search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிக்கெட்"

    • இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.
    • வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.

    கடந்த 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணித்துள்ளார்கள். 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், மற்றும் போன்பே போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அண்ணாமலையார் கோவிலில் இருந்து பார்பதற்காக கோவில் இணைய தளத்தில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது.
    • 10.2 மணிக்கு முடிந்தது. 2 நிமிடத்தில் ஆயிரத்து 700 அனுமதி சீட்டுகளும் விற்று தீர்ந்தன.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஆகியவற்றை அண்ணாமலையார் கோவிலில் இருந்து பார்பதற்காக கோவில் இணைய தளத்தில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது.

    நாளை அதிகாலை ஏற்றப்படும் பரணி தீப தரிசனம் காண 500 ரூபாய் விலையில் 500 அனுமதி சீட்டுகளும், நாளை மாலை அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீப தரிசனம் காண 600 ரூபாய் விலையில் 100 அனுமதி சீட்டுகளும், 500 ரூபாய் விலையில் ஆயிரம் அனுமதி சீட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    இதற்கான முன்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 10.2 மணிக்கு முடிந்தது. 2 நிமிடத்தில் ஆயிரத்து 700 அனுமதி சீட்டுகளும் விற்று தீர்ந்தன.

    இந்த இணையதளத்தில் அனுமதி சீட்டு பெற முயன்ற பெரும்பாலான பக்தர்கள் ஒரு அனுமதி சீட்டினை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

    • மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை விரிவாக்கம் செய்வதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
    • பொது மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சலுகையுடன் ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.

    சென்னை மெட்ரோ ரெயிலில் தினசரி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பொது மக்களுக்கு அவ்வப்போது சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.

    அந்த வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டணத்தில் பொது மக்கள் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

    ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாடிக் க்யூஆர், பேடிஎம், வாட்ஸ்அப் மற்றும் போன்பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • யு.டி.எஸ். செல்போன் செயலி தெற்கு ரெயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
    • யு.டி.எஸ். செல்போன் செயலி பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

    சென்னை :

    ரெயில் பயணிகள் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டை பெற, டிக்கெட் கவுண்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது. இதனால், பயணிகளின் நலன் கருதி எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யு.டி.எஸ். செல்போன் செயலி தெற்கு ரெயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகள் தங்களது ஸ்மார்ட் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, முன்பதிவில்லாத டிக்கெட்டை எடுத்துக்கொள்ள முடியும்.

    இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனாலும், முக்கிய ரெயில் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே, இந்த செயலியை பயன்படுத்தி, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க முடியும். யு.டி.எஸ். செல்போன் செயலியிலும் சில ரெயில் நிலையங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதை கிராமப்புறங்களில் உள்ள ரெயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயில் ஹால்ட் நிலையங்களில் யு.டி.எஸ். செல்போன் செயலியை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹால்ட் நிலையம் என்பது கிராமப்புறத்தில் உள்ள ரெயில் நிலையம் ஆகும். இதற்கு முன்பாக கிராமப்புற ரெயில் நிலையங்களில், டிக்கெட்டை பயணிகளுக்கு முகவர்கள் நேரடியாக வழங்குவார்கள். தற்போது, யு.டி.எஸ். செல்போன் செயலி மூலமாக பயணிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

    மேலும், இந்த செயலி மூலம் சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட் ஆகியவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்.

    சேலம் கோட்டத்தில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 23 ஆயிரத்து 191 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில்வே நிலையங்களிலும் தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் நின்று செல்கின்றன. தினமும் இந்த ரெயில்களில் பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.

    அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் குழுவினர் அவ்வபோது சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதன்படி கடந்த மே மாதத்தில் முறையான டிக்கெட் இன்றி பயணித்தவர், அதிக பார்சல் கொண்டு வந்தவர் உள்பட 23 ஆயிரத்து 191 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 1.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    ×