search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு"

    • கூட்டுறவு நிறுவனங்களில் 7 நாட்களும் கூட்டுறவு கொடியேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா பூர்வாங்க கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் கூட்டுறவு வார விழாக்குழு தலைவர் பழனீஸ்வரி தலைமை தாங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    இந்த 70-வது அனை த்திந்திய கூட்டுறவு வார விழா "ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு" எனும் முதன்மை மைய கருப்பொருளை மையமாக கொண்டு வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் ஒரு தலைப்பில் 7 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.

    மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் 7 நாட்களும் கூட்டுறவு கொடியேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கும்ப கோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் மற்றும் விழாக்குழு துணை தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இதில் தஞ்சாவூர் சரக துணைப்பதிவாளர் (பொறுப்பு) அப்துல்மஜீத், பட்டுக்கோட்டை சரக துணைப்பதிவாளர் சுகி.சுவாமிநாதன், தஞ்சாவூர் பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் கருப்பையா, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் கண்ணன், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய உதவியாளர் முருகானந்தம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
    • பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நெடுஞ்சாலைத்துறை தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பாக பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

    பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார், இப்பேரணியில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், பட்டுக்கோ ட்டை நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் விஜயக்குமார், திருச்சி சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் புவனேஸ்வரி, பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் செல்வராஜ், பட்டுக்கோட்டை நகர் செந்தில்குமார், பட்டுக்கோ ட்டை மோட்டார் மன்ற வாகன தலைவர் சண்முகபிரியா ஆய்வாளர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லுாரி, ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் மற்றும் பதாகைகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சியானது பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்துநர்களாக இக்கல்லுாரியின் செயலர். கணேசன், முதல்வர் விஜ யலெட்சுமி, நெடுஞ்சா லைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர்கள் பானுதாசன், செந்தில்தம்பி மற்றும் பேரணியில் பங்கேற்றோர் கலந்து கொண்டனர்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு காணெளி காட்சி மூலம் திருச்சி சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் புவனேஸ்வரி அறிவுரை வழங்கினார்.

    • அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
    • பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொ ண்டாடுவது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை விளார் சாலை பர்மா காலனி தில்லை நகரில் உள்ள தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதற்கு டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஆரோன்ராஜ், பள்ளித்தாளாளர் லாரன்ஸ், நிர்வாக அலுவலர் டோனி சுகந்த், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் (போக்குவரத்து) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாணவி ஷோபிகா வரவேற்று பேசினார்.

    இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது:-

    அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சிறுவர், சிறுமிகள் கண்டிப்பாக பெரியோர்கள் முன்னிலையில் தான் பட்டாசுகளை படிக்க வேண்டும்.

    பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    செருப்பு அணிந்து கொண்டு வெடி வெடிக்க வேண்டும். முக்கியமாக வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.

    பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவியாக தீப்புண் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.

    பின்னர் உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    எந்த காரணம் கொண்டும் தீக்காயம் ஏற்பட்டால் பேனா மை, வாழைச்சாறு, பேஸ்ட் போன்றவற்றை தடவக்கூடாது.

    தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 200 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

    இவற்றில் 190 தீ விபத்துக்கள் அலட்சியம், கவனக் குறைவால் ஏற்பட்டது.

    எனவே அலட்சியம், கவனக்குறைவு இல்லாமல் விபத்தில்லா தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜோதி ,சக்தி, ஆசிரியை காயத்ரி மற்றும் மாணவ- மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார். முன்னதாக பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும் எனவும், எப்படி வெடிக்க கூடாது எனவும் மாணவ- மாணவிகள் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
    • பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் அறிவுறுத்தலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சீர்காழி நகரில் அனைத்து வர்த்தக, வணிக கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுத்திடவும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்திடவும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் இன்றியமையாததாக இருப்பதால் அனைத்து வர்த்தக வணிக கடைகளில் உள்புறம் வெளிப்புறம் சாலையை நோக்கியவாறு சிசிடிவி அமைத்திடவும் வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்திடவும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதேபோல் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடிடவும் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடித்து பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டது.

    • அனைவரும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை, சுற்றுச்சூழல் துறை, திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்க விழா நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமை தாங்கினார். பொறியாளர் பிரதான் பாபு, தேசிய பசுமைப்படை திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    இந்த தீபாவளியில் அனைவரும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ஆஸ்பத்திரிகள், வயதான வர்கள், குழந்தைகள், குடிசை வீடுகள் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    அரசு அறிவித்த நேரங்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மேலாளர் சீதாலெட்சுமி, சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் கார்த்தி, சுகாதார மேற்பார்வையாளர்கள் வீரையன், பெரமையன், ஈஸ்வரன், தூய்மை திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    • தீபாவளி பண்டிகை யை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகை யை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு மாணவ ,மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்கள். அப்போது சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோ ர்கள் முன்னிலை யில் வெடிக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வா னங்கள் வெடிக்கும் போது காலணி அணிய வேண்டும். பட்டாசுகளை மைதா னங்கள் மற்றும் சமதளத்தில் வைத்து வெடிக்க வேண்டும்.

    பட்டாசு மற்றும் புஸ்வானங்கள் வெடிக்கும் போது அருகில் தண்ணீர் வாளி வைத்திருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது நீண்ட வத்திக்குச்சிகளை வைத்து பட்டாசுகளின் பக்கவாட்டில் சற்று தொலைவில் நின்று கொண்டு பற்றவைக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வா னங்கள் பயன்படுத்து ம் போது இறுக்கமான ஆடைகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.

    உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தெரி வித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல் பட்டாசு வெடிப்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்ற து. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசியில் தீபாவளி பண்டிகையையொட்டி தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பருவமழை பெய்ய தொடங்கி உள்ளதால் நீர் நிலைகளில் இறங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

    தாயில்பட்டி

    சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சிவகாசியில் காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத் தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜே.சி. எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது.

    சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசுகையில், பட்டாசு களை கையில் வைத்து வெடிக்க கூடாது, பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீரை ஊற்ற வேண்டும். தீக்காயத்திற்கு தண்ணீர் தான் சிறந்த மருந்து.

    உடலில் தீப்பற்றினால் ஓட முயற்சி செய்யக் கூடாது. கனமான போர்வை போன்ற துணிகளை போர்த்தி தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும் . உடனடியாக மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். பருவமழை பெய்ய தொடங்கி உள்ள தால் நீர் நிலைகளில் இறங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

    மழை நீரை பார்த்து குளங்கள் கண்மாய்களில் குளிக்க ஆர்வம் காட்ட கூடாது. முறையாக நீச்சல் தெரியாமல் நீரில் இறங்க கூடாது. நீர் நிலைகளில் பள்ளம் ஆபத்து இருப்பதை உணர வேண்டும். மேலும் மழை பெய்யும் போது இடி, மின்னல் ஏற்படும்போது மரதடியில் ஒதுங்க கூடாது. தரையில் அமர்ந்து குனிந்து நிலையில் உட்கார வேண்டும். செல்போனையும் உபயோகப்படுத்தக் கூடாது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.

    மேலும் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.

    • தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பாதுகாப்புடன் விபத்தில்லாத தீபாளியாக கொண்டாடுவோம் என கூறினர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி தீயணைப்புத் துறை நிலைய அலுவலகத்தில் பட்டாசுக் கடை நடத்துபவர்கள் மற் றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் வினோத் தலை மையில் நடைபெற்றது. உதவி மாவட்ட அலுவலர் பாண்டி, தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பட் டாசு கடை வைத்து நடத்தும் நபர்கள் தகுந்த பாதுகாப்பு டன் நடத்த வேண்டும் குறிப் பாக மின்சார வயர்கள் வெளியே தொங்கும்படி இருக்கக் கூடாது, அனுமதி பெற்ற அளவுக்கு தான் பட் டாசுகள் கடையில் இருக்க வேண்டும், அதிகமான ஊழி யர்களை கடை யில் பணி யில் அமர்த்த கூடாது,

    அதிக வெப்பம் தரக்கூ டிய போக்கஸ் லைட்டுகளை பயன்படுத்தக் கூடாது, இரவில் கடையை அடைத்து விட்டு செல்லும்போது அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு விட்டதா? என்று பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டும். மேலும் மெயின் பாக்சை அமர்த்தி விட்டு செல்வது நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்த னர்.

    இதன் பின்பு கடை பணி யாளர்களுக்கு தீய ணைப்பு கருவியை எவ்வாறு பயன்ப டுத்த வேண்டும் என்பதனை அனுப்பானடி நிலைய அலு வலர் கந்தசாமி, திருப்பரங் குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் ஆகி யோர் செயல் விளக்கம் அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து உதயகுமார் கூறுகையில், பழைய தீயணைப்பு கருவி பி.சி. டைப் மாடல் கருவியை பயன்படுத்த வேண்டாம் என்றும் தற்போது ஏ.பி.சி. என்ற புதிய வகையான தீயணைப்பு கருவியை பயன் படுத்த வேண்டும் மேலும் சி.ஓ.2 என்ற தீயணைப்பு கருவியையும் கடைகளில் வைத்திருக்க வேண்டும் என் றும் வலியுறுத்தினார்.

    மேலும் பட்டாசு கடை அருகே தங்கள் கடையின் வெடி அதிக சத்தத்துடன் வெடிக்கும் என்பதனை காட்டுவதற்காக கடையின் அருகே டெமோ காட்டக்கூ டாது என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் யுவராஜ் பட்டா சுகள், ஸ்ரீ பெரியாச்சி பட் டாசு கடை போன்ற பட்டாசு கடைகளின் மற்றும் நிறுவ னத்தின் உரிமையாளர்கள், பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளும், ஆலோசனைகளும் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    • தீபாவளி பண்டிகை நேரங்களில் விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    முத்தூர்:

    காங்கயம் தீயணைப்பு துறையினர் சார்பில் தீயணைப்பு நிலைய அதிகாரி மணிகண்டன் தலைமையில் காங்கயம் பஸ் நிலையம், கடைவீதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகை நேரங்களில் விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பட்டாசுகள் திறந்தவெளியில் கூரை வீடுகள் இல்லாத இடங்களில் வெடிக்க வேண்டும். கைக்குழந்தைகள் இருக்கும் வீடுகள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. எண்ணெய் சேமிக்கும் குடோன்கள், தேங்காய் பருப்பு குடோன்கள், பெட்ரோல் பங்குகள் இருக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. கையில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. சிறியவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளும், ஆலோசனைகளும் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

    • வருகிற ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    வருகிற ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நூறு சதவீத ஓட்டுப்பதிவை சித்தரிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 25 பள்ளிகள், 25 கல்லூரிகளில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் நிப்ட்-டீ பேஷன் கல்லூரியில், போஸ்டர் உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில், விதவிதமான போஸ்டர் ஓவியங்கள் வரைந்து வண்ணம் தீட்டினர். போட்டியில், மாணவர் பரீத் அகமது முதலிடமும், மாணவி திவ்யாஸ்ரீ இரண்டாமிடமும், ஸ்வேதா மூன்றாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் தெற்கு தாலுகா தனி தாசில்தார் பாபு, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கதிர்வேல், கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார். பள்ளி, கல்லுாரிகளில் தனித்தனியே போட்டி நடத்தப்பட்டு சிறந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசு 500 ரூபாய், இரண்டாம் பரிசு 300 மற்றும் மூன்றாம் பரிசு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. அவற்றில், மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் ஓவியத்துக்கு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.2 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் ஓவியத்துக்கு 1,000 ரூபாய் என வழங்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவில் சிறந்த ஓவியத்துக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. சிறந்த ஓவியங்கள் வருகிற தேர்தலில், நூறு சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வுக்கான போஸ்டர்களில் பயன்படுத்தப்படும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • ஊழல் மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    பல்லடம்:

    தமிழ் நாட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் ஊழல் தடுப்புத்துறை துணை கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் ஆய்வாளர் சசிலேகா தலைமையில் பல்லடம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஊழல் மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அரசு மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. இதில் பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் குறித்து அறிவுறுத்தல்
    • கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்பு

    அருவங்காடு,

    இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் ஒருபகுதியாக குன்னூர் பஸ் நிலையத்தில் கோட்டாட்சியர் பூஷனகுமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது வாக்களிக்க தகுதி உடையவர்கள் அடையாள அட்டைபெற விண்ணப்பிக்க வேண்டும், மேலும் வாக்காளர் பெயர்திருத்தம், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் மனு செய்து சரிசெய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், தேர்தல் சிறப்புபிரிவு அதிகாரி கோபி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×