search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "section 144"

    சபரிமலை செல்லும் பாதையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaTemple #Section144 #Pamba #Nilakkal
    பத்தனம்திட்டா:

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது.

    ஆனால், சபரிமலைக்கு வரும் அனைத்து பாதைகளிலும் போராட்டக்குழுவினர் முகாமிட்டு, பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர். பெண் பத்திரிகையாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

    சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததால், நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். நிலக்கல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கக்கோரி சர்வதேச இந்து பரிஷத் அமைப்பு சார்பில் இன்று நள்ளிரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் இன்று நள்ளிரவு முதல் பம்பா, நிலக்கல், சன்னிதானம் மற்றும் எலவுங்கல் பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்துள்ளார்.

    உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என்றும் மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே கேட்டுக்கொண்டுள்ளார்.  #SabarimalaProtests #SabarimalaVerdict  #SabarimalaTemple #Section144 #Pamba #Nilakkal
    வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை முதல் 3 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரத்தில் நாளை (26-ந்தேதி) அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேஷ் பண்ணையாரின் 15-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிகழ்ச்சி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்திடவும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் (27-ந்தேதி) காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி அன்றைய தினங்களில் பொதுமக்கள் 5 அல்லது அதற்கு மேல் கூடுவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பொதுமக்களை அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்திற்கு கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்றால் முன்னதாகவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து அனுமதி பெற வேண்டும். மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Section144 #Sengottai
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பிரனிடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதையடுத்து செங்கோட்டையில் ஒருநாள் 144 தடை உத்தரவு போடப்பட்டு விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துவரபட்டது.

    அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தையடுத்து ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை அனைத்தும் குண்டாற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது,

    இந்நிலையில் மறுநாள் இருதரப்பினரிடமும் கலெக்டர் ஷில்பா தலைமையில், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கருத்துகேட்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்நிலையில் மீண்டும் தென்காசி, செங்கோட்டையில் ஏற்பட்ட சம்பவங்களை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15-ந் தேதி மாலை 8 மணி முதல் இன்று 22-ந் தேதி காலை 6 மணி வரை தொடரும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து செங்கோட்டை நகரை சுற்றி 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பிற்கு பின்னர் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வந்தது. மேலும் தென்மண்டல போலீஸ் ஜ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு-பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.

    இந்நிலையில் இன்று காலையுடன் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது செங்கோட்டை நகராட்சி, புதூர், பண்பொழி, வல்லம், பிரானூர் பார்டர், பெரிய பிள்ளை வலசை, கற்குடி, புளியரை, சுமை தீர்த்தபுரம், தெற்கு மேடு, தேன் பொத்தை, கணக்குபிள்ளை வலசை ஆகிய பஞ்சாயத்துகளில் இன்று காலை 6 மணி முதல் வருகிற 30-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.



    இக்காலங்களில் பொதுக்கூட்டம் - போராட்டம் நடத்துவதற்கும் வேறு எந்தவிதமான ஆர்பாட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் எந்தவொரு இடத்திலும் மேற்குறிய நோக்கத்திற்காக 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடுவதற்கும் வன்முறை தூண்டுவதற்காக ஆயுதங்களோ பிற பொருட்களையோ வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி.க்கள் தனபாலன், முகமது அஸ்லாம் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணிகண்டன், வெற்றி செல்வன், பழனிகுமார் மற்றும் 8 இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 540 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ரெயில்வே கேட் அருகே கூடுதலாக ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  #Section144 #Sengottai
    தென்காசியில் பா.ஜ.க. நிர்வாகியின் கடை உள்பட 2 கடைகளுக்கு தீவைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தென்காசி:

    செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தென்காசி பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏற்கனவே தென்காசி தாலுகா பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    தென்காசி நகர் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றிவந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    இந்தநிலையில் நேற்றிரவு தென்காசியில் 2 கடைகளுக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசியை சேர்ந்தவர் ஜீவன்ராம். இவர் மேல ஆவணி மூலவீதியில் பேன்சி கடை வைத்துள்ளார். இரவு இந்த கடைக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதனால் கடையில் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதே போல் வாய்க்கால் பாலத்தில் ராஜாசிங் என்பவரது மளிகை கடைக்கும் தீ வைக்கப்பட்டது. ராஜா சிங் பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து தென்காசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ வைத்த கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    திட்டமிட்ட பாதை வழியாக விநாயகர் ஊர்வலம் செல்லும்போது மீண்டும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. #VinayagarChathurthi #Section144
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று நடைபெற்ற ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. ஏ.டி.எம். கண்ணாடி உடைக்கப்பட்டது.



    மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து செங்கோட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டையில் முக்கிய வீதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மதியம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. மாலையில் இந்த சிலைகள் குண்டாறில் கரைக்கப்படுகிறது.

    இதனிடையே திட்டமிட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்லும் போது மீண்டும் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக இருதரப்பினரையும் அழைத்து கலெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிராபகர் சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செங்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டை மற்றும் தென்காசி தாலுகா பகுதிகளில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது தேவைபட்டால் 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்படும். குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #VinayagarChathurthi #Section144


    ×