search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Staff"

    • அலுவலகத்திலுள்ள கோப்புகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • சுங்க இலாகா அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் உள்ள சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு நாகப்பட்டினம் சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு இணை கமிஷனர் செந்தில் நாதன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக துணை சூப்பிரண்டு இன்னாசி ஆரோக்கியராஜ் அனை வரையும்வரவேற்றார்.

    கட்டிடத்தை திருச்சி மண்டல சுங்க இலாகா ஆணையர் அனில் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து சுங்க இலாகா ஆணையர் அனில் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    பின்னர், அலுவலகம் உள்ளே சென்று அங்கிருந்தகோப்பு களை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

    இதில் சுங்க இலாகா அதிகாரிகள், அலுவலர்கள், பணியா ளர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இரட்டை ரெயில்பாதை பணிக்காக மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் வரையில் இரண்டாவது அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

    திருமங்கலம்

    மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் வரையில் இரண்டாவது அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த பணிகள் திருமங்கலம் வரையில் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து தற்போது திருமங்கலம்-மதுரை இடையே பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இதன் ஒருபகுதியாக திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோ பகுதியில் 2-வது தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஏராளமான மின்கம்பங்களை மாற்றி அமைக்கும்படி ெரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்தது.

    இதனை தொடர்ந்து சிட்கோ பகுதியில் 2-வது அகல ெரயில் பாதையையொட்டியுள்ள மின்கம்பங்கள் மின்சார வயர்களை எதிர்ப்புறம் இடம்மாற்றம் செய்யும் பணிகளில் மின்வாரியம் ஈடு பட்டுள்ளது.

    இந்த பகுதியில் 2-து அகல ெரயில் பாதையையொட்டி இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அனைத்தும் மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிக்ள கூறுகையில் 2-வது அகல ெரயில்பாதையும் மின்சார ெரயில் செல்வதற்கு தகுந்தாற் போல் மின்கம்பிவயருடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே சிட்கோ தொழிற்சாலைகளுக்கான மின்சார டிரான்ஸ்பார்மரும், மின்சார கம்பங்களும் இருந்தன.

    உயர் மின்அழுத்தம் உள்ள ெரயில்வே மின்பாதையின் அருகே மின்சார வயர்கள் மின்கம்ப ங்கள் இருக்கக்கூடாது என்பதால் சாலையின் எதிர்ப்புறம் அவற்றை மாற்றும் 

    • அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • தூய்மை பணியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் ஒன்றியம், பெரும்பாண்டி ஊராட்சியில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார்.

    பெரும்பாண்டி ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு செயலாளர் சரோஜா பாஸ்கர் தலைமை தாங்கினார்.

    முகாமில் ரத்த அழுத்தம், சக்கரை நோய் அளவு, உப்பு அளவு, கண் நோய் பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    முகாமில் பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் அசோக்குமார் தலைமையில் செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

    இதில் 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர். பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை கள ஒருங்கி ணைப்பாளர் நாரயணவடிவு, அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.

    முடிவில் பெரும்பாண்டி ஊராட்சி செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

    • அரசு பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்துக்கு கலெக்டர் கேடயம் வழங்கினாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சி துறை சாா்பில் அரசுப் பணியாளா்களுக்கு தமிழ் ஆட்சி மொழிப் பயிலரங்கம் நடைபெற்றது.

    இப்பயிலரங்கத்துக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். இதில், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி வரலாறும் சட்டமும், கணினிப்பயிற்சி, ஆட்சிமொழி அரசாணை களும் செயலா க்கமும், மொழிபெயா்ப்பும் கலை ச்சொல்லாக்கமும், ஆட்சிமொழி ஆய்வும் குறை களைவு நடவடிக்கைகளும் மற்றும் தமிழில் குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் ஆகிய தலைப்புகளில் அரசுப் பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும், 2020 ஆம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாகத் தெரிவு செய்யப்பட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்துக்கு ஆட்சியா் கேடயம் வழங்கினாா். இக்கேடயத்தை அந்த அலுவலகம் சாா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன் பெற்றுக் கொண்டாா்.

    இக்கூட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இயக்குநா் எழிலரசு, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சபீா்பானு, மன்னா் சரபோஜி அரசுக் க ல்லூரி உதவிப் பேராசிரியா் அமுதா, அரசா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வார்டுகளிலும் சிறப்பு துப்புரவு முகாம்.
    • குப்பைகளை சேகரித்து இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் பணி.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அலுமினிய கூடை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு தலைமை தாங்கினார். பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் 38 துப்புரவு பணியாளர்களுக்கு அலுமினிய கூடை வழங்கி பேசுகையில், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வார்டுகளிலும் சிறப்பு துப்புரவு முகாம் மக்களை இணைத்து உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

    மக்கும் குப்பைகளை தனியே சேகரித்து இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. இப்பணி சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும் பாலம் தொண்டு நிறுவனத்திற்கு நன்றி, என்றார். நிகழ்ச்சியில் பிரிவு அலுவலர் செந்தில்குமார், மேற்பார்வையாளர்கள் வீரையன், பெரமையன் ஈஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நிவாரணத்தொகை வழங்காததால் கோர்ட்டு ஊழியர்கள் கார்களை ஜப்தி செய்ய வந்தனர்.
    • கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு கூடல்புதூரில் சொந்தமாக நிலங்கள் இருந்தன. இந்த நிலத்தில் 1.14 ஏக்கர் மனையை ரெயில்வே நிர்வாகமும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக 1 ஏக்கர் நிலத்தை மாநக ராட்சியும் கடந்த 1973-ம் ஆண்டு ஆர்ஜிதம் செய்து கொண்டது.

    அப்போது அரசாங்கம் சார்பில் நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவிக்கப் பட்டது. இருந்த போதிலும் தரப்படவில்லை. எனவே கருப்பையா மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அப்போது கருப்பையாவுக்கு 20.5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதிலும் அரசாங்கம் நிவாரணத் தொகை வழங்க முன்வரவில்லை.

    எனவே கருப்பையா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இதனைத் தொடர்ந்து கலெக்டரின் கார், கடந்த 2019-ம் ஆண்டு ஜப்தி செய்யப்பட்டது. அப்போது 2 மாத காலத்துக்குள் நிவாரண தொகை வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில், அந்த கார் மீட்கப்பட்டது.

    இந்த நிலையில் ெரயில்வே நிர்வாகம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து மதுரை நீதிமன்ற ஊழியர்கள் இன்று மதியம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோரின் கார்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கருப்பையா தரப்பிடம் டி.ஆர்.ஒ சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 314 நிரந்தர துாய்மை பணியாளர்கள் மற்றும் 250 வெளிக்கொணர்வு துாய்மை பணியாளர்கள் ஆகியோர்கள் தயார்.
    • பிளிச்சீங் பவுடர், பினாயில் மற்றும் நீர்த்த சுண்ணாம்பு ஆகியவை கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் நான்கு ஜே.சி.பி.க்கள், மூன்று காம்பாக்டர் லாரி, மூன்று டிப்பர் லாரி, இரண்டு மினி டிப்பர் லாரி, இரண்டு மினி ஹிட்டாச்சி, இரண்டு டிராக்டர், 46 டாடா ஏ.சி.இ., 100 எண்ணிக்கையிலான மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது.ஒரு ஜெனரேட்டர், 10 மரம் வெட்டும் இயந்திரமும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் வடகிழக்கு பருவமழை 2022 முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை பணிகள் தொடர்பாக 51 வார்டுகளுக்கும் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுடன் மீட்பு பணிக்கு அலுவலர்கள் பொறுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 14 துப்புரவு கோட்டங்களை சார்ந்த, 12 துப்புரவு ஆய்வர்கள், 10 துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், 314 நிரந்தர துாய்மை பணியாளர்கள் மற்றும் 250 வெளிக்கொணர்வு துாய்மை பணியாளர்கள் ஆகியோர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.

    தேவையான அளவு பிளிச்சீங் பவுடர், பினாயில் மற்றும் நீர்த்த சுண்ணாம்பு ஆகியவை கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. நான்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களிலும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் போதிய மருந்து பொருட்கள் இருப்பில் தயார் நிலையில் உள்ளது.மாநகராட்சியில் 24 மணி நேர அவசரகால பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தயார் நிலையில் உள்ளது. (தொலைபேசி எண்கள்-04362 232021 மற்றும் இலவச அழைப்பு எண்.1800 425 1100) .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துப்புரவு ஊழியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக சம்பள உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
    • நேற்று முன்தினம் துப்புரவு ஊழியர்கள் அரசு ஆஸ்பத்தி ரியில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 2-வது நாளான நேற்று விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். இன்று 3-வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் பலர் உள் நோயாளிகளாக தங்கி இருந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இங்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு ஊழியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக சம்பள உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் துப்புரவு ஊழியர்கள் அரசு ஆஸ்பத்தி

    ரியில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 2-வது நாளான நேற்று விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். இன்று 3-வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால் போராட்டம் நீடித்து வருகிறது.

    இது குறித்து துப்புரவு ஊழியர்கள் கூறுகையில், எங்களுக்கு முறையான சம்பள உயர்வு வழங்க வேண்டும். அதுவரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்றனர். 

    • டி பிரிவு ஊழியர்களுக்கான பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.
    • மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, மாநகராட்சி அனைத்துபிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்கள் ஆகியவை சார்பில் தஞ்சை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணாபோராட்டம் நடந்தது. இதற்கு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் மதிவாணன், வருவாய் உதவியாளர் சங்க மாநில தலைவர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் சங்க நிர்வாகி செல்வமணி, துப்புரவுபணி மேற்பார்வையாளர் சங்க நிர்வாகி கலியபெருமாள், மருந்தாளுனர் சங்க நிர்வாகி இளந்தமிழன், துப்புரவு பணியாளர் சங்க மநில தலைவர் ராமன், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ஜெய்ராஜ் ஆகியோர் பேசினர்.

    போராட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண்: 152-ன்படி இளநிலை உதவியாளர், உதவியாளர், பதிவறை எழுத்தர்கள், ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் அவுட் "சோர்சிங் மூலம் இனி வரும் காலங்களில் நியமனம் செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.

    இந்த அரசாணை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலனை செய்து டி பிரிவு ஊழியர்களுக்கான பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.

    ஏற்கனவே பணிபுரியும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி நிறைவு செய்து பேசினார். முடிவில் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க நிர்வாகி மூர்த்தி நன்றி கூறினார்.

    • சேலத்தில் ஊரக வளர்ச்சி துறையினர் இன்று முதல் நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • வருகிற டிசம்பர் 14-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    சேலம்:

    ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், பணி நெருக்கடிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து உள்ளனர். இதனால் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள், பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட் டது. மேலும் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்க ளின் கோரிக்கைகள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற டிசம்பர் 14-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

    • குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் குளிர்கால கம்பளி.
    • சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் சாலையோரம் தங்கியுள்ள ஏைழ, எளிய மக்களுக்கு குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் குளிர்கால கம்பளி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, 10-ம் ஆண்டாக இந்த ஆண்டும் தஞ்சை பெரிய கோவில், புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மாரியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் சாலையோர மக்களுக்கு குளிர்கால கம்பளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் இணை மேலாண்மை இயக்குனர் காமினி குருசங்கர் மற்றும் பணியாளர்கள் வழங்கினர்.

    இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

    • 850 பணியாளா்கள் முழுமையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
    • மருத்துவமனைகள், மின் ஊழியா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

    தஞ்சாவூர்:

    வடகிழக்கு பருவ மழை யையொட்டி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களு க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    வடகிழக்கு பருவ மழையை யொட்டி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 51 பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த 51 குழுக்களில் அந்தந்த மாமன்ற உறுப்பினா்களின் தலைமையில் மாநகரா ட்சியின் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்ப ட்டுள்ளனா்.

    மேலும், பருவ மழையை எதிா்கொ ள்ளும் விதமாக மாநகராட்சியிலுள்ள 850 பணியாளா்களும் முழுமையாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

    கட்டுப்பாட்டு அறைக்கு மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால், மாநகராட்சியில் இக்குழுக்களுக்கு தகவல் அளித்து உடனடியாக போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, பொதுமக்கள் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக 18004251100 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 7598016621, 04362 - 231021 என்கிற எண்களிலும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் மாநகராட்சி பணியாளா்கள் மூவா் பணியில் இருப்பா்.

    தஞ்சாவூா் மாநகராட்சி பகுதியில் நூறு ஆண்டுகள் கடந்த கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழைமையான கட்டட ங்களில் அதன் உரிமையா ளா்கள் பாதுகாப்பைக் கருதி யாருக்கும் வாடகைக்கு விட வேண்டாம். அதில் யாரும் குடியிருக்க வேண்டாம்.

    சுகாதாரத் துறையினா், மருத்துவமனைகள், மின் ஊழியா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

    மழை அதிக அளவில் பெய்து, தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டால், அப்பகுதியைச் சோ்ந்த அனைவரையும் முகாமுக்கு அழைத்து சென்று உணவு வழங்குவது, பாதுகாப்பாக தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மண்டலக் குழுத் தலைவா் எஸ்.சி. மேத்தா, மாநகராட்சி செயற்பொறியாளா் ஜெகதீசன், உதவிச் செயற்பொறியாளா் ராஜசேகரன், உதவிப் பொறியாளா் சந்திரபோஸ், மேலாளா் ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

    ×