search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்குழி"

    • பரமக்குடி அருகே சதுரங்க நாயகி அம்மன் கோவிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    • திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேலப்பெருங்கரை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் சதுரங்க நாயகி அம்மன் சந்தன கருப்பு சாமிகள் கோவில் உள்ளது. இங்கு 20-ம் ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருமணம் வரம் வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும், நேர்த்திக்கடனாகவும் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேலப்பெருங்கரை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்புத்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 47-ம் ஆண்டு பூச்சொரி தல் விழா நடந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்கினி சட்டி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி னர். பின்னர் 300-க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர்.

    பக்தர்க ளுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ராமமுர்த்தி, தலைவர் முத்துபாண்டி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள், மாடசாமி, சேகர், கூடல்மற்றும் எஸ்.ஏ.பி நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னகண்ணு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது.
    • விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே விஸ்வநாதபேரி திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது. திரவுபதி அம்மன் திருக்கல்யாண அலங்காரம், கனி பறித்தல், அர்ச்சுனன் தபசு, பூப்பறித்தல், அரவான் களப்பொலி, துச்சாதனன் பலி வாங்குதல் ஆகிய வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 9-ம் திருநாளான நேற்று சேனைத்தலைவர் சமுதாயத்தினர் சார்பில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

    காலையில் திரவுபதி அம்மன் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழி திடலில் வேதபராயண முறைப்படி அக்னி வளர்க்கப்பட்டது.

    தொடர்ந்து பகலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு திரவுபதி அம்மன், அர்ச்சுனன், கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

    பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாலை 6.30 மணிக்கு பூக்குழி திடலை அடைந்த உடன் பூசாரி மணிகண்டன் பூக்குழி இறங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள், விழா கமிட்டியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மொகரம் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதத்தினர் பங்கேற்ற பூக்குழி திருவிழா நடந்தது.
    • ஆண்கள் தீமிதித்தும், பெண்கள் தலையில் கங்குகளை போட்டும் நேர்்த்திக்கடன் செலுத்தினர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மாமுனாச்சி அம்மன் சமூக நல்லிணக்க பூக்குழி திருவிழா நடந்தது.

    மொகரம் முதல் நாள் கொடியேற்றி 10 நாட்கள் விரதம் இருந்து 11-ம் நாள் மொகரம் அன்று பக்தர்கள் பூக்குழி இறங்கி மற்றும் பெண்கள் தலையில் தீ கங்குகளை போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருவது பெரியகுளம் கிராமத்தில் நடந்து வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி கொண்டாடு கின்றனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சமூக நல்லிணக்க பூக்குழி திருவிழா நடந்து வருகிறது. இன்று அதிகாலை யில் நடந்த சமூக நல்லிணக்க பெருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்ட னர். ஆண்கள் தீமிதித்தும், பெண்கள் தலையில் கங்குகளை போட்டும் நேர்்த்திக்கடன் செலுத்தினர்.

    கடலாடி, சாயல்குடி, மாரியூர், வாலிநோக்கம், முந்தல், ஒப்பிலான், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    • கும்பாபிஷேகத்துக்கான பூமி பூஜை தொடங்கியது.
    • தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.

    இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி, கோவில் செயல் அலுவலர் சத்திய நாராயணன், ஊர் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். 

    ×