search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sengol"

    • செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் தொடர்ந்து வெறுக்கிறது என்று தெரியவில்லை.
    • சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது.

    புதுடெல்லி:

    மத்திய மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் தொடர்ந்து வெறுக்கிறது என்று தெரியவில்லை. சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது. ஆதீனத்தின் வரலாற்றை போலி என காங்கிரஸ் தெரிவிப்பது அவர்களின் நடத்தையை காட்டுகிறது. நேருவுக்கு தமிழகத்தின் சைவ மடத்தால் வழங்கப்பட்ட செங்கோலை காங்கிரஸ் ஊன்று கோலாக்கி விட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
    • வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவன மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

    ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அந்த செங்கோல் வழங்கப்பட்டது.

    டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவன மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். வரும் 28-ந் தேதி சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.

    இதை முன்னிட்டு அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அந்த செங்கோலை கங்கை புனித நீரால் புனிதப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    மேலும் அந்த செங்கோலை தயாரித்தவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர்.

    • திருஞானசம்பந்தர் எழுதிய கோளறு பதிகம் குறித்தும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது.
    • பிரிட்டன் அரசர்கள், அரசிகள் முடிசூட்டும் தங்கக் கோளத்தின் மேல் சிலுவை நிறுவப்பட்டுள்ளது.

    நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்திய பாரம்பரிய நெறிமுறைகளுடன் அதிகாரப் பரிமாற்ற நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் அரசின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு கேட்க, ஜவஹர்லால் நேரு. மூதறிஞர் ராஜாஜியுடன் ஆலோசனை நடத்தினார். சோழ மன்னர்கள் அதிகார பரிமாற்றத்துக்கு புனித அடையாளமாக செங்கோல் பரிமாற்றம் செய்த அதே பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க ராஜாஜி ஆலோசனை கூறினார்.

    மேலும், ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு 'தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசி நல்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். குருமகா சன்னிதானம் ஆதீனக் கட்டளைத் தம்பிரான் ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரானையும் ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வர வித்வான் 'நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத் தினம் பிள்ளையையும் டெல்லிக்கு தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்கள்.

    சைவச்சின்னம் பொறித்த தங்கச் செங்கோல் ஒன்று செய்து திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட் டது. புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீன கர்த்தரான குரு மகாசன்னிதானத்தைப் பார்த்து, அரசு விழாவில் தான் எந்தத் திருமுறைப்பாடல் பாடுவது எனக் கேட்க. 'கோளறு பதிகம் பாடுக' என்று சன்னிதானம் கட்டளையிட்டார்.

    1947 ஆகஸ்ட் 14-ம் நாள் நள்ளிரவில், மவுண்ட்பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய தம்பிரான் முதலில் பெற்றார். செங்கோலுக்குப் புனித நீர் தெளித்து 'ஓதுவா மூர்த்தி, வேயுறு தோளிபங் கன் விடமுண்ட கண்டன்' என்று தொடங்குகிற திருஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தை 'அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே' என்று முழுமையாகப் பாடி ஆசிர்வதித்து செங்கோலை ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார்.

    திருஞானசம்பந்தர் எழுதிய கோளறு பதிகம் குறித்தும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது. தமிழில் 'கோள்' என்றால் கிரகம்: 'அறு' என்றால் நீக்குவது. 'கோளறு' என்றால் கிரகங்களின் தீய விளைவுகளை அழித்தல். 'பதிகம்' என்பது பொதுவாக 10 பாடல்களைக் கொண்ட சிவபெருமானை போற்றும் பாடலாகும்.

    பிரிட்டன் அரசர்கள், அரசிகள் முடிசூட்டும் தங்கக் கோளத்தின் மேல் சிலுவை நிறுவப்பட்டுள்ளது. கடவுளின் சக்தி பெறப்படுவதைக் காட்டும்விதமாக 1661-ம் ஆண்டு 2-ம் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்காக பிரிட்டன் ராணியின் சாவரின் ஆர்ப் உருவாக்கப்பட்டது. 363 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    இப்படி பல்வேறு நாடுகளின் ஆட்சி அடையாள சின்னம் குறித்தும், சோழ பேரரசு குறித்த தகவல்களும் மத்திய அரசின் விளக்கக்காட்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
    • முக்கோண வடிவிலான புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவு, சக்தி, கர்மா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் அதி நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட உள்ளது.

    பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டிடக்கலை திறன் ஆகியவற்றால் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளால் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது.

    ஏற்கனவே உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு கடந்த 1921-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் கருத்துக்களுக்கும், காலத்தின் தேவைக்கும் ஏற்ப 6 ஆண்டுகளில் 1927-ல் கட்டி முடிக்கப்பட்டது.

    இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் இதில் கூடும், இது பிரிட்டிஷ் ஆட்சியின் போது கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது. 1956-ம் ஆண்டில், தற்போதைய கட்டிடத்தில் 2 மாடிகள் சேர்க்கப்பட்டன. காலப்போக்கில் தேவைகள் அதிகரித்துள்ளன. இடமும் குறுகலாகிவிட்டது.

    இரு அவைகளின் கூட்டு அமர்விற்கு, மைய மண்டபத்தில் 436 பேர் மட்டுமே அமர முடியும். கூட்டுக்கூட்டம் நடக்கும் போதெல்லாம் சுமார் 200 நாற்காலிகள் தற்காலிகமாக ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.

    இது தவிர, 100 ஆண்டுகளை நெருங்கும் இக்கட்டடத்தில், அவ்வப்போது புதிய மின் கேபிள்கள், சிசிடிவி, குளிரூட்டும் அமைப்புகள், ஆடியோ வீடியோ போன்ற வசதிகள் உள்ளன. தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் பலம் இழந்து காணப்படுகிறது.

    இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பின்னர் இருக்கைகள் அதிகரிக்கும். அதற்கு தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் போதாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. பழைய பாராளுமன்ற கட்டிடம் 6 ஏக்கரில் சுமார் 24 ஆயிரத்து 821 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது.

    ஆனால் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 18 ஏக்கரில் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது. புதிய கட்டிடம் இரண்டு ஆண்டுகள் 5 மாதம் 18 நாட்களில் கட்டப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தை போல், புதிய கட்டிடத்தில் மத்திய மண்டபம் எதுவும் கட்டப்படவில்லை. இரு அவைகளின் கூட்டுக் கூட்டங்களுக்கு மக்களவை பயன்படுத்தப்படுகிறது.

    888 இருக்கைகள் கொண்ட மக்களவை மண்டபத்தில் மொத்தம் 1272 இருக்கையில் பொருத்தப்பட்டு உள்ளன.

    உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக இருக்கைகளில் பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழிபெயர்ப்பு சாதனங்கள், மாற்றக்கூடிய மைக்ரோ போன்கள் போன்றவை நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கையிலும் மல்டிமீடியா காட்சி வசதி உள்ளது. கேலரிகளில் எங்கு அமர்ந்தாலும் சாமானியர்கள் தெளிவாகத் தெரியும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு விசேஷ மற்றும் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு மொத்தம் 530 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    முக்கோண வடிவிலான புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவு, சக்தி, கர்மா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த 3 வாயில்களுக்கு அருகில் ஆயிரக்கணக்கான ஆண்டு இந்திய வரலாற்றை விளக்கும் வெண்கலப் படங்கள் நிறுவப்பட்டுள்ளன. அறிவு வாயில் அருகே நாளந்தாவின் உருவங்கள். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின் காட்சிகள், கர்மா வாயிலின் ஒருபுறம் கோனார்க், சக்ரா மற்றும் மறுபுறம் சர்தார், வல்லபாய் படேல், பாபாசாஹேப் அம்பேத்கார் வெண்கல சிலைகள் உள்ளன.

    அனைத்து மாநிலங்களின் ஓவியங்களும் சிற்பங்களும் இதில் வைக்கப்பட்டுள்ளன. லோக்சபா பொதுச்செயலாளர் உத்சல் குமார் சிங், கட்டிட திறப்பு விழாவுக்காக, எம்.பி.,க்களுக்கு ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளார். இந்தக் கட்டிடத்தை வரும் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு பிரதமர் திறந்து வைப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்க உள்ளார். ஆனால், அழைப்புக் கடிதத்தில் ராஜ்யசபா தலைவரின் பெயர் இல்லை என்று காங்கிரஸ் எம்பி விவேக் தங்கா மறுத்துள்ளார். இந்த அட்டையில் துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவரான ஜக்தீப் தன் காட் பெயர் ஏன் இல்லை என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ×