என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடுக்காய்"

    • மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
    • முடி உதிர்வதையும் தடுக்க இந்த கடுக்காய் உதவுகிறது.

    முகத்தில் இருக்கக்கூடிய இயற்கையான பொலிவு நீங்குவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சுற்றுச்சூழல், சூரிய ஒளிகதிர்கள் மற்றும் சரியான உறக்கமின்மையாலும் அதிகப்படியான நீரை பருகாமல் இருப்பது என பல்வேறு காரணங்களால் நம்முடைய முகத்தில் ஒருவித கருமை தோன்றி முகப் பொலிவையும் இழக்க நேரிடும். இதனால் வயதான தோற்றத்தில் இருப்பதுபோல் நமக்கே தோன்றிவிடும்.

    இழந்த சரும பொலிவை பெற எளிமையான ஃபேஸ் பேக் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

    இந்த ஃபேஸ் பேக்கிற்கு மிகவும் முக்கியமானது கடுக்காய் தான். கடுக்காய் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். ஃபேஸ் பேக்காக கூடவா போடலாம் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆமாம் கடுக்காய் ஃபேஸ் பேக் மூலம் இழந்த பொலிவை நம்மால் திரும்பப் பெற முடியும். முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றத்தையும் தரும். கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையத்தையும் ஒரு சிலருக்கு வாயை சுற்றி இருக்கக்கூடிய கருமையும் நீக்குவதற்கு கடுக்காய் பொடி பெரிதும் உதவி புரிகிறது.

    கடுக்காய் ஃபேஸ் பேக் செய்முறை:



    ஒரு மிக்ஸிங் பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு விட்டமின் இ கேப்சூல் ஆயிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை ஸ்பூன் அளவிற்கு தேனையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு இதை ஃபேஸ் பேக் போடுவதற்கு ஏற்றவாறு தேவையான அளவு பன்னீரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. இந்த பேஸ் பேக்கை அப்படியே நம்முடைய முகத்திலும் கழுத்திலும் கீழே இருந்து மேல் தடவுவது போல் தடவ வேண்டும். எந்தெந்த இடத்தில் கருமைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் இரண்டு முறை தடவ வேண்டும். அதாவது சற்று கனமாக தடவ வேண்டும். இப்படி தடவி விட்டு 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு சிறிது தண்ணீரை கைகளில் நனைத்துக்கொண்டு நன்றாக உலர்ந்த இந்த ஃபேஸ் பேக்கை மசாஜ் செய்வது போல் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் சுருக்கங்களும் நீங்கி இளமையான பொலிவான முகத்தை பெற முடியும்.

    நீங்கள் கடுக்காய் ஃபேஸ் பேக் போடும் போதே கடுக்காய் ஹேர் பேக் போட்டுக்கொள்ளலாம். நேரம் மிச்சமாவதோடு கூடுதல் பொலிவைப்பெறலாம்.

    கடுக்காய் ஹேர் பேக் செய்முறை:

    1 டீஸ்பூன் கடுக்காய் பவுடர் ,2 டீஸ்பூன் ஆம்லா பவுடர், 1 டீஸ்பூன் கருவேப்பிலை பவுடர் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு இந்த பேஸ்டை இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு அடுத்த நாள் காலையில் தலையின் ஒவ்வொரு அடுக்கிலும் தடவி விடவும். 1 மணி நேரம் இந்த ஹேர் பேக்கை தலையில் ஊற வைத்து பின்பு சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலச வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே உங்கள் முடியில் உள்ள பொடுகு, பேன்கள் என அனைத்தும் நீங்கும். மேலும் முடி உதிர்வதையும் தடுக்க இந்த கடுக்காய் உதவுகிறது.

    • திருவள்ளுவர் சிலை 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
    • 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.

    இந்தசிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப் படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட் டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசுநடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெற வில்லை.

    தற்போதுரூ.1கோடி செலவில்திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப்பணி நடைபெற உள்ளதை தொடர்ந்து கடந்தஜூன்மாதம் 6-ந்தேதி முதல் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வரை 5மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையைபார்வையிட சுற்றுலா பயணி களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது.

    இந்தநிலையில் இந்த பணியை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் 145 அடி உயரத்துக்கு இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதற்காக சென்னை மற்றும்தூத்துக்குடியில் இருந்து 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. இவை படகுகள் மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ரசாயனக் கலவை பூசுவதற்காக சிலை முழுவதும் நல்ல தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்க ளில் படிந்திருக்கும் கடல் உப்பு தன்மை அகற்றப்பட்டு கடுக்காய், சுண்ணாம்பு, பனை வெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
    • கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

    நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

    உஷ்ணத்தால் பித்த நோய்களும்,

    காற்றினால் வாத நோய்களும்,

    நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

    நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் எளிய வழியை கூறுகிறார்.

    ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

    கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளையெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

    அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, மேல் தோலை மட்டும் நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

    கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

    கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், சிறுநீர் குழாய்களில் உண்டாகும் புண், சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

    "காலை இஞ்சி,

    கடும்பகல் சுக்கு

    மாலை கடுக்காய் .....மண்டலம் உண்டால்

    விருத்தனும் பாலனாமே.-

    காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

    -அருளானந்தர்

    ×