

மேலூர்
மேலூர் அருகே உள்ள கீழவளவு வீரகாளியம்மன் கோவில் பங்குனி பூக்குழி திருவிழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தியும், பெரியமந்தையில் இருந்து ஊர்வலமாக சென்று வீரகாளியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் கீழவளவு, வாச்சம்பட்டி, குழிச்சேவல்பட்டி, வடக்கு வலையபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.