search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cooperative Meeting"

    • கூட்டுறவு நிறுவனங்களில் 7 நாட்களும் கூட்டுறவு கொடியேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா பூர்வாங்க கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் கூட்டுறவு வார விழாக்குழு தலைவர் பழனீஸ்வரி தலைமை தாங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    இந்த 70-வது அனை த்திந்திய கூட்டுறவு வார விழா "ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு" எனும் முதன்மை மைய கருப்பொருளை மையமாக கொண்டு வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் ஒரு தலைப்பில் 7 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.

    மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் 7 நாட்களும் கூட்டுறவு கொடியேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கும்ப கோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் மற்றும் விழாக்குழு துணை தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இதில் தஞ்சாவூர் சரக துணைப்பதிவாளர் (பொறுப்பு) அப்துல்மஜீத், பட்டுக்கோட்டை சரக துணைப்பதிவாளர் சுகி.சுவாமிநாதன், தஞ்சாவூர் பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் கருப்பையா, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் கண்ணன், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய உதவியாளர் முருகானந்தம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×