search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special pooja"

    • கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் மாதாந்திர சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • தொடர்ந்து விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் மாதாந்திர சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.
    • அரக்கர்களை அழித்து, நல்வர்களுக்கு நல்லதை நல்கிய இடம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலாகும்.

    கருவாழக்கரை காமாட்சியம்மன்

    மயிலாடுதுறையில் இருந்து பூம்புகாருக்குச் செல்லும் வழியில், 9வது கிலோ மீட்டரில், காவிரியின் வடபகுதியில் கருவாழக்கரையில் காமாட்சி அம்மனின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எட்டுத் திசைகளிலும் நவக்கிரக சேத்திரங்களான சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகியவை அமைந்திருக்கின்றன. எனவே இவர்களுக்கு நடுவே நவக்கிரக தேவியாக ஸ்ரீகாமாட்சி அம்மன் அமைந்து அருளாட்சி புரிந்து வருகிறாள். இங்கு ஆடி மாத வழிபாடு மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.

    சிறுவயல் பொன்னழகியம்மன்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ளது சிறு வயல், இங்கே கோயில் கொண்டுள்ள பொன்னழகி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். திருமண அனுக்ரஹ ஸ்தலம். பவுர்ணமியன்று அம்மனைத் தரிசித்து வந்தால்.கண்டிப்பாக குழந்தைப் பேறு கிட்டும். தண்ணீரில் விளக்கு எரிய தனிக் கருணை புரிவாள் எங்கள் அம்பாள் என இங்கு வந்த அரசு உயர் அதிகாரியிடம் ஆலயத் தக்கார் கூறி இருக்கிறார். அதை நிரூபித்துக் காட்டுமாறு அந்த அதிகாரி சொல்ல, புது அகல்களில் நீரை ஊற்றி திரிபோட்டு விளக்கை ஏற்றினார்களாம். தீபம் எரிந்து அம்மன் கருணை வெளிப்பட்டது. ஆடி மாதம் இங்கு சிறப்பு பூஜைகள் உண்டு.

    கோவில்பட்டி செண்பகவல்லியம்மன்

    கோவில்பட்டி செண்பகவல்லிக்கு வளைகாப்பு உத்ஸவம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப் போலவே நடை பெறுகிறது. முதலில் செண்பகவல்லியை வணங்கிவிட்டு பிறகு பூவன நாதரை வணங்குவது கோவில்பட்டியில் வழக்கம். 7 அடி உயரத்தில் கர்ப்பக்கிரஹத்தில் காட்சி தரும் இவளைத் தரிசித்தால், மெய்சிலிக்கும். தீராப்பிணி தீர்த்து சகல செல்வங்களுக்கும் தரும் செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணகான பெண்கள் அம்மனை வழிபட்டு வளையல்கள், மஞ்சள், குங்குமப்பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

    பெரம்பூர் காமாட்சியம்மன்

    சென்னை, மாதவரம், நெடுஞ்சாலை பெரம்பூர் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகில், சிந்தாமணி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் காட்சி அளிக்கும் காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று வளைகாப்பு உத்ஸவம் நடக்கிறது. அன்றைய தினம், மகப்பேறு வேண்டும் பெண்களின் மடியில் முளைப்பயிறு கட்டிவிடும் பிரார்த்தனையும் நடக்கிறது.

    கல்லுமடை மீனாட்சியம்மன்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை இங்கு 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருநாகேசுவர முடையார் கோயில் உள்ளது. இந்தக்கோயிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இங்கு ஆடி மாத விழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

    காஞ்சி ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள்

    காசியிலிருந்து காஞ்சிக்கு, சக்தி வந்து இறங்கி அன்னபூரணியாக அன்னதானம், செய்த ஆதிபீடம் இதுவாகும். அரக்கர்களை அழித்து, நல்வர்களுக்கு நல்லதை நல்கிய இடம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலாகும். இந்த கோவில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் 100 அடி தொலைவிலேயே அமைந்துள்ளது. இந்தப் பழமையான கோயிலில், இறைவனை அடைய வேண்டி தவம் இயற்றிய சக்தி, இறைவனோடு கலந்ததைத் தெரிவிக்கும் பொருட்டு லிங்க மேனியில் சக்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பிரதோஷ காலத்திலும் மாலை நேரத்திலும் வழிபடுவர்களுக்கு வேண்டியது கிடைக்கு மாம்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வருமாம். இழந்த பொருள் கிடைக்குமாம். ஆதியில் காமாட்சி அமர்ந்த இடம் ஆதிபீடம் என்ற வழக்கில், ஆதிபீடா பரமேஸ்வரி என் செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.ற பெயர் வழங்கப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • அ.தி.மு.க.வினர் சிறப்பு பூஜை-அன்னதானம் செய்தனர்.
    • பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவிலில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிறப்பு பூஜைகள், வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற வேண்டியும், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டியும் நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தலைமையில் இந்த வழிபாடு நடந்தது. அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    இதில் வேலாணூரணி ஊராட்சி மன்றத்தலைவர் அங்காள ஈஸ்வரி மற்றும் நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளை செயலாளர்கள், அணி செயலாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மலரினால் அலங்கரித்து பூஜைகள் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே பரஞ்சேர்வழி கிராமத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார். விழாவை முன்னிட்டு பரஞ்சேர்வழி கரிய காளியம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மலரினால் அலங்கரித்து பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு பூஜை ஏற்பாடுகளை ஒன்றிய மாணவர் அணியினர் செய்திருந்தனர்.

    இதில் அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள், மாணவர் அணி பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்மன் ஆலய கிழக்கு கோபுர வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • எஸ். எஸ். ஆர். சத்யா ஏற்பாட்டில் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து 501 தேங்காய் உடைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    அ. தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் மாநகரில் காஞ்சி பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் குமரகோட்டம் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,

    இதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்மன் ஆலய கிழக்கு கோபுர வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் அருகே அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வள்ளி நாயகம் ஆகியோர் ஏற்பாட் டில் வழக்க றுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாவட்ட பொருளாளர் வள்ளி நாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் ஏற்பாட்டில் பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. எஸ். எஸ். ஆர். சத்யா ஏற்பாட்டில் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து 501 தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    இரவு 8மணிக்கு கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் ஏற்பாட்டில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தங்கத் தேர் பவனி நடைபெற்றது.

    இதில் அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அவை தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி.சேகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர்.மணி வண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, அத்திவாக்கம் ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், பகுதி செயலாளர் என். பி. ஸ்டாலின், பாலாஜி, கோல்ட் ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் படுநல்லி தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டி அருகே அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் செய்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி யெழுச்சி பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு அம்பாள், உற்சவ அம்பாள் ,குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம் பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலை மையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் செய்தார்.

    இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா, மாரிஸ்வரன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி, சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வளையல், மஞ்சள், சரடு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை குழுவினர் செய்தனர்.

    • கோவில்பட்டி சங்கேரஸ்வரி அம்மன் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் வாங்கி வந்த தங்க நகைகளை அம்மனிடம் வைத்து தீபாராதனை செய்து ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சங்கேரஸ்வரி அம்மன் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், குங்குமம், பன்னீர், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இதில் பக்தர்கள் வாங்கி வந்த தங்க நகைகளை அம்மனிடம் வைத்து தீபாராதனை செய்து ஆசிர்வாதம் பெற்று சென்றனர். பக்தர்கள்

    முககவசம் அணிந்து சமூக இடைவேளை கடைப்பிடித்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பாணகரம், நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கன்னிமார் கருப்பராயன் கோவிலில் சிறப்புவழிபாடு செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தண்ணீர்பந்தல் காலனியில் விநாயகர், கன்னிமார்,பாலமுருகன், ஆதிபராசக்தி, கருப்பராய சுவாமி கோவில்உள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி கன்னிமார் கருப்பராயன் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பி.ஆர். டிரேடர்ஸ் உரிமையாளர் தண்ணீர்பந்தல்பி.தனபால் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் இருந்து தீர்த்தக்குடம்எடுத்து வந்து கன்னிமார் கருப்பராயன் கோவிலில் சிறப்புவழிபாடு செய்தனர்.

    • அம்பாளுக்கு 18 வகையான அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சங்கரேஸ்வரி அம்பாளுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.

    விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாரயணன், பிரேமா, முருகன் ஆகியோர் செய்தனர்.

    • ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பூஜையில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது.

    தொடரந்து ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பிறகு விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.

    விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சொர்ணமலை திருச்செந்தூர் பாதயாத்திரை மற்றும் அன்னதான குழு, முருகன், பிரேமா ஆகியோர் செய்தனர்.

    • மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சனி பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி உடுமலை திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.சித்தி புத்தி விநாயகர் கோவிலில் அதிகாலையில் கோ பூஜை மற்றும் ப்ரீதி யாகசாலை ஹோமமும் நடந்தது. தொடர்ந்து சனி பகவானுக்கு 108 பால்குடம் அபி ஷேகம், தீபாராதனை நடந்தது பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பிரசன்ன விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பலவி தமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சனிபக வானை வழிபட்ட னர்.

    • காலபைரவருக்கு 18 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு தயிர்சாதம்,உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.

    இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தயிர்சாதம் மற்றும் உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி ரவிநாரயணன், சரஸ்வதி, ஈஸ்வரி செய்தனர்.

    ×