search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாநகராட்சியில் 51 பாதுகாப்பு குழுக்கள்- மேயர் பேட்டி
    X

    மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    தஞ்சை மாநகராட்சியில் 51 பாதுகாப்பு குழுக்கள்- மேயர் பேட்டி

    • 850 பணியாளா்கள் முழுமையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
    • மருத்துவமனைகள், மின் ஊழியா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

    தஞ்சாவூர்:

    வடகிழக்கு பருவ மழை யையொட்டி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களு க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    வடகிழக்கு பருவ மழையை யொட்டி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 51 பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த 51 குழுக்களில் அந்தந்த மாமன்ற உறுப்பினா்களின் தலைமையில் மாநகரா ட்சியின் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்ப ட்டுள்ளனா்.

    மேலும், பருவ மழையை எதிா்கொ ள்ளும் விதமாக மாநகராட்சியிலுள்ள 850 பணியாளா்களும் முழுமையாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

    கட்டுப்பாட்டு அறைக்கு மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால், மாநகராட்சியில் இக்குழுக்களுக்கு தகவல் அளித்து உடனடியாக போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, பொதுமக்கள் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக 18004251100 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 7598016621, 04362 - 231021 என்கிற எண்களிலும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் மாநகராட்சி பணியாளா்கள் மூவா் பணியில் இருப்பா்.

    தஞ்சாவூா் மாநகராட்சி பகுதியில் நூறு ஆண்டுகள் கடந்த கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழைமையான கட்டட ங்களில் அதன் உரிமையா ளா்கள் பாதுகாப்பைக் கருதி யாருக்கும் வாடகைக்கு விட வேண்டாம். அதில் யாரும் குடியிருக்க வேண்டாம்.

    சுகாதாரத் துறையினா், மருத்துவமனைகள், மின் ஊழியா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

    மழை அதிக அளவில் பெய்து, தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டால், அப்பகுதியைச் சோ்ந்த அனைவரையும் முகாமுக்கு அழைத்து சென்று உணவு வழங்குவது, பாதுகாப்பாக தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மண்டலக் குழுத் தலைவா் எஸ்.சி. மேத்தா, மாநகராட்சி செயற்பொறியாளா் ஜெகதீசன், உதவிச் செயற்பொறியாளா் ராஜசேகரன், உதவிப் பொறியாளா் சந்திரபோஸ், மேலாளா் ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×