search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுண்ணாம்பு"

    • உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
    • அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சுண்ணாம்பு பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    நம் வீட்டில் உள்ள முதியவர்கள் வெற்றிலை பாக்குடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவார்கள். ஏனெனில் சுண்ணாம்பில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது எலும்பின் வலிமையை அதிகரிக்கும். அதேபோல் வழிபாடு மற்றும் பிற புனித சடங்குகளில் சுண்ணாம்பை அதிகமாக பயன்படுத்துவார்கள். காரணம். சுண்ணாம்பில் ஆன்டிசெப்டிக் வலிநிவாரணி, மூச்சுத்திணறல் மற்றும் மன அழுத்தத்தை எதிர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளன. சுண்ணாம்பின் பயன்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    * சுண்ணாம்பில் உள்ள மன அழுத்த எதிர்ப்பு பண்புகள், சுண்ணாம்பின் நறுமணத்தை சுவாசிப்பதன் மூலம் மன சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

    * சுண்ணாம்பு புகையின் நறுமணத்தை சுவாசிப்பதால் நாள்பட்ட இருமல், காசநோய் மற்றும் மார்பு சளி ஆகியவை குணமாகும். சுண்ணாம்பில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்.

    * உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து. புற்றுநோயின் அறிகுறிகளை குறைக்கும்.

    * விஷப்பூச்சிகள் கடித்து விட்டால், சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு மூன்றையும் சம அளவு எடுத்து, நீர் சேர்த்து கரைத்து, கடித்த இடத்தில் தடவினால் விஷத்தன்மை நீங்கும். தேள் கடிக்கு கண்ணாம்புடன் சிறிது நவச்சாரம் சேர்த்து நசுக்கி, அதை தேள் கொட்டிய இடத்தில் வைத்துத் தேய்த்தால் நஞ்சு இறங்கும்.

    * இரவு தூங்குவதற்கு முன்னர் தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்த கலவையை தொண்டையில் தடவினால் தொண்டை வலி குறையும்.

    * கண்ணாம்பு, துணி சுட்ட கரி, பனை வெல்லம் மூன்றையும் சமஅளவு எடுத்து, மைபோல் அரைத்து, வீக்கம் மற்றும் ரத்தக்கட்டு உள்ள இடத்தில் தடவ சரியாகும். உடலில் ஏற்படும் கட்டிகள் உடைய சுண்ணாம்பு, மாவலிங்கம் பட்டைத்தூள் இரண்டையும் சமஅளவு சேர்த்து நல்லெண்ணெய்யில் கலந்து தடவினால் கட்டிகள் பழுத்து உடையும்.

    * மஞ்சள் தூள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கி, தூக்கம் கிடைக்கும். தலையில் உள்ள அதிகப்படியான கெட்ட நீர் விலகிவிடும்.

    * அரை லிட்டர் தயிருடன் ஒரு கொட்டைப்பாக்கு அளவு சுண்ணாம்பு சேர்த்து தினமும் காலையில் மட்டும் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.

    * ஒரு டம்ளர் தண்ணீரில் சிறி தளவு சுண்ணாம்பை கலந்து. அதில் மேலே தெளிந்த நீரை மட்டும் எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து, குழைத்து தடவி வர வெந்நீர் அல்லது நெருப்பினால் ஏற்பட்ட புண் ஆறும்.

    * சுண்ணாம்பை உமிழ்நீர் விட்டு குழைத்து, தொப்புளை சுற்றியும், கால் பெருவிரலிலும் தடவினால் நீர்க்கடுப்பு குணமாகும்.

    குறிப்பு: நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள். அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சுண்ணாம்பு பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    • 314 நிரந்தர துாய்மை பணியாளர்கள் மற்றும் 250 வெளிக்கொணர்வு துாய்மை பணியாளர்கள் ஆகியோர்கள் தயார்.
    • பிளிச்சீங் பவுடர், பினாயில் மற்றும் நீர்த்த சுண்ணாம்பு ஆகியவை கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் நான்கு ஜே.சி.பி.க்கள், மூன்று காம்பாக்டர் லாரி, மூன்று டிப்பர் லாரி, இரண்டு மினி டிப்பர் லாரி, இரண்டு மினி ஹிட்டாச்சி, இரண்டு டிராக்டர், 46 டாடா ஏ.சி.இ., 100 எண்ணிக்கையிலான மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது.ஒரு ஜெனரேட்டர், 10 மரம் வெட்டும் இயந்திரமும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் வடகிழக்கு பருவமழை 2022 முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை பணிகள் தொடர்பாக 51 வார்டுகளுக்கும் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுடன் மீட்பு பணிக்கு அலுவலர்கள் பொறுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 14 துப்புரவு கோட்டங்களை சார்ந்த, 12 துப்புரவு ஆய்வர்கள், 10 துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், 314 நிரந்தர துாய்மை பணியாளர்கள் மற்றும் 250 வெளிக்கொணர்வு துாய்மை பணியாளர்கள் ஆகியோர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.

    தேவையான அளவு பிளிச்சீங் பவுடர், பினாயில் மற்றும் நீர்த்த சுண்ணாம்பு ஆகியவை கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. நான்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களிலும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் போதிய மருந்து பொருட்கள் இருப்பில் தயார் நிலையில் உள்ளது.மாநகராட்சியில் 24 மணி நேர அவசரகால பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தயார் நிலையில் உள்ளது. (தொலைபேசி எண்கள்-04362 232021 மற்றும் இலவச அழைப்பு எண்.1800 425 1100) .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவள்ளுவர் சிலை 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
    • 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.

    இந்தசிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப் படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட் டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசுநடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெற வில்லை.

    தற்போதுரூ.1கோடி செலவில்திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப்பணி நடைபெற உள்ளதை தொடர்ந்து கடந்தஜூன்மாதம் 6-ந்தேதி முதல் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வரை 5மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையைபார்வையிட சுற்றுலா பயணி களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது.

    இந்தநிலையில் இந்த பணியை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் 145 அடி உயரத்துக்கு இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதற்காக சென்னை மற்றும்தூத்துக்குடியில் இருந்து 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. இவை படகுகள் மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ரசாயனக் கலவை பூசுவதற்காக சிலை முழுவதும் நல்ல தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்க ளில் படிந்திருக்கும் கடல் உப்பு தன்மை அகற்றப்பட்டு கடுக்காய், சுண்ணாம்பு, பனை வெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×