search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி மாத வழிபாடு: அம்மன் கோவில்கள்
    X

    ஆடி மாத வழிபாடு: அம்மன் கோவில்கள்

    • செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.
    • அரக்கர்களை அழித்து, நல்வர்களுக்கு நல்லதை நல்கிய இடம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலாகும்.

    கருவாழக்கரை காமாட்சியம்மன்

    மயிலாடுதுறையில் இருந்து பூம்புகாருக்குச் செல்லும் வழியில், 9வது கிலோ மீட்டரில், காவிரியின் வடபகுதியில் கருவாழக்கரையில் காமாட்சி அம்மனின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எட்டுத் திசைகளிலும் நவக்கிரக சேத்திரங்களான சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகியவை அமைந்திருக்கின்றன. எனவே இவர்களுக்கு நடுவே நவக்கிரக தேவியாக ஸ்ரீகாமாட்சி அம்மன் அமைந்து அருளாட்சி புரிந்து வருகிறாள். இங்கு ஆடி மாத வழிபாடு மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.

    சிறுவயல் பொன்னழகியம்மன்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ளது சிறு வயல், இங்கே கோயில் கொண்டுள்ள பொன்னழகி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். திருமண அனுக்ரஹ ஸ்தலம். பவுர்ணமியன்று அம்மனைத் தரிசித்து வந்தால்.கண்டிப்பாக குழந்தைப் பேறு கிட்டும். தண்ணீரில் விளக்கு எரிய தனிக் கருணை புரிவாள் எங்கள் அம்பாள் என இங்கு வந்த அரசு உயர் அதிகாரியிடம் ஆலயத் தக்கார் கூறி இருக்கிறார். அதை நிரூபித்துக் காட்டுமாறு அந்த அதிகாரி சொல்ல, புது அகல்களில் நீரை ஊற்றி திரிபோட்டு விளக்கை ஏற்றினார்களாம். தீபம் எரிந்து அம்மன் கருணை வெளிப்பட்டது. ஆடி மாதம் இங்கு சிறப்பு பூஜைகள் உண்டு.

    கோவில்பட்டி செண்பகவல்லியம்மன்

    கோவில்பட்டி செண்பகவல்லிக்கு வளைகாப்பு உத்ஸவம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப் போலவே நடை பெறுகிறது. முதலில் செண்பகவல்லியை வணங்கிவிட்டு பிறகு பூவன நாதரை வணங்குவது கோவில்பட்டியில் வழக்கம். 7 அடி உயரத்தில் கர்ப்பக்கிரஹத்தில் காட்சி தரும் இவளைத் தரிசித்தால், மெய்சிலிக்கும். தீராப்பிணி தீர்த்து சகல செல்வங்களுக்கும் தரும் செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணகான பெண்கள் அம்மனை வழிபட்டு வளையல்கள், மஞ்சள், குங்குமப்பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

    பெரம்பூர் காமாட்சியம்மன்

    சென்னை, மாதவரம், நெடுஞ்சாலை பெரம்பூர் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகில், சிந்தாமணி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் காட்சி அளிக்கும் காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று வளைகாப்பு உத்ஸவம் நடக்கிறது. அன்றைய தினம், மகப்பேறு வேண்டும் பெண்களின் மடியில் முளைப்பயிறு கட்டிவிடும் பிரார்த்தனையும் நடக்கிறது.

    கல்லுமடை மீனாட்சியம்மன்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை இங்கு 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருநாகேசுவர முடையார் கோயில் உள்ளது. இந்தக்கோயிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இங்கு ஆடி மாத விழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

    காஞ்சி ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள்

    காசியிலிருந்து காஞ்சிக்கு, சக்தி வந்து இறங்கி அன்னபூரணியாக அன்னதானம், செய்த ஆதிபீடம் இதுவாகும். அரக்கர்களை அழித்து, நல்வர்களுக்கு நல்லதை நல்கிய இடம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலாகும். இந்த கோவில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் 100 அடி தொலைவிலேயே அமைந்துள்ளது. இந்தப் பழமையான கோயிலில், இறைவனை அடைய வேண்டி தவம் இயற்றிய சக்தி, இறைவனோடு கலந்ததைத் தெரிவிக்கும் பொருட்டு லிங்க மேனியில் சக்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பிரதோஷ காலத்திலும் மாலை நேரத்திலும் வழிபடுவர்களுக்கு வேண்டியது கிடைக்கு மாம்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வருமாம். இழந்த பொருள் கிடைக்குமாம். ஆதியில் காமாட்சி அமர்ந்த இடம் ஆதிபீடம் என்ற வழக்கில், ஆதிபீடா பரமேஸ்வரி என் செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.ற பெயர் வழங்கப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    Next Story
    ×