search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக்"

    • இந்தியாவில் இயற்கையும், அதன் வழிகளும் வழக்கமான கற்றல் ஆதாரங்களாக உள்ளன.
    • பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டுவர ஜி.20 நாடுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    புதுடெல்லி:

    ஜி.20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. ஜி.20 உச்சி மாநாடு வருகிற செப் டம்பர் மாதம் டெல்லியில் நடக்கிறது.

    இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஜி.20 கூட்டங்கள் நடந்து வருகிறது. இதில் வெளி நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்று வருகிறார்கள்.

    ஜி.20 நாடுகளின் சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை குறித்த அமைச்சர்கள் மாநாடு சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் தமிழில் வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது:-

    வரலாறு மற்றும் கலாச்சாரம் நிறைந்த சென்னைக்கு உங்களை வரவேற்கிறேன். யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரத்தை பார்க்க உங்களுக்கு நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். எழுச்சியூட்டும் சிறந்த அழகுடன் இருக்கும் கல் சிற்பங்கள் உள்ளன. இது ஒரு கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.

    தண்ணீரை மேலே இழுத்து மேகம் மழையாக திரும்ப கொடுக்கவில்லை என்றால் பெருங்கடல்கள் கூட சுருங்கி விடும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். இந்தியாவில் இயற்கையும், அதன் வழிகளும் வழக்கமான கற்றல் ஆதாரங்களாக உள்ளன.

    நதிகளோ, தண்ணீரை குடிப்பதில்லை. மரங்களும் தங்கள் பழங்களை உண்பதில்லை. மேகங்களும் அவற்றின் நீரால் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை உண்பதில்லை. அவைகளை இயற்கை நமக்கு வழங்குகிறது.

    அதுபோல நாமும் இயற்கைக்கு வழங்க வேண்டும். பூமித்தாயை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நமது அடிப்படை கடமை. இந்த கடமை பலரால் மீக நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டதால் இன்று அது கால நிலை நடவடிக்கை என்ற வடிவத்தை எடுத்துள்ளது. பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தெற்குலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டுவர ஜி.20 நாடுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் சட்டப்பூர்வ கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் அடிப்படையில் உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

    2030-ம் ஆண்டு இலக்கை விட 9 ஆண்டுகள் முன்னதாகவே புதை வடிவமற்ற எரிபொருள் மூலங்களில் இருந்து இந்தியா நிறுவப்பட்ட மின்சாரத் திறனை பெற்றுள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

    2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான இலக்கையும் நிர்ணயித்து உள்ளோம். புராஜெக்ட் டைகர் திட்டம் விளைவாக இன்று உலகில் உள்ள 70 சதவீத புலிகள் இந்தியாவில்தான் காணப்படுகின்றன. புராஜெக்ட் லயன் மற்றும் புராஜெக்ட் டால்பின் திட்டத்திலும் இந்தியா செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குஜராத்துக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, ராஜ்கோட் அருகே புதிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார். மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

    பிரதமர் மோடி இன்று குஜராத்தின் காந்தி நகரில் 'செமிகான் இந்தியா 2023' மாநாட்டை தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டார். பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    • சாலையோர கடைகள், தள்ளு வண்டிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ககூடாது.
    • பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    சென்னையில் 6 நாட்கள் நடைபெறும் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று(புதன்கிழமை) மற்றும் 28-ந்தேதி மாமல்லபுரம் வருகை தரும் அவர்கள் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர்.

    இந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளு வண்டிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ககூடாது என்றும், அதை மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பேரூராட்சிகளின் இணை இயக்குனர் உமா மகேஸ்வரி பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து. நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் பேரூராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிந்து சென்று ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் என பல கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 400 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • வீடு மற்றும் கடைகளில் பதுக்கி வைத்த 110 கிலோ பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடைகளில் வைத்திருந்த கேரி பைகளையும் பறிமுதல் செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் பிளாஸ்டிக் கப்புகள், கேரி பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த கூடாது என நகராட்சி எச்சரித்துள்ளது. இதனையும் மீறி ஆங்காங்கே பிளாஸ்டிக் பயன்பாடுகள் இருப்பதாக தொடர்ந்து நகராட்சிக்கு தகவல் வந்தது.

    இந்தநிலையில் திருமங்கலம் முகமதுஷா புரம் பகுதியில் ஒரு வீட்டில் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகளவில் பதுக்கி இருப்ப தாக பொதுமக்களிடம் இருந்து நகராட்சிக்கு தகவல் வந்தது.

    இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி நகராட்சி சுகாதார அலுவலர் சண்முகவேலு, சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், துப்புரவு மேற்பார்வை யாளர்கள் ராஜலட்சுமி, யமுனா அடங்கிய குழுவினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்றனர்.

    அங்குள்ள வீடுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுப்பது போல் வீடு வீடாக சென்று துப்புரவு பணியாளா்கள் கணக்கெடுத்தபடியே சோதனை நடத்தியதில் ஒரு வீட்டில் அதிகளவில் பிளாஸ்டிக் கப்புகள் இருந்ததுதெரியவந்தது. உடனே அதிகாரிகள் அந்த வீட்டில் சென்று பதுக்கிவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்தனர்.

    அந்த வீட்டில் விசாரணை நடத்திய போது திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளின் கடைகளுக்கு டீ கப்பாக இந்த பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்த நகராட்சி அதி காரிகள் பிளாஸ்டிக் கப்பு களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளில் வைத்திருந்த கேரி பைகளை பறிமுதல் செய்தனர்.

    • தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.
    • கலெக்டர் அம்ரித் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுரைகளை வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் கல்லார் தூரிப்பாலம் சோதனைச்சாவடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்பு கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத் தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் குன்னூர் கல்லார் தூரி பாலம் சோதனை சாவடி பகுதிகளில், மாவட்ட கலெக்டர் அவர்கள் முன்னிலையில், வருவாய்த்துறை அலுவலர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில், கொண்டு வரப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்த போது, வாகனங்களில் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதனைதொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அம்ரித் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்தில், பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுரைகளை வழங்கினார்.

    ஆய்வின் போது, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. மோகன குமார் மங்கலம், உட்பட பலர் உடனிருந்தனர்.

    • மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்பட்டது.
    • பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.



    பயணிகள் நிழற்கூடத்தை சுத்தம் செய்த ஊழியர்கள். 

     திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் பயணி கள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து மதுரை, ராமேசுவரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பஸ் நிலையத்தில் இருந்து செல்வது வழக்கம். இந்த நிழற்கூடத்தை மூதாட்டி ஒருவர் தனது வீடு போல் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தார்.

    அவர் அந்த நிழற்கூடத்தில் பஸ் பயணிகள் யாரையும் அமர விடாமலும், அவதூறாக பேசியும் வந்துள்ளார். மேலும் அந்த மூதாட்டி நரிக்குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பஸ் நிலையம் அருகிலேயே மலை போல் குவித்து வைத்திருந்தார்.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது. இதனால் பயணிகள் நிழற்கூடத்தின் அருகில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி 'மாலைமலர்' நாளிதழில் வெளிவந்தது.

    இதையடுத்து நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் உத்தரவின் பேரில் நரிக்குடி ஊராட்சி செயலர் கவிதா மேற்பார்வையில் ஊராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். பஸ் நிறுத்தத்தின் அருகில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்களையும் அங்கிருந்து அகற்றினர்.

    பின்னர் பஸ் நிறுத்தத்தில் இருந்த ஆக்கிரமிப்பையும் அகற்றி சுத்தப்படுத்தினர். இதனால் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • ஏராளமான படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை யின் பேரில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார். 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மற்றும் காகிதம், கண்ணாடி துண்டுகள், தேங்காய் நார், சணல் போன்ற கழிவு பொருட்களில் இருந்து கலை படைப்புகளை தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் போட்டி போட்டு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்வத்துடன் களம் இறங்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஏராளமான படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

    மாவட்ட அளவில் நடை பெறும் போட்டியை மிஞ்சும் வகையில் மாணவிகள் நூற்றுக்கணக்கான படைப்பு களை தயார் செய்து காட்சிப்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

    பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் ஆகியோர்கள் கலை படைப்புகளை பார்வை யிட்டு மாணவிகளின் தயா ரிப்பு குறித்து கேட்டறிந்து பாராட்டினர். இறுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    • பிளாஸ்டிக் பொருள்களை காட்டு யானைகள் உண்பதாக தகவல்கள் வெளியாகின.
    • குன்னூா் வனச்சரகா் ரவீந்திரநாத் தலைமையில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வன பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன.

    குன்னூா்- மேட்டுப்பாளையம் ெரயில் பாதையில் காட்டு யானைகள் அடிக்கடி நடமாடுவது வழக்கம். சுற்றுலாப் பயணிகள் மலை ெரயிலில் பயணிக்கும்போது வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருள்களை காட்டு யானைகள் உண்பதாகவும், யானை கழிவுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதை தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் கெளதம் ஆலோசனையின்படி, குன்னூா் வனச்சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனவா் கோபாலகிருஷ்ணன் வனகாப்பாளா்கள் திலீப், லோகேஷ் விக்ரம் அடங்கிய குழுவினா் ரன்னிமேடு ரெயில் நிலையத்தில் தொடங்கி மலை ரெயில் பாதை வரை கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

    ெரயில் பாதையில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுலா பயணிகள் வீசி செல்வதால், ரெயிலில் ஏறும்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயணிகளிடம் இருந்தால் அதனை ரெயில்வே பணியாளா்கள் பறிமுதல் செய்ய வேண்டும்.

    மேலும், ரெயில்வே நிா்வாகம் அவ்வப்போது மலை ரெயில் பாதையில் உள்ள பிளாஸ்டிக்கை சுத்தம் செய்தால் மட்டுமே வன விலங்குகளை பாதுகாக்க முடியும் என்று வனவிலங்கு ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

    • பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
    • தேசிய மாணவர் படை மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் புதுப்பட்டிணம் கடற்கரையில் தூய்மைபணி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

    மேலும், கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர்கள் லெப்டினன்ட் அப்பாஸ் மற்றும் டி.ஒ. அமீர் காசிம் ஆகியோர் செய்திருந்தனர்.

    நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு மீண்டும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால்  மண்வளம் பாதிப்பதோடு நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விடும் அபாயம் உள்ளது.
     
    கடந்த காலங்களில் அனைத்து தேவைகளுக்கும் துணி பைகளையே மக்கள் பயன்படுத்தி வந்தனர். கால மாறுபாட்டின் காரணமாக சிறிய பெட்டிகடைகள் முதல் பெரிய மளிகை கடைகள் வரை பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து சஞ்சய்விட்டது. பிளாஸ்டிக் பைகள் மக்கும் திறன் இல்லாததால் இந்த பைகள் மண்ணில் மக்காமல் புதையுண்டு நிலத்தடிநீர் தேங்குவதை தடுக்கிறது. மேலும் மண் வளத்தையும் பாதிக்கச்செய்கிறது.

    தற்போது பிளாஸ்டிக் கப் மற்றும் பாட்டில்கள் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் குவிகிறது. இந்த பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணில் புதையுண்டு மண் வளத்தை பாதிக்க செய்கிறது. மேலும் வெளியிடங்களில் மது அருந்துபவர்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் கப்புகளை விட்டு செல்வதால் வயல்காடுகள் முதல் அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகரித்து விட்டது. 

    இனிவரும் காலங்களில் இந்த பிளாஸ்டிக் பொருள்களால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். 
    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

    இதன் காரணணமாக பிளாஸ்டிக் பயன்பாடு 95 சதவீதம் குறைந்தது. தற்போது கீழக்கரையில் நகராட்சி அதிகாரிகள்  பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்டு கொள்ளாமல் உள்ளனர். 

    இதை சாகமாக்கிய சில வியாபாரிகள் மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.ஆகவே பிளாஸ்டிக் பைகள் தாரளமாக புழக்கத்தில் உள்ளது. பிளாஸ்டிக் பாதிப்பின் தன்மை உணர்ந்து இதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ×