search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide attack"

    ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். #SuicideAttack #Afghanistan #ElectionWorker
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த வாரம் முடிந்தது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி 33 மாகாணங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நேற்று காலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. தலைமை அலுவலகத்துக்கு வெளியே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



    அப்போது அங்கு வந்த பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டி கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பயங்கரவாதி உடல் சிதறி பலியானார். மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 பேர், 2 போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.

    இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாதுகாப்புபடையினர் விரைந்து வந்த தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. #SuicideAttack #Afghanistan #ElectionWorker
    ஆப்கானிஸ்தானில் போலீசார் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் அதிகாரிகள் உள்பட 5 போலீசார் உடல் சிதறி பலியாகினர். #Afghanistan #SuicideAttack #Taliban
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் வர்தாக் மாகாணத்தில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று காலை அந்த குடியிருப்பில் இருந்து புறப்பட்ட பேருந்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ஏறினர்.

    அந்த பேருந்து குடிடிருப்பு வாசல் அருகே வந்தது. அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிமருந்துகள் நிரம்பிய கார் மூலம் பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 2 அதிகாரிகள், 3 ஊழியர்கள் என மொத்தம் 5 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் சில்ர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிவித்தனர்.

    போலீசார் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. #Afghanistan #SuicideAttack #Taliban
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். #Afghanelectionrally #suicideattack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
     
    இதற்கிடையே, ஆப்கன் நாட்டின் கிழக்கு பகுதியான நங்கர்ஹார் மாகாணத்துக்கு உட்பட்ட ஜலாலாபாத் நகரின் அருகே அப்துல் நாசிர் முஹம்மது என்ற வேட்பாளர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக, ஐ.எஸ். அமைப்பினர் அமாக் செய்தி நிறுவனத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசார பேரணியில் நடைபெற்ற தாக்குதலுக்கு நாங்களே காரணம் என தெரிவித்துள்ளனர். #AfghanElectionRally #SuicideAttack
    ஆப்கானிஸ்தானின் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். #KabulSuicideAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையம் அமைந்துள்ளது.  இந்த மையத்தில் சிலர் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நுழைந்து திடீரென தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.

    இந்த தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

    இந்நிலையில்,  தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பயிற்சி மையத்தில் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #KabulSuicideAttack
    ஈராக் நாட்டில் போலீஸ் சோதனை சாவடி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். #Iraq #IS #SucideAttack
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சோதனைச் சாவடியில் இருந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசின் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று கிர்குக் நகரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில், வெடி பொருட்கள் நிரம்பிய காரை தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிக்கச் செய்தான். இதன்மூலம் அங்கு பணியில் இருந்த 2 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும், 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், இதுபோன்ற தாக்குதல்கள் ஐ.எஸ் அமைப்பினரால் தான் அதிகமாக நடத்தப்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Iraq #IS #SucideAttack
    ஆப்கானிஸ்தான் ராணுவ வாகனத்தின் மீது நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். #Afghanistan #SuicideAttack
    ஜலாலாபாத்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரத்தில் வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு வந்த ஒருவர், ராணுவ வாகனம் ஒன்றின்மீது நேற்று மோதினார். இதில் குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் சிக்கி 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் ஆவர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலை நேரில் கண்ட ஒருவர், “குண்டுவெடிப்பை தொடர்ந்து பெரிய தீப்பந்து போல வெளிப்பட்டது. அதைக் கண்டு மக்கள் ஓட்டம் எடுத்தனர்” என்று கூறினார். இந்த தாக்குதலால் அருகில் இருந்த பெட்ரோல் நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

    ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடக்கும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நேற்று முன்தினம் நம்பிக்கை வெளியிட்டார். ஆனால் மறுநாளான நேற்று இந்த தாக்குதல் நடந்து இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்து உள்ளது.  #Afghanistan #SuicideAttack #tamilnews 
    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது குணார் மாகாணம். இங்குள்ள காவல் நிலைய சோதனைக்கு வெளியே தற்கொலைப்படை பயங்கரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    ராஜீவ் காந்தியை கொன்றது போன்று மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருக்கும் தகவல் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தால் அம்பலமாகி உள்ளது. #Maoists #Modi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உடல் சிதறி பலியானார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப்படை தாக்குதலிலேயே ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்.



    அதே பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ரோனா ஜேக்கப் என்பவர் பிடிபட்டார். அவருடன் மாவோயிஸ்டு இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் 4 பேரும் பிடிபட்டனர்.

    ரோனா ஜேக்கப்பிடம் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில்தான் ராஜீவ் காந்தியை போன்று மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருக்கும் தகவல் இடம் பெற்றிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மகாராஷ்டிர மாநில போலீசார் ரோனா ஜேக்கப் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும் மனு செய்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பொது மக்களோடு பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உளவு பிரிவினர் மாநில போலீசாரையும் உஷார்படுத்தியுள்ளனர். இனி வரும் காலங்களில் பிரதமர் மோடி பொது மக்களோடு கலந்துரையாடும் நிகழ்ச்சிகளில் மத்திய போலீசாரும் மாநில போலீசாரும் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    பிரதமரை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டியதற்கான காரணம் என்ன? என்பதும் தெரிய வந்துள்ளது. பிரதமராக பதவியேற்ற பின்னர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

    சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட மத்திய அரசு திட்டம் தீட்டியது. இதனால் ஏற்பட்ட ஆத்திரமே பிரதமரை மோடியை கொலை செய்யும் அளவுக்கு மாவோயிஸ்டுகளின் மனதை தூண்டி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. #Maoists #Modi
    ×