search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் சோதனைச்சாவடியில் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த கலெக்டர்
    X

    குன்னூர் சோதனைச்சாவடியில் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த கலெக்டர்

    • தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.
    • கலெக்டர் அம்ரித் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுரைகளை வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் கல்லார் தூரிப்பாலம் சோதனைச்சாவடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்பு கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத் தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் குன்னூர் கல்லார் தூரி பாலம் சோதனை சாவடி பகுதிகளில், மாவட்ட கலெக்டர் அவர்கள் முன்னிலையில், வருவாய்த்துறை அலுவலர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில், கொண்டு வரப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்த போது, வாகனங்களில் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதனைதொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அம்ரித் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்தில், பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுரைகளை வழங்கினார்.

    ஆய்வின் போது, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. மோகன குமார் மங்கலம், உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×