search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சாதனை"

    • 27 நிமிடம் 32 வினாடிகளில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாணவி முவித்ரா புதிய சாதனை படைத்தார்.
    • 10 கிலோமீட்டர் தூரத்தை மாணவி கடக்கும் வரை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேசன்-கோகிலா தம்பதியரின் மகள் முவித்ரா.

    புதிய சாதனை

    6 வயது மாணவியான இவர் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் ஸ்கேட்டிங்கில் முந்தைய சாதனையான சங்கரன்கோவிலை சேர்ந்த ஆதவன் என்ற 7 வயது மாணவன் 10 கிலோமீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து சாதனை படைத்ததை முறியடிக்கும் வகையில் முவித்ரா புதிய சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சாய் நிகேதன் பள்ளி முதல்வர் தனலட்சுமி, மூத்த வக்கீல் அறங்காவலர் சண்முகையா, இன்ஸ்பெக்டர்கள் சண்முக வடிவு, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராஜா எம்.எல்.ஏ. பாராட்டு

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் அந்த மாணவியின் ஸ்கேட்டிங் சாதனை முயற்சியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாணவி சங்கரன்கோவில் கழுகு மலை சாலையில் இருந்து அழகனேரி வரை 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து மாணவி முவித்திராவை பொது மக்கள் உள்ளிட்டவர்கள் பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் செல்வராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையா, கல்பனா, முன்னாள் ராணுவவீரர் யோஸ்வா, தலைமை போதகர் பாபு, சிவன்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முவித்ராவின் சாதனை முயற்சி முன்னேற்பாடாக சங்கரன்கோவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் வரை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    சங்கரன்கோவில் டவுன் போலீசார் மற்றும் குருவிகுளம் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். ஏற்பாடுகளை சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக பயிற்சியாளர் பாக்கிய ராஜ் செய்திருந்தார்.

    அமைச்சர் உதயநிதியிடம்...

    சாதனை படைத்த மாணவி முவித்ராவை பாராட்டிய ராஜா எம்.எல்.ஏ., அவரை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் அழைத்துச் சென்று வாழ்த்து பெற இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் இந்த சாதனை படைத்திருப்பது சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை யாகும். இது போன்ற சாதனை முயற்சிகளை யார் மேற்கொண்டாலும் தி.மு.க. அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும் மேலும் இது போன்ற பயிற்சிகளுக்கு தேவையான உதவிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

    • இன்று பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நடைபெற்றது
    • ஒரே இடத்தில் கிடைக்க கவுன்சிலர் அய்யப்பன் ஏற்பாடு

    என்.ஜி.ஓ.காலனி :

    பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படு வதையொட்டி நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப்பன் ஏற்பாட்டில் நாகர்கோவில் அருகே உள்ள முகிலன்விளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதமர் மோடி கொண்டு வந்த 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    முகாமில் வேலைவாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொதுமருத்துவம், பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற நடவடிக்கை, பான் கார்டு பெற நடவடிக்கை, விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட் கள் கிடைக்க நடவடிக்கை, விவசாயம் செய்ய விவசாய நிலத்தின் மண் பரிசோதனை, இலவச கியாஸ் இணைப்பு பெறாதவர்களுக்கு இலவச கியாஸ் அடுப்பு பெற்று தருதல், இலவச வீடு கிடைக்காதவர்களுக்கு இலவச வீடு பெற்று தர ஏற்பாடு செய்தல் ஆகிய வற்றுக்கான நடவடிக்கை உள்ளிட்ட உதவிகள் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட நபர்கள் என அனைவரும் பங்கேற்றனர். வார்டுக்கு ட்பட்ட பொதுமக்கள் அனை வரும் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையும்படி நாகர்கோ வில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப் பன் கேட்டுகொண்டுள்ளார்.

    • சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.
    • மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.

    சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (வயது 15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால், மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்த சாஹல், தனது பெற்றோரிடம் அவற்றை நீக்கி விடும்படி கேட்டிருக்கிறார்.

    ஆனால் வளர்ந்ததும், அதன்மீது தனி கவனம் செலுத்த தொடங்கியதுடன், தலைமுடி தன்னில் ஒரு பகுதி என்ற உணர்வும் சாஹலுக்கு ஏற்பட்டது. சீக்கிய மதத்தினை சார்ந்த சாஹல், மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.

    சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில், சாஹலின் நீண்ட தலைமுடியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.

    இதுபற்றிய வீடியோ ஒன்றை கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சாஹல், தன்னுடைய தலைமுடி பராமரிப்பு பற்றி பேசியுள்ளார். தலைமுடியை அலசி, சுத்தம் செய்து, எப்படி தலைமுடியை வாருவது என்பது பற்றி சாஹலின் தாயார் உதவி செய்திருக்கிறார். அப்படி அவர் உதவவில்லை எனில், நாள் முழுவதும் அதற்காக செலவிட வேண்டி இருக்கும் என சாஹல் கூறுகிறார்.

    அப்படி தலைமுடியை அலசாமல் அல்லது காய வைக்காமல் இருக்கும்போது, சீக்கிய முறையை பின்பற்றுபவர்களிடையே காணப்படுவது போன்று, அதனை உருண்டையாக சுற்றி வைத்து, டர்பன் அணிந்து கொள்கிறார். இந்த சாதனையை பற்றி மற்றவர்களிடம் கூறும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் பொய் கூறுகிறேன் என நினைத்துவிட்டனர். அதன்பின்பு, அவர்களை நம்ப வைக்க சில சான்றுகள் தேவைப்பட்டன என அந்த வீடியோவில் கூறுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2024-ல் தன்னுடைய சாதனையும் ஒரு பகுதியாக இருப்பதற்காக சாஹல் அதிக மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

    • ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டத்தில் ஆடி அசத்தினர்.
    • வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்றத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வாக சுமார் 2000 கலைஞர்கள் பங்கு பெற்ற பவள கொடி கும்மியாட்டம் நடைபெற்றது .

    இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சக்தி கலை குழு ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பவளக்கொடி கும்மி ஆட்டத்தில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்படம், தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் பாடினர். குறிப்பாக ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டத்தில் ஆடி அசத்தினர். சிறு வயது முதல் 50 வரையிலான ஆண்கள், பெண்கள் உலக சாதனை நிகழ்ச்சிக்காக பாரம்பரியமான உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடிய வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். வள்ளி கும்மியாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    • சிறு வயதில் இருந்தே விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட மேகலாவை அவரது பெற்றோர், நெல்லை மாவட்ட வில்வித்தை சங்கத்தில் சேர்த்தனர்.
    • தேசிய அளவில் பல போட்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளேன்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே நாட்டார்குளம் கிராமத்தை சேர்ந்த மனோகரன்-பேச்சியம்மாள் தம்பதியினரின் மகள் சுப்புலட்சுமி என்ற மேகலா.

    18 வயதான இவர் பாளை சாராள் டக்கர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்கள், நாட்டார்குளத்தில் இந்திராநகர் என்னும் இடத்தில் உள்ள சிறிய வீட்டில் தான் வசித்து வருகிறார். இவருக்கு 2 அண்ணன். ஒருவர் கொடிமரத்தான், இளையவர் பேச்சிமுத்து. இவர்கள் 2 பேரும் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார்கள்.

    மேகலாவின் தந்தை விவசாயி. தாயார் பேச்சியம்மாள் செங்கல் சூளையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    சிறு வயதில் இருந்தே விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட மேகலாவை அவரது பெற்றோர், நெல்லை மாவட்ட வில்வித்தை சங்கத்தில் சேர்த்தனர். இந்த சங்கத்தின் நிறுவனர் டாக்டர் சண்முகநாதன் இவருக்கு வில்வித்தையில் அனைத்து வித்தையையும் கற்றுக் கொடுத்தார். 2 வருடத்தில் தேர்வு பெற்ற மேகலா சர்வதேச விளையாட்டு போட்டியில் விளையாட தயாரானார்.

    முதலில் மாநில அளவில் சிவகாசியில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு 2-வது இடத்தினை பெற்றார். தொடர்ந்து இவரது சாதனை தொடர ஆரம்பித்தது. இலங்கையில் நடந்த கொழும்பு ஓபன் சர்வதேச வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார். மறுநாள் நடந்த சோழன் உலக சாதனை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உலக சாதனையாளர் சான்றிதழையும் பெற்றுள்ளார்.

    மேகலாவுக்கு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தி வரும் நெல்லை மாவட்ட சர்வதேச வில்வித்தை சங்க பொதுச்செயலாளர் டாக்டர் சண்முகநாதன் இது குறித்து கூறுகையில், நாங்கள் வில்வித்தையில் ஆர்வம் உள்ள மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து போட்டியில் கலந்து கொள்ள செல்வோம்.

    கொழும்பு ஓபன் சர்வதேச வில்வித்தை போட்டியில் நடக்க உள்ளதை அறிந்தோம். எனவே நாங்கள் 27 பேர் அங்கு பயணம் செய்தோம். அதில் 18 வயதினருக்கான போட்டியில் மேகலா கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். மறுநாள் சோழன் உலக சாதனை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உலக சாதனையாளர் ஆனார். அரசு மேகலா போன்ற கிராமப்புற மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும். கிராம மக்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    மாணவி மேகலா இதுகுறித்து கூறுகையில், எனக்கு சிறு வயதிலிருந்தே குறி வைத்து அடிப்பது பிடித்த விஷயம். பாளை சாராள் டக்கர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த பின் நெல்லை மாவட்ட வில்வித்தை சங்கம் குறித்து அறிந்தேன். இது குறித்து எனது பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் என்னை ஊக்குவித்து அங்கு சேர்த்தனர். நன்றாக பயிற்சி எடுத்த பின் முதன் முதலாக 9-ம் வகுப்பு படிக்கும்போது சிவகாசியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு 2-ம் பரிசு பெற்றேன். அப்போது முதன் முதலில் போட்டியில் கலந்து கொள்வதால் சிறிது பயம் இருந்தது.

    அதன் பின் எனக்கு எந்த பயமும் இல்லை. தேசிய அளவில் பல போட்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளேன். இப்போது முதன் முதலில் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளேன்.

    அங்கு நான் 18 வயது பிரிவில் கலந்து கொண்டேன். 30 மீட்டர்வில் அம்பு வித்தையில் 6 ரவுண்டு விளையாடினேன். ஒரு ரவுண்டுக்கு 6 அம்புகள் வீசினேன். இதில் அனைத்திலும் நான் முதலிடம் பிடித்தேன். என்று கூறினார்.

    மாணவி மேகலா ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். வீட்டில் உள்ள 4 பேரும் கூலித்தொழிலாளிகளே. மேலும் ஓட்டு வீட்டில் ஒரே ஒரு அறையில் தான் வசித்து வருகிறது இவரது குடும்பம்.

    மேகலா போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதோடு, ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். இந்த மாணவிக்கு சரியான உதவி கிடைத்தால் நிச்சயம் ஐ.ஏ.எஸ். ஆகி விடுவார். அதோடு மட்டுமல்லாமல் வில்வித்தையில் தொடர்ந்து உலக சாதனை புரிந்து தமிழகத்துக்கு சிறப்பை பெற்றுத் தருவார்.

    • கலாம் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.
    • மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார்- வாணி தம்பதியின் மகனும், கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளியில் 7-ம்வகுப்பு படிக்கும் மாணவனுமான ரித்விக், உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்களையும் நினைவு கூர்ந்து குறைந்த வினாடியில் கூறி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக கலாம் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.

    மேலும் அபாகஸ் மனக்கணித முறையில் நடைபெற்ற மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.சிறுவயது முதலே பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்று தன் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்கள் வென்றதே இது போன்ற சாதனையை படைக்க உறுதுணையாக இருந்ததாக ரித்விக் தெரிவித்துள்ளார்.

    மேலும் சாதனை படைத்த ரித்விக்கை செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர். 

    ×