குன்னூர் பஸ் நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் குறித்து அறிவுறுத்தல் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்பு
குன்னூர் பஸ் நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
Published on

அருவங்காடு,

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக குன்னூர் பஸ் நிலையத்தில் கோட்டாட்சியர் பூஷனகுமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது வாக்களிக்க தகுதி உடையவர்கள் அடையாள அட்டைபெற விண்ணப்பிக்க வேண்டும், மேலும் வாக்காளர் பெயர்திருத்தம், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் மனு செய்து சரிசெய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், தேர்தல் சிறப்புபிரிவு அதிகாரி கோபி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com