search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பறிமுதல்"

    • சாலையோர கடைகள், தள்ளு வண்டிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ககூடாது.
    • பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    சென்னையில் 6 நாட்கள் நடைபெறும் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று(புதன்கிழமை) மற்றும் 28-ந்தேதி மாமல்லபுரம் வருகை தரும் அவர்கள் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர்.

    இந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளு வண்டிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ககூடாது என்றும், அதை மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பேரூராட்சிகளின் இணை இயக்குனர் உமா மகேஸ்வரி பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து. நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் பேரூராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிந்து சென்று ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் என பல கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 400 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்த போது சிக்கியது
    • அபராதம் விதித்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி தலைமையில் சுகாதார ஆய்வாளர் குமார், உதவி பொறியாளர் கேசவன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்து தெரிய வந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் 3 கடைகளில் 16 கிலோ பிளாஸ்டிக் கை பறிமுதல் செய்ததோடு ஒவ்வொரு கடைகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • 5 கடைகளில் 30 கிலோ பறிமுதல்
    • ரூ.2500 அபராதம்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கேசவன் தலைமையில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சுமார் 5 கடைகளில் 30 கிலோ அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்க ப்பட்டது.

    மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கூறியதாவது:-

    ஏலகிரி மலை மிக சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதால் அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க திடீர் சோதனை மேற்கொ ள்ளப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பொருட்களை விற்ற 5 கடைகளுக்கு ரூ.2500 அபராதம் விதிக்க ப்பட்டது.

    மேலும் சில கடைகளுக்கு பிளாஸ்டிக்களை விற்கக் கூடாது என எச்சரித்துள்ளார்.

    மீண்டும் சோதனையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த ஆய்வின்போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் துணை தலைவர் திருமால் ஊராட்சி செயலாளர் பாண்டியன், மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • குடோனுக்கு சீல்
    • கலெக்டர் ஆய்வு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்து இருதார்.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

    ஆனாலும் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட தண்டபாணி கோவில் தெரு, தர்மராஜா கோவில் தெரு, பஸ் நிலையம் ஆகிய தெருக்களில் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுகிறதா என திடீரென ஆய்வு செய்தார்.

    அப்போது கடைகள், பூக்கடை கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளிலிருந்து 7 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் தர்மராஜா கோவிலுக்கு அருகே பிளாஸ்டிக் பைகளை இருப்பு வைக்கப்பட்டுள்ள ஒரு குடோனிற்கு சீல் வைக்கப்பட்டது.

    பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க கலெக்டர் திடீரென கடைகளில் ஆய்வு நடத்தியதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து கடைகளில் வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பொருட்களை மறைத்து வைத்தனர்.

    சிலர் கடைகளை பூட்டி விட்டு சென்றனர். கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, தாசில்தார் சிவப்பிரகாசம், வருவாய் துறை, நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தம்ளர்கள், பைகள் சுமார் 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    • 2 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    திருநெல்வேலி:

    நெல்லை மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர்கள் அரசகுமார், முருகேசன், சாகுல்அமீது, இளங்கோ சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் நெல்லை டவுன் பகுதிகளில் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தம்ளர்கள், பைகள் சுமார் 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த 2 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 127 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதனைத் தொடர்ந்து மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வணிக கடைகள் உள்ள பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். அப்போது 127 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கும் படி ஊராட்சி செயலாளர் மொய்தீனிடம் ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து 8 கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

    • போடியில் பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • இந்த அதிரடி ஆய்வில் அனைத்து கடைகளிலும் சுமார் 49 மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றில் ஏழு மாதிரிகளில் தரமற்ற கலப்பட ரசாயனங்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியில் பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன் உத்தரவின் படி போடி உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா தலைமையில் கம்பம், உத்தமபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் கலர் ரசாயனம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள், முகவரி இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் போன்றவை சுமார் 22 கிலோ அளவில் கைப்பற்றப்பட்டு அவைகள் அழிக்கப்பட்டது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்தக் கடைகளில் முதல் முறை என்பதால் அனைவரையும் உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை செய்தனர்.

    பஸ் நிலையத்தில் முக்கிய பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

    போடி கீழத்தெரு மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் டீக்கடை ஒன்றில் உணவு பதார்த்தங்கள் தரம் இல்லாமல் தயாரிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அங்கு தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

    அங்கு கைப்பற்றப்பட்ட எண்ணை பதார்த்தங்கள் உடனடியாக நடமாடும் உணவு ஆய்வு வண்டி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தடை செய்யப்பட்ட கலர் ரசாயனங்கள் கலந்து இருப்பதைக் கண்டு தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்புடைய எண்ணை பொருட்கள் அனைத்தும் குப்பையில் கொட்டப்பட்டது.

    மீண்டும் இது போல் தவறு நடந்தால் கடைக்கு சீல் வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    இந்த அதிரடி ஆய்வில் அனைத்து கடைகளிலும் சுமார் 49 மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றில் ஏழு மாதிரிகளில் தரமற்ற கலப்பட ரசாயனங்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது.

    • கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
    • பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    மண்ணடி, பிராட்வே, பாரிமுனை, பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இதையடுத்து மண்டல அலுவலர் வேல்முருகன், பகுதி சுகாதார அலுவலர் மாப்பிள்ளைதுரை மற்றும் அதிகாரிகள் மண்ணடி, பிடாரியார் கோயில் தெருவில் லாரிகள் மூலம் பார்சல் அனுப்பும் அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள இரண்டு டன் பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரிந்தது. அவை வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அந்தப் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • நாடு முழுவதும் ஜூலை 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல்லில் இருந்து புதுக்கோட்டைக்கு கடத்தப்பட இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 5 டன் பிளாஸ்டிக் பைகள் மற்றும் 60ஆயிரம் பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் ஜூலை 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதனை பயன்படுத்தி வரும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட காந்திமார்க்கெட் பின்புறம் தனியார் பார்சல் சர்வீசில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாநகர் நல அலுவலர் இந்திரா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது திண்டுக்கல்லில் இருந்து புதுக்கோட்டைக்கு கடத்தப்பட இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 5 டன் பிளாஸ்டிக் பைகள் மற்றும் 60ஆயிரம் பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ரங்கராஜ், முருகையா ஆகியோர் பறிமுதல் செய்தனர்.

    தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, அதனை பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    ×