search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏழை, எளிய மக்களுக்கு குளிர்கால கம்பளி
    X

    கம்பளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் இணை மேலாண்மை இயக்குனர் காமினி குருசங்கர் வழங்கிளார்.

    ஏழை, எளிய மக்களுக்கு குளிர்கால கம்பளி

    • குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் குளிர்கால கம்பளி.
    • சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் சாலையோரம் தங்கியுள்ள ஏைழ, எளிய மக்களுக்கு குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் குளிர்கால கம்பளி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, 10-ம் ஆண்டாக இந்த ஆண்டும் தஞ்சை பெரிய கோவில், புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மாரியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் சாலையோர மக்களுக்கு குளிர்கால கம்பளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் இணை மேலாண்மை இயக்குனர் காமினி குருசங்கர் மற்றும் பணியாளர்கள் வழங்கினர்.

    இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

    Next Story
    ×