன்மிகம் மட்டுமின்றி பொதுஅறிவு புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தோரணமலை பக்தர்கள் மூலமாக ஆதரவற்றவர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது" என்றார்.

     

    தோரணமலையின் தோற்றம்

    தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். பத்ரகாளி அம்மன் தனிச் சன்னிதியில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மலையில் முருகப்பெருமானின் பாதச்சுவடு உள்ளது. அதை பக்தர்கள் தொட்டு வணங்கி செல்கின்றனர். மலை அடிவாரத்தில் கன்னிமார்கள் சன்னிதி உள்ளது. மேலும் சிவபெருமான், கிருஷ்ணர், லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் சுதை சிற்பங்களும் காணப்படுகின்றன. மலையேறும் இடத்தில் பாலமுருகன் சிலை உள்ளது. மலையேற முடியாதவர்கள் இந்த முருகனை வழிபட்டுச் செல்கிறார்கள்.

    இங்குள்ள விநாயகர், 'வல்லப விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். அவர் தேவியுடன் காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. முகூர்த்த நாட்களில் இவரது சன்னிதியில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. தோரணமலை முருகனை வேண்டுபவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி, உடல் ஆரோக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று, விவசாயம் செழிக்க 'வருண கலச பூஜை' நடத்தப்படுகிறது. தைப் பூச திருவிழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் விருட்சபூஜை நடைபெறுகிறது. இதுதவிர, சுனை நீர், கோவில் வளாகத்தில் நடப்பட்டுள்ள 27 நட்சத்திரத்திற்குரிய செடிகள் ஆகியவற்றிற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். முருகன் கோவில் அமைந்திருக்கும் தோரணை மலையைச் சுற்றி தற்போது பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும் நிகழ்வும் நடக்கிறது. தற்போது கரடுமுரடாக இருக்கும் 6 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையை, புனரமைக்கும் பணி வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

    தோரணமலையை அலங்கரிக்கும் சுனைகள்

    தோரணமலையில் மொத்தம் அறுபத்து நான்கு சுனைகள் இருப்பதாக இங்கே தங்கி பாடசாலை நடத்திய சித்தர்களின் பாடல் வாயிலாக அறிகிறோம். அவற்றில் சில மட்டுமே நம் கண்ணுக்கு புலப்படுகின்றன. மலை அடிவாரத்தில் இரண்டு சுனைகள், மலைக்கு போகும் வழியில் இடதுபுறம் 'லட்சுமி தீர்த்தம்' என்ற சுனை, மலையில் முருகப்பெருமானுக்கு இடதுபுறம் சற்று மேலே ஒரு பெரிய சுனை போன்றவை முக்கியமான சுனைகளாக இருக்கின்றன.

    • கோவிலில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுற காட்சி அளிக்கிறது.
    • வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கியபடி உள்ளார்.

    சங்கர ராமேஸ்வரர் கோவில் தோற்றம்

    தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, சுமார் 500 ஆண்டுகள் பழமையான சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தின் மூலவர் சங்கர ராமேஸ்வரர், அம்பிகை பாகம்பிரியாள்.

    தல வரலாறு

    தூத்துக்குடியின் பழம்பெயர் 'திருமந்திர நகர்' என்பதாகும். இங்குதான் சிவபெருமான் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு வரையறுத்ததாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த இடம் 'திருமந்திர நகர்' என்று அழைக்கப்பட்டது. திருச்செந்தூர் வந்த காசியப முனிவர் பசுமை நிறைந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார். அதுவே இந்த சங்கர ராமேஸ் வரர் கோவில் என்று கூறப்படுகிறது. இத்தல இறைவனை காசியப முனிவர், கவுதமர், பரத்துவாஜர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள்பெற்றுள்ளனர்.

    பிற்கால குறுநில மன்னரான சங்கரராம பாண்டியன் கயத்தாறை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தார். இவருக்கு குழந்தை பேறு இல்லை. இதனால் மனம் வருந்திய மன்னன், காசி போன்ற புண்ணிய திருத்தலங் களுக்குச் சென்று புனித நீராடி வந்தார். ஒரு சமயம் மன்னன் தனது பரிவாரங்களுடன் புனித நீராடச் செல்லும்போது, இறைவனது குரல் "பாண்டியா, திருமந்திர நகரில் உள்ள காசிக்கு நிகரான வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா'' என அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து சங்கரராம பாண்டியன் வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி காசியப முனிவர் உருவாக்கிய சிவலிங்கத்திற்கு திருக்கோவில் ஒன்றை எழுப்பினார்.

    கோவில் அமைப்பு

    கோவிலில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுற காட்சி அளிக்கிறது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. இக்கோவிலை ஒட்டி பெருமாள் கோவிலும் உள்ளது. இறைவன் சன்னிதி முன்பு அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன. இத்தல இறைவன் லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கியபடி இரண்டு திருக் கரங்களில் ஒரு கரத்தில் தாமரை ஏந்தியும், மற்றொரு கரத்தை இடையோடு தொங்க விட்டபடியும் பார்க்க ஒரு நாட்டிய மங்கைபோல் காட்சி அளிக் கிறார்.

    இறைவன் எதிரில் உயர்ந்த கொடி மரம், நந்தி உள்ளன. அதனை கடந்தவுடன் வாசலின் இருபுறமும் சூரியன், சந்திரன் உள்ளனர். சூரியனை ஒட்டி அதிகார நந்தி கைகூப்பியபடி உள்ளார். கருவறை வாசலில் அழகிய விநாயகர் தனிச் சன்னிதியில் அருள்கிறார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகார சன்னிதிகளாக தென்புறம் அறுபத்துமூவர், தென்மேற்கில் விநாயகர், அடுத்து புறச்சுற்றில் கிழக்கு நோக்கிய பஞ்ச லிங்கங்கள் உள்ளன. எதிரில் சிறிய நந்திகளும் உள்ளன.

    வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கியபடி உள்ளார். அருகில் தெற்கு நோக்கியபடி உற்சவ திருமேனியுடன் முருகன் சன்னிதியும் உள்ளது. வடப்புற சுற்றில் தெற்கு நோக்கிய இரு மாடங்களில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் உள்ளனர். அதே சுற்றில் தெற்கு நோக்கிய சனிபகவான் சன்னிதி உள்ளது.

    அழகிய மண்டபத்தில் வடகிழக்கில் நடராஜர் சிவகாமியுடன் உள்ளார். அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது. அதில் சனிபகவான் கையில் வில் அம்புடன் உள்ளார். மற்ற கிரகங்களும் கையில் ஆயுதங்களுடன் வாகனத்தில் உள்ளனர்.

    இரண்டாம் பிரகாரத்தில் கன்னி விநாயகர், முருகன், ஐயப்பன் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலில் உள்ள 'வாஞ்சா புஷ்கரணி' என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம், வைகாசியில் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி, புரட்டாசியில் நவராத்திரி மற்றும் பாரிவேட்டை, ஐப்பசியில் திருக்கல்யாணம், கார்த்திகையில் சொக்கபனை ஏற்றுதல், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, தை மாதத்தில் தைப்பூசம் மற்றும் தெப்பத் திருவிழா, மாசியில் மகா சிவராத்திரி, பங்குனி மாதம் காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் மாங்கனி பெற்ற நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் கிராமத்தில் உள்ள மருதாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவில் உள்ளது.
    • சிவபெருமான் வேடம் அணிந்தவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் கிராமத்தில் உள்ள மருதாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிறுதொண்டு நாயனாரின் அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவபெருமான் மாறுவேடமிட்ட கைலாய வாத்தியங்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலுக்கு சென்றார்.

    அப்போது சிறுதொண்டர் நாயனார் குழந்தை வரம் வேண்டி சிவபெருமானிடம் வரம் கேட்ட பிறகு குழந்தை பிறந்தது. இதனை சிவபெருமானின் புராண வரலாற்று பாடல்கள் மூலம் எடுத்துரைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இக்கோவிலில் விழா நடைபெறும். விழாவினை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதனையடுத்து சிவபெருமான் வேடம் அணிந்தவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஆயிரத்துக்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மண்டியிட்டு மடிச்சோறு வாங்கி வழிபாடு செய்தனர். இதனால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும், குடும்ப பிரச்னைகள் தீறும் என்பது ஐதீகமாகும்.

    இவ்விழாவில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.
    • நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில், ஏதாவது ஒரு நாகம் கோவிலில் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    ஒருவருக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும், குழந்தை பாக்கியம் இருக்காது. மேலும் சகல செல்வங்களும் படிப்படியாக குறையும் என்கிறார்கள்.

    ஒருவர், நாக சதுர்த்தி தினத்தன்று வயலில் ஏர் இறங்கி உழுதார். அப்போது சில பாம்பு குட்டிகள் ஏரில் சிக்கி இறந்துவிட்டன. கோபம் கொண்ட தாய் நாகம், அந்த குடும்பத்தையே கொன்றது. ஆனால் அவரது ஒரு மகள் மட்டும் தப்பினாள். பக்கத்து கிராமத்தில் வசித்த அவள், தனது வீட்டு சுவரில் நாகத்தின் படம் ஒன்றை வரைந்து அதை பயபக்தியுடன் வணங்கி வந்தாள். இதை கண்ட தாய் நாகம், அவளை தீண்டாமல் மனம் மாறி திரும்பியது. திரும்பும்போது, அந்த பெண்ணிடம், 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டது.

    'நீ தீண்டியதால் இறந்த என் குடும்பத்தினர் மிண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என்று கேட்டாள் அந்த பெண். தாய் நாகம் மனம் இரங்கி, அந்த குடும்பத்தினரை உயிர்பிழைக்கச்செய்தது. மேலும், நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.

    சிறப்புமிக்க அந்த நாக சதுர்த்தி வருடா வருடம் ஜூலை மாதம் வருகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில், ஏதாவது ஒரு நாகம் கோவிலில் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    அவ்வாறு செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். இது வரை இல்லாமல் இருந்த குழந்தை பாக்கியமும் கிட்டும். வாழ்க்கையில் அனைத்துவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும்.

    • குழந்தையில்லாதவர்கள் வந்து பிரார்த்தனை செய்தால் குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
    • கிருஷ்ணஜெயந்தி அன்று நடக்கும் உறியடி திருவிழா மிகவும் பிரபலம்.

    திண்டுக்கல் நகரில் யாதவ மேட்டுராஜக்காபட்டி என்ற இடத்தில் கடந்த 1984-ம் ஆண்டு கிருஷ்ணன் கோவில் பஜனைமடம் அமைக்கப்பட்டது. நாளடைவில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இந்த இடத்தில் கிருஷ்ணனுக்கு கோவில் எழுப்பவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஏனெனில் இங்கு வந்து பஜனை நடத்தும் பக்தர்களுக்கு பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்து வந்தன.

    குழந்தைகளுக்கு நல்ல அறிவாற்றலும், வணிகர்களுக்கு தொழில் விருத்தியும், குடும்பத்தில் அமைதியும் நிலவி வந்தது. குறிப்பாக குழந்தையில்லா பெண்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்ததால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. அவ்வாறு பல ஆண்டுகள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் குழந்தை பெற்ற பெண்கள் தங்கள் குழந்தையை இந்த கோவிலில் கிருஷ்ணன் முன்பு படுக்கவைத்து முதன்முதலாக உணவு கொடுப்பார்கள்.

    அவ்வாறு கொடுக்கும்போது அந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி நீண்டநாள் வாழும் என நம்பப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய இந்த கிருஷ்ணன் கோவிலில் முதன்முதலாக 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன்பின் 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    உறியடி திருவிழா

    ஒவ்வொரு வருடமும் கிருஷ்ணஜெயந்தி அன்று இங்கு நடத்தப்படும் உறியடி திருவிழா மிகவும் பிரபலமாகும். திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே இப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    கிருஷ்ணஜெயந்தி நாளில் இப்பகுதிகளை சேர்ந்த பல்வேறு குழந்தைகள் கண்ணன் வேடமிட்டு, கோவிலுக்கு வந்து ஆடிப்பாடி மகிழ்வதும், மறுநாள் உறியடி திருவிழா நடத்தி அதில் இப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்கும் காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவார்கள்.

    இதுமட்டுமின்றி கிருஷ்ணபரமாத்மாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    • முத்தாரம்மன் கோவில் பின்புறம் ஒரு அரசமரம் உள்ளது.
    • குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாரிசுக்காக தொட்டில் கட்டுகின்றனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பின்புறம் ஒரு அரசமரம் உள்ளது. இதன் அடிப்பாகத்தை கூர்ந்து கவனித்தால் யானையின் பாதம் போல் இருக்கும். இருமனம் இணைந்து திருமணம் நடக்கும்போது உடனே வாரிசு வர வேண்டும் என்று வேண்டுதல் செய்து இந்த மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர்.

    திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாரிசுக்காக தொட்டில் கட்டுகின்றனர். பக்தர்களின் வேண்டுதல்களை வேண்டியபடி நிறைவேற்றி அருள்புரியும் அன்னையின் அருள் காட்டாற்று வெள்ளம்போல் பாய்வதால்தான் ஆண்டுக்கு ஆண்டு பக்தர்களின் கூட்டமும் அலைமோதுகிறது.

    • ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.
    • மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

    ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும்.

    சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும்.

    ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.

    ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும்.

    ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.

    புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது.

    இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியை செய்து கொள்ள நன்மை உண்டாகும்.

    மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

    மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூங்காவனமாக இருந்ததால், இந்த அம்மனை பூங்காவனத்தம்மன் என்றும் பெயர் உண்டு.
    • கர்ப்பிணி போல் அருள்பாலிக்கும் பூங்காவனத்தம்மனை தரிசித்தாலே குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை இருக்கிறது.

    குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில். இந்த ஆலயத்தில் அம்மன் கர்ப்பிணிகள் பிரசவ காலத்தைப் போல கால் நீட்டி மல்லாந்து படுத்து துடிப்பது போல காட்சியளிக்கிறார். கோயிலில் நுழைந்தாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது. அதோடு கோயில் முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமத்தின் வாசம் இருக்கிறது.

    குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கும், சுபப் பிரசவம் வரம் வேண்டி கர்ப்பிணிகள், குடும்ப பிரச்னைகள் தீர வேண்டும் என பெண்கள் பலர் குவியக்கூடிய ஆலயமாக புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் விளங்குகிறது.

    பெரும்பாலான கோயிலில் அம்மன் நின்ற நிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ பக்தர்களுக்கு காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் அம்மன் கர்ப்பிணிகள் பிரசவ காலத்தைப் போல கால் நீட்டி மல்லாந்து படுத்து துடிப்பது போல காட்சியளிக்கிறார்.

    அம்மனுக்கு பின்புறம் தாண்டவராயன் என்ற பெயரில் நடராஜர், அங்காள பரமேஸ்வரி, விநாயகர் ஆகியோர் உள்ளனர். சன்னதிக்கு எதிரில் நந்தி வாகனம் அமைந்துள்ளது.

    குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்களும், குடும்ப பிரச்னை தீர வேண்டும் என வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அளிக்கக்கூடிய அம்மனாக திகழ்கிறாள்.

    கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டி அவர்களது பெற்றோரோ, கணவரோ, உறவினர் என இங்கு வந்து வேண்டி செல்கின்றனர்.

    இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

    அதே சமயம் ஆடி மாதம் தொடங்கிவிட்டால் எல்லா நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் புட்லூர் அம்மனை தரிசிக்கக் குவிகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக வருகின்றனர்.

    இந்த இடம் முன்னர் பூங்காவனமாக இருந்ததால், இந்த அம்மனை பூங்காவனத்தம்மன் என்றும் பெயர் உண்டு.

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயிலில் சென்றால், புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புட்லூர் அங்காளம்மன் திருக்கோயில்.

    இந்த கோயிலில் கர்ப்பிணி போல் அருள்பாலிக்கும் பூங்காவனத்தம்மனை தரிசித்தாலே குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை இருக்கிறது.

    • இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.

    ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்கின்றன புராணங்கள். ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம்தான். இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

    பொதுவாக ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.

    இது அம்பாளுக்குரிய திருநாளாகும். இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.

    அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். ஆனால் இதில் வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரமாகும். அன்னை உளம் மகிழ்ந்து அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம் ஆகும்.

    இந்த ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும் என்பது நம்பிக்கை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
    • ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில், திண்டல் திருத்தலம் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் என்ற இடத்தில் சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளது.

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்மொழிக்கு ஏற்ப, இந்த ஆலயமும் முருகனின் அருள் ஆலயங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடிக்கிறது. இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    புத்திரப்பேறு இல்லாதவர்கள், இத்தல முருகனுக்கு அபிஷேகம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில், திண்டல் திருத்தலம் உள்ளது.

    ×