search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "piles of plastic bottles"

    • மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்பட்டது.
    • பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.



    பயணிகள் நிழற்கூடத்தை சுத்தம் செய்த ஊழியர்கள். 

     திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் பயணி கள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து மதுரை, ராமேசுவரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பஸ் நிலையத்தில் இருந்து செல்வது வழக்கம். இந்த நிழற்கூடத்தை மூதாட்டி ஒருவர் தனது வீடு போல் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தார்.

    அவர் அந்த நிழற்கூடத்தில் பஸ் பயணிகள் யாரையும் அமர விடாமலும், அவதூறாக பேசியும் வந்துள்ளார். மேலும் அந்த மூதாட்டி நரிக்குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பஸ் நிலையம் அருகிலேயே மலை போல் குவித்து வைத்திருந்தார்.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது. இதனால் பயணிகள் நிழற்கூடத்தின் அருகில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி 'மாலைமலர்' நாளிதழில் வெளிவந்தது.

    இதையடுத்து நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் உத்தரவின் பேரில் நரிக்குடி ஊராட்சி செயலர் கவிதா மேற்பார்வையில் ஊராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். பஸ் நிறுத்தத்தின் அருகில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்களையும் அங்கிருந்து அகற்றினர்.

    பின்னர் பஸ் நிறுத்தத்தில் இருந்த ஆக்கிரமிப்பையும் அகற்றி சுத்தப்படுத்தினர். இதனால் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


    ×