என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் பூக்குழி இறங்கியபோது எடுத்த படம்.
மாரியம்மன் கோவில் பூக்குழி விழா
- மாரியம்மன் கோவில் பூக்குழி விழா இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பரமக்குடி
பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியம் காமன்கோட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா விமரிசையாக நடந்து வருகிறது.
கடந் 4-ந் தேதி விழா தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். விழாவில் நேற்று முன்தினம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதனை தொடர்ந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் ஆயிரங்கண் பானை, கரும்பாலை தொட்டி, அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன் களை செலுத்தினர்.
நேற்று பெண்கள் உள்பட திரளானோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் ெசலுத்தினர். பின்னர் பால்குட ஊர்வலமும் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாளையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை காமன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் பாண்டியன், ஊர் தலைவர் சரவணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.






