என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி
- வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்புத்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 47-ம் ஆண்டு பூச்சொரி தல் விழா நடந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்கினி சட்டி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி னர். பின்னர் 300-க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர்.
பக்தர்க ளுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ராமமுர்த்தி, தலைவர் முத்துபாண்டி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள், மாடசாமி, சேகர், கூடல்மற்றும் எஸ்.ஏ.பி நண்பர்கள் கலந்து கொண்டனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னகண்ணு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story






