search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
    X

    விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்

    • அனைவரும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை, சுற்றுச்சூழல் துறை, திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்க விழா நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமை தாங்கினார். பொறியாளர் பிரதான் பாபு, தேசிய பசுமைப்படை திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    இந்த தீபாவளியில் அனைவரும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ஆஸ்பத்திரிகள், வயதான வர்கள், குழந்தைகள், குடிசை வீடுகள் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    அரசு அறிவித்த நேரங்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மேலாளர் சீதாலெட்சுமி, சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் கார்த்தி, சுகாதார மேற்பார்வையாளர்கள் வீரையன், பெரமையன், ஈஸ்வரன், தூய்மை திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×