search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேகர்பாபு"

    • ஒன்றிரண்டு சதவீதம் வாக்குகளை வைத்திருக்கும் பா.ஜனதாவை தி.மு.க.வுடன் ஒப்பிடவே கூடாது.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெல்லும்.

    சென்னை:

    சென்னை தங்கசாலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஜெயின் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.10 ஆயிரம், மற்றும் குழந்தைகளுக்கான பரிசு பெட்டகம் ஆகியவற்றை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் மனதில் நிறைந்துள்ளார். இதை மாற்ற யார் வந்தாலும், என்ன செய்தாலும் முடியாது.

    பா.ஜனதா அரசு கடந்த 9 ஆண்டுகளில் செய்த பாவங்களுக்கு பிராயசித்தம் தேடி பாதயாத்திரை செல்கிறார்கள்.

    ஒன்றிரண்டு சதவீதம் வாக்குகளை வைத்திருக்கும் பா.ஜனதாவை தி.மு.க.வுடன் ஒப்பிடவே கூடாது.

    திராவிட மண்ணில் தி.மு.க. பெரியார், அண்ணா, கலைஞரால் வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கம். இந்த இயக்கத்துக்கு எதிராக எப்படிப்பட்ட ஜாம்பவான் களை கொண்டு நிறுத்தினாலும் வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டில் மோடியே எதிர்த்து நின்றாலும் தி.மு.க.விடம் தோற்பது உறுதி. இதை சவாலாகவே சொல்கிறேன்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 16 வயதிற்குள்ளும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவில்களில் சமூக நீதியை நிலைநாட்டவும், இறைவனுக்கு ஆற்றும் சேவையில் அனைவருக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நிறைவேற்றிடும் வகையிலும், உரிய பயிற்சிகள் வழங்கிடவும் கோவில்கள் சார்பில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சியும், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 மற்றும் பகுதி நேரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கதொகை ரூ. 1500 வழங்கப்படுகிறது.

    அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 24 வயதிற்குள்ளும், ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 20 வயதிற்குள்ளும், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 16 வயதிற்குள்ளும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேத ஆகம பாடசாலையில் சேர வயது வரம்பு 12 முதல் 16 வயதிற்குள்ளும் மற்றும் பிரபந்த விண்ணப்பர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 8 முதல் 18 வயதிற்குள் இருப்பதோடு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த கோவில்களின் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அந்தந்த கோவில் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பஸ்கள் வந்து செல்லவும் பணிமனைக்கு செல்லவும் தாராளமாக இடவசதி இருப்பதால் இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பேருந்து நிலையத்தில் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 782 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் மற்றும் 30 கடைகளும் அமையவுள்ளது.

    செங்கல்பட்டில் இப்போது உள்ள பஸ் நிலையம் மிகுந்த நெருக்கடியான இடத்தில் உள்ளது. இதனால் அங்கு புதிய பஸ் நிலையம் வெம்பாக்கம் ஏரி அருகே மெயின்ரோட்டுக்கும் பி.வி.களத்தூர் ரோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்த புதிய பஸ் நிலையத்திற்கான இடத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே. சேகர்பாபு ஆகிய இருவரும் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர்.

    பஸ் நிலையம் 14 ஏக்கரில் அமையும் பகுதியில் ரோட்டுக்கு மருத்துவக் கல்லூரி மைதானம் அருகே எதிர்புறம் காலி இடம் ஏக்கர் கணக்கில் உள்ளதால் அங்கு 5.64 ஏக்கரில் பஸ் டெப்போ (பணிமனை) அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பஸ்கள் வந்து செல்லவும் பணிமனைக்கு செல்லவும் தாராளமாக இடவசதி இருப்பதால் இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    செங்கல்பட்டில் புதிதாக அமையவிருக்கின்ற இப்பேருந்து நிலையத்தில் சுமார் 46 பேருந்துகள் நிற்கும் வகையிலும், அதேபோன்று 69 பணி மனைகள் நிறுத்துவதற்குண்டான வகையிலும் அமைக்கப்பட இருக்கின்றன. இப்பேருந்து நிலையத்தில் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 782 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் மற்றும் 30 கடைகளும் அமையவுள்ளது.

    மேலும், இப்பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்லவும், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளோடு இப்பேருந்து நிலையம் அமையும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • இறை அன்பர்களுக்கு தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும்.
    • கடைசியாக கோவிலுக்கு 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.19 கோடி செலவில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் தொடக்க விழா நடை பெற்றது. இதையொட்டி ராஜகோபுரம், ராஜகோபுரம் விநாயகர், ராஜகோபுரம் ஆறுமுகர், பல்லவ கோபுரம், விகட சக்கர விநாயகர், பல்லவர் கோபுர ஆறுமுகர், தம்பட்டை விநாயகர் ஆகிய சன்னதிகளில் திருப்பணிகள் செய்ய பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பாலாலய பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இதுவரை இந்து அற நிலைத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருப்பணிகள், திரு விழாக்கள், கும்பாபிஷேகம் என 788 விழாக்கள் சிறப்பாக நடைபெற்று உள்ளது. மேலும் 5001 ஏக்கர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4740 கோடி ஆகும்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் சட்டப்படி பக்தர்களின் சுதந்திரமான இறைவழி பாட்டிற்கு அனைத்து உதவிகளையும் இந்து சமய அறநிலைத்துறையும், தமிழ்நாடு அரசும் செய்யும். இதில் யார் பெரியவர் என்ற பிரச்சினை இல்லை. இறை அன்பர்களுக்கு தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும்.

    ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிகள் 2024 -ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற வேண்டும் என்று துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். கடைசியாக கோவிலுக்கு 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது. சுமார் 17 ஆண்டுகள் கடந்துவிட்டதால் திருப்பணிகளை வேகப்படுத்தி குடமுழுக்கு நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாரியம்மன் கோவிலில் ரூ.68.30 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு பணிகளின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கிய மற்றும் முன்னோடித் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பெரியபாளையம், பவானி அம்மன் கோவிலில் ரூ.170.11 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.306.35 கோடி மதிப்பீட்டிலும், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ரூ.159.83 கோடி மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் ரூ.78.20 கோடி மதிப்பீட்டிலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.103.70 கோடி மதிப்பீட்டிலும், சமயபுரம், மாரியம்மன் கோவிலில் ரூ.64.65 கோடி மதிப்பீட்டிலும், கடலூர், அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டிலும், பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.99.98 கோடி மதிப்பீட்டிலும், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவிலில் ரூ.78.55 கோடி மதிப்பீட்டிலும், இருக்கண்குடி, மாரியம்மன் கோவிலில் ரூ.68.30 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    2023 - 2024 -ம் ஆண்டு அறிவிப்புகளின்படி, அழகர்கோவில், கள்ளழகர்கோவில், மருதமலை, சுப்பிரமணிய சுவாமி கோவில், சிறுவாபுரி, பால சுப்பிரமணிய சுவாமி கோவில், மேல்மலையனூர், அங்காளபரமேஸ்வரி கோவில், திருச்சி மாவட்டம், குமாரவயலூர், சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் ரூ. 200 கோடி மதிப்பீட்டிலும் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு பணிகளின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், சிறப்பு திட்டங்களான தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணி மண்டபம் அமைத்திடும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினம், ஔவையார் விஸ்வநாத சுவாமி கோவில் ரூ.18 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கலாச்சார மையம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மர் கோவில் சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மனநல காப்பகம், வான்புகழ் வள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மயிலாப்பூர், திருவள்ளுவர் கோவில் திருப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    பழனி, தண்டாயுத பாணிசுவாமி கோவில் சார்பாக பழனி மலைக்கும் இடும்பன் மலைக்கு ரூ.34 கோடி மதிப்பீட்டிலும், கோவை மாவட்டம், அனு வாவி சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு ரூ.16 கோடி மதிப்பீட்டிலும், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு ரூ.14.80 கோடி மதிப்பீட்டிலும், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் கோவிலுக்கு ரூ.9.50 கோடி மதிப்பீட்டிலும் கம்பிவட ஊர்தி அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    • கோவிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டு உள்ளது.
    • வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான இதர நிலங்களுக்கும் கோவில் பெயரிலேயே பட்டா பெறுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறையின் நீண்ட கால சட்டப்பேராட்டங்களுக்கு பின்னர் வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அகஸ்தியம் பள்ளி கிராமத்தை சேர்ந்த 2,122.10 ஏக்கர் நிலம் தொடர்பாக கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்று உள்ளது.

    இத்தீர்ப்பின் அடிப்படையில் இந்த நிலங்களுக்கு பட்டா பெற நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் கோவில் செயல் அலுவலரால் விண்ணப்பிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கோவிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டு உள்ளது.

    மேலும், வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான இதர நிலங்களுக்கும் கோவில் பெயரிலேயே பட்டா பெறுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஒட்டுமொத்தமாக, கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் எங்கிருந்தாலும் அவற்றை கண்டறிந்து கோவிலுக்கு ஒப்படைக்கும் பணிகளில் அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் உறுதுணையாய் செயலாற்றும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடுமையான பயிற்சி மற்றும் மன உறுதியால் மட்டுமே இதுபோன்ற சாகசங்களை செய்ய முடியும்.
    • தி.மு.க. அரசு எப்போதும் மகளிர் காவலர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்களின் 50-வது பொன்விழா ஆண்டினை தமிழ்நாடு காவல் துறை கொண்டாடி வருகிறது.

    அந்த வகையில் மகளிர் காவலர்கள் மட்டும் பங்கு பெறும் சென்னை பழவேற்காடு கோடியக்கரை சென்று திரும்பும் சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவினை பாய் மரப்படகு மூலம் கடக்கும் கடல் பயணம் இன்று முதல் வருகிற 18-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த கடல் பயணத்திற்கு 25 பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்தப்படும் இதன் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் இன்று தொடங்கியது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி கொடி அசைத்து பாய்மரப் படகு பயணத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் சேகர்பாபு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, அது தொடர்பான நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாகவே பாய்மர படகு பயண சாகச நிகழ்ச்சியை கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    உலகிலேயே முதல் முறையாக இதுபோன்ற சாகச நிகழ்ச்சியை பெண் காவலர்கள் மேற்கொள்வதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான பயிற்சி மற்றும் மன உறுதியால் மட்டுமே இதுபோன்ற சாகசங்களை செய்ய முடியும்.

    இந்த பயணத்தை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    தி.மு.க. அரசு எப்போதும் மகளிர் காவலர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. தமிழகத்தில் இன்று 9 ஆயிரத்து 542 பெண்கள் பணியில் உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சியில்தான் பெண்கள் காவல்துறை உயர் பொறுப்பில் பணி அமர்த்தப்பட்டனர்.

    பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டால்தான் குரூப்-1 தேர்வில் அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்று டி.எஸ்.பி. ஆகும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

    மகளிர் காவலர்கள் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 9 சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    மகளிர் நலன் கருதி 'ரோல்கால்' என்கிற வருகையை காலை 7 மணியில் இருந்து 8 ஆக மாற்றி அறிவித்தார். சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதி அமைக்கப்படும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டார். அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனியாக ஓய்வு அறை கட்டப்படும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். மகளிர் காவலர்களின் குழந்தைகளின் நலன் கருதி காப்பகம் அமைக்கப்படும், கலைஞர் காவல் பணி விருது, கோப்பை ஆண்டுதோறும் வழங்கப்படும், பெண் காவலர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்ப விடுப்பு, பணி மாறுதல் வழங்கப்படும், துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இவை அனைத்தும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவில்முன்பு மெகா மண்டபம் கட்டும்பணி தொடக்கவிழாகோவில் கலையரங்கத்தில் நடந்தது.
    • இந்துசமயஅறநிலை துறைஅமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    உடன்குடி:

    பிரசித்தி பெற்ற தசராபெருந்திருவிழா நடைபெறும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தண்டுபத்து சண்முககனி நாடார் பிச்சமணியம்மாள் அறக்கட்டளை சார்பில் கோவில்முன்பு மெகா மண்டபம்கட்டும்பணி தொடக்கவிழாகோவில் கலையரங்கத்தில் நடந்தது.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி பேரூராட்சிதுணைத் தலைவர் மால்ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்துசமயஅறநிலை துறைஅமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் அன்புமணி அனைவரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் மண்டப நன்கெடையாளர் தண்டுபத்து ராமசாமி, தி.மு.க.முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன், முன்னாள் அறங்காவலர்குழுத் தலைவர் கண்ணன், உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட அமைப்பாளர் இளைஞரணி ராமஜெயம், மாவட்ட துணைஅமைப்பாளர் வர்த்தக அணி ரவிராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், நகர இளைஞரணி செயலாளர் அஜய், மாவட்ட பிரதிநிதிகள் தன்ராஜ், ராஜாபிரபு,

    மகேஸ்வரன், ஜெயபிரகாஷ், சிராசூதீன், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர்பாலமுருகன், உடன்குடி கூட்டுறவு கடன்சங்க தலைவர் அஸ்ஸாப்கல்லாசி, குலசேகரன்பட்டிணம் பஞ்சாயத்து துணைதலைவர் கணேசன், படுக்கபத்து ராமநாதஆதித்தன்,

    தண்டுபத்து திலகர்.எள்ளுவிளை கிளைசெயலாளர் மோகன், ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாளபொருளாளர் நடராஜன், உடன்குடி ஜெயராமன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×