கும்பாபிஷேகத்துக்கான பூமி பூஜை தொடக்கம்

கும்பாபிஷேகத்துக்கான பூமி பூஜை தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.
கும்பாபிஷேகத்துக்கான பூமி பூஜை நடந்தது.
கும்பாபிஷேகத்துக்கான பூமி பூஜை நடந்தது.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.

இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி, கோவில் செயல் அலுவலர் சத்திய நாராயணன், ஊர் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com