search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்
    X

    ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்

    ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். #SuicideAttack #Afghanistan #ElectionWorker
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த வாரம் முடிந்தது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி 33 மாகாணங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நேற்று காலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. தலைமை அலுவலகத்துக்கு வெளியே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



    அப்போது அங்கு வந்த பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டி கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பயங்கரவாதி உடல் சிதறி பலியானார். மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 பேர், 2 போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.

    இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாதுகாப்புபடையினர் விரைந்து வந்த தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. #SuicideAttack #Afghanistan #ElectionWorker
    Next Story
    ×