தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை

அம்பாளுக்கு 18 வகையான அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
புற்றுக்கோவிலில்  சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்தபடம்.
புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்தபடம்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சங்கரேஸ்வரி அம்பாளுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.

விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாரயணன், பிரேமா, முருகன் ஆகியோர் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com