search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "son arrest"

    கோவை அருகே மது குடிக்க பணம் தராததால் தந்தையை கொலை செய்தேன் என்று மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கோவை:

    கோவை இருகூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது70).

    இவர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி.

    இவர்களது மகன் செந்தில் குமாருக்கு(40) கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.இதனால் செந்தில்குமார் பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி பெற்றோருடன் தகராறு செய்துள்ளார்.

    நேற்று மாலை பத்மாவதி வெளியே சென்றிருந்தார். அப்போது செந்தில்குமார் தனது தந்தையிடம் குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததோடு, மகனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த செந்தில்குமார் கத்தியால் சுப்பிரமணியின் நெஞ்சு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்த சுப்பிரமணி அப்பகுதியில் சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரது கையில் காயங்கள் இருந்தது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

    செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் கூறியதாவது:-

    நான் மதுகுடிப்பதற்காக எனது தந்தையிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் தரவில்லை. மாறாக, எந்த வேலைக்கு செல்லாமல் இவ்வாறு சுற்றுகிறாயே என என்னை கண்டித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே வீட்டில் இருந்த கத்தியால் அவரை குத்தினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதனை வாக்கு மூலமாக போலீசார் பதிவு செய்தனர்.

    இன்று அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    திருமணம் செய்து வைக்காததால் மகன் தாக்கியதில் காயம் அடைந்த தாய் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் பால கங்கா தெருவை சேர்ந்தவர் தங்கபாய் (64). இவரது மகன் டார்வின் மனோகர். இவருக்கு திருமணமாக வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக அவர் வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தாய் தங்கபாயிடம் தகராறு செய்தார்.

    அப்போது ஆத்திரம் அடைந்த அவர் தங்கபாயை அடித்து உதைத்து தலையை சுவரில் மோத வைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த தங்கபாய் மயக்கம் அடைந்தார்.

    ஆதம்பாக்கம் போலீசார் அவரை மீட்டு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை தங்கபாய் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டார்வின் மனோகர் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் சிகிச்சைக்காக காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    புத்தாண்டை கொண்டாடி விட்டு தாமதமாக வந்ததை தட்டிக்கேட்ட தந்தையை மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #NewYearCelebration
    அம்பத்தூர்:

    சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் நவீன்குமார் (19).

    நேற்று இரவு நண்பர்களோடு புத்தாண்டு கொண்டாடுவதற்காக நவீன் குமார் வெளியில் புறப்பட்டார். வெங்கடேசன் மகனை தடுத்துள்ளார். புத்தாண்டு கொண்டாடுவதற்கு வெளியில் செல்ல வேண்டாம் என்று அவர் நவீன் குமாரிடம் கூறியுள்ளார்.

    ஆனால் தந்தையின் பேச்சை கேட்காமல் புத்தாண்டை கொண்டாடுவதற்காக வெளியில் சென்ற நவீன் நள்ளிரவு 1½மணி அளவில் வீட்டுக்கு வந்தார்.

    வீட்டு கதவை திறந்துவிட்ட தாய் கண்ணகி,‘‘ஏண்டா இவ்வளவு நேரம்’’ என்று கேட்டார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த தந்தை வெங்கடேசும் வந்து மகன் நவீன்குமாரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது.

    இதனால் ஆத்திரம் அடைந்த நவீன்குமார் வெங்கடேசனை தந்தை என்றும் பாராமல் சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் விட்டு சுவற்றிலும் இரும்பு கதவிலும் விழுந்த வெங்கடேசனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வெங்கடேசனை தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் நொளம்பூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தந்தையை கொலை செய்த நவீன்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புத்தாண்டை கொண்டாடி விட்டு தாமதமாக வந்ததை தட்டிக்கேட்ட தந்தையை மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வெங்கடேசனின் சொந்த ஊர் ஆரணி ஆகும். அவர் உயிரிழந்ததும் போலீசுக்கு தெரியாமல் ஆரணிக்கு உடலை கொண்டு செல்ல உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர். வீட்டிலேயே உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்தனர். பின்னர் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்சையும் வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பு சான்றிதழை கேட்டார்.

    இதன் பிறகுதான் வெங்கடேசன் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசுக்கு தெரிய வந்தது. அவர்கள் சென்று உடலை கைப்பற்றினர். #NewYearCelebration
    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஏதாநெமிலி பகுதியை சேர்ந்தவர் பாவாடை(வயது 68). இவரது மகன் பார்த்திபன்(28). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பார்த்திபன் அவரது தந்தைக்கு சரியாக உணவு வழங்காமலும், பணம் எதுவும் கொடுக்காமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாவாடை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிட்டு வந்தார்.

    மற்ற வீடுகளுக்கு சென்று பாவாடை உணவு வாங்கி சாப்பிடுவதை பார்த்திபன் கண்டித்தார். ஆனாலும் பாவாடை தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிட்டார்.

    இந்தநிலையில் நேற்று மாலை மதுகுடித்துவிட்டு பார்த்திபன் அவரது தந்தையிடம் மற்ற வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிடக்கூடாது என கூறினார்.

    இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் அவரது தந்தை பாவாடையை அடித்து உதைத்து கீழே தள்ளினார். இதில் பாவாடைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பார்த்திபன் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாவாடையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பாவாடை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.

    தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சொத்து பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த மகன் பெற்ற தாயை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சொக்கநாதன் புத்தூர் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி பார்வதி (வயது 60). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நடராஜன் இறந்து விட்டார். அதற்கு முன்பாகவே தனது சொத்துக்களை மகன்கள், மகளுக்கு முறையாக எழுதி கொடுத்து விட்டார்.

    வேதகோவில் தெருவில் உள்ள பூர்வீக வீட்டை மட்டும் தனது மனைவிக்கு எழுதி கொடுத்து இருந்தார். கணவர் இறந்த பிறகு பார்வதி அந்த வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் மூத்த மகன் சிவகாமிநாதன் (45) பூர்வீக வீட்டை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு பார்வதியிடம் கேட்டு உள்ளார். அதற்கு தான் இறந்த பிறகு அந்த வீட்டை எடுத்துக்கொள் என்று தெரிவித்து விட்டார்.

    இதை ஏற்கமறுத்த சிவகாமிநாதன் அடிக்கடி தாயாரிடம் பிரச்சினை செய்து வந்துள்ளார். நேற்று இரவு மீண்டும் சொத்து தொடர்பாக தாய்- மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சிவகாமிநாதன் பெற்ற தாய் என்றும் பாராமல் சொத்துக்காக பார்வதியை அரிவாளால் சராமரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த பார்வதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பார்வதியின் மற்றொரு மகன் புதுராஜா சேத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமாரவேல் வழக்குப்பதிவு செய்து சொத்துக்காக தாயை கொன்ற சிவகாமிநாதனை கைது செய்தார். #tamilnews
    மத்திகிரி அருகே குடும்ப தகராறில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை மகன் கத்தியால் குத்திக்கொலை செய்தார். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மத்திகிரி:

    மத்திகிரி அருகே குடும்ப தகராறில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை மகன் கத்தியால் குத்திக்கொலை செய்தார். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள சின்னபேளகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் அனுமந்தப்பா (வயது 70). இவர் மத்திகிரி கால்நடை பண்ணையில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் 2-வது மகன் முனிராஜ் (46). தையல் தொழிலாளி. இவர் குடும்பத்துடன் ஓசூரில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் முனிராஜிக்கும், தந்தை அனுமந்தப்பாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று இரவு அனுமந்தப்பா சின்னபேளகொண்டப்பள்ளியில் உள்ள வீட்டில் இருந்தபோது முனிராஜ் அங்கு வந்து தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

    இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை அனுமந்தப்பாவை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனுமந்தப்பாவை உறவினர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அனுமந்தப்பா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முனிராஜை வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை அவரது மகனே கத்தியால் குத்திக்கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    புதுவை வேல்ராம்பட்டு ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டு விற்ற தந்தை, மகனை கைது செய்த போலீசார் 2300 போலி லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். #fakelottery
    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு துலுக்கானத்தம்மன் நகரில் ஒரு வீட்டில் ரகசியமாக ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக முதலியார் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் துலுக்கானத்தம்மன் நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள செல்வராஜ் என்பவர் வீட்டில் சிலர் வருவதும், போவதுமாக இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வீட்டில் செல்வராஜ்மற்றும் அவரது மகன் மதியழகன் (22) ஆகிய இருவரும் சேர்ந்து ஆன்லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2300 போலி லாட்டரி சீட்டுகள், விற்பனை பணம் ரூ. 26 ஆயிரம் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். #fakelottery
    சங்கராபுரம் அருகே திருமணம் செய்துவைக்காததால் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. #Murder

    ரிஷிவந்தியம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூங்கில் துறைப்பட்டு கொடியனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 65). இவரது மனைவி பொடி (60). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். 3-வது மகன் கோபி (35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் கோபி தனது தாய், தந்தையிடம் தனக்கு உடனடியாக திருமணம் செய்து வையுங்கள் என கூறினார். அதற்கு அவர்கள் விரைவில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என கூறினர். ஆனால் வெகுநாட்களாகியும் கோபிக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. இதனால் கோபி அவரது பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு கோபி நான் வெளி நாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை என்ன செய்தீர்கள், எனக்கு உடனடியாக திருமணம் செய்து வையுங்கள் என அவரது தந்தை கந்தனிடம் கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    ஆத்திரம் அடைந்த கோபி தனது தந்தை கந்தனின் தலையை பிடித்து சுவற்றில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த கந்தன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட கந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கோபியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்துவைக்காததால் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

    தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே வீடு கட்ட பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே உள்ள வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 55) கூலி தொழிலாளி.

    இவருக்கு அமரா(48) என்ற மனைவியும், சத்யா (30) என்ற மகளும், முருகன்(28), ஞானமூர்த்தி (25), கேசவன் (19) உள்ளிட்ட 3 மகன்களும் உள்ளனர்.

    இதில் கட்டிட மேஸ்திரியான முருகன் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி வருகிறார். கட்டுமான செலவு அதிகரித்து விட்டதால் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தந்தையிடம் சென்று பணம் கேட்டுள்ளார்.

    அப்போது தந்தை மகனுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னிடம் பணம் இல்லை என்றும், இருந்தாலும் கொடுக்க முடியாது என்றும் தந்தை சரவணன் மறுத்து உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் கோபத்தில் தன்னுடைய தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்த சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரவணன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
    வாலாஜாவில் மேடை பாடகரை மகனே கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் வாலாஜா தென்றல் நகரை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 54). இவர், மேடை கலைக்குழுவினருக்கு இசை பயிற்சியாளராகவும், பாடகராகவும் இருந்தார். இவரது மனைவி தனுஜா குமாரி (48). தனியார் பள்ளி இந்தி ஆசிரியை.

    இவர்களுக்கு பிரதீஸ்வரன் (25), பிரசாத் (20) என 2 மகன்கள் உள்ளனர். பிரதீஸ்வரன், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். பிரசாத் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலைக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில், நேற்றிரவு அசோக்குமாருக்கும், மூத்த மகன் பிரதீஸ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த பிரதீஸ்வரன் தந்தை என்ற பாசம் இரக்கமின்றி அசோக் குமாரை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கினார்.

    இதில் பலத்தகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். நள்ளிரவு 1 மணியளவில் இந்த கொலை சம்பவம் குறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து, பிரதீஸ்வரன் மற்றும் அவரது தாய், தம்பியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    சிதம்பரம் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் தந்தையை அடித்துக் கொன்றதாக கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பொன்னந்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 68). இவரது 2-வது மனைவி நீலா.

    நீலாவுக்கு சக்திவேல் (35) என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் வெளிநாடு சென்றிருந்தார். ராமலிங்கம் கூலி வேலை பார்த்து வீட்டை கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதத்துக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சக்திவேல் சொந்த ஊருக்கு வந்தார்.

    ராமலிங்கம் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். இதனை சக்திவேல் தட்டிக்கேட்டார். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    நேற்று மாலை ராமலிங்கம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த சக்திவேல், ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று தந்தையிடம் கேட்டார்.

    அப்போது ராமலிங்கம் அங்கு கிடந்த செங்கலை எடுத்து சக்திவேலை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் இரும்பு கம்பியை எடுத்து ராமலிங்கத்தின் தலையில் அடித்தார். இதில் ராமலிங்கம் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    தனது தந்தை இறந்ததை அறிந்ததும் சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிள்ளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சக்திவேலை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது தந்தை ராமலிங்கம் மது குடித்து விட்டு வந்து குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    தட்டிக்கேட்ட என்னை செங்கலால் தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அவரை தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பொம்மனூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. பெயிண்டர்.

    இவரது மனைவி கோகில வேணி. இவர்களுக்கு சூர்யா என்கிற சுரேந்திரன் என்ற மகனும், அம்மு, விமலா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    இதில் மகள்கள் 2 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கோவிந்தசாமி தனது மகன் சூர்யாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோகிலவேணி இறந்து விட்டார். தனது மனைவியை இழந்து கோவிந்தசாமி தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் தினமும் மதுபோதையில் குடித்துவிட்டு அடிக்கடி தன்னுடைய மகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

    இதையடுத்து நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மகன் சூர்யாவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது தந்தையை அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மூர்க்கத்தனமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரச மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தந்தையை இரும்பு கம்பியால் தாக்கிய அவரது மகன் சூர்யா என்கிற சுரேந்திரனை மகேந்திரமங்கலம் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×