search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand smuggling"

    • சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வருவதை அறிந்து மணல் அல்லிக்கொண்டிருந்த நபர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார்.

    கடலூர்: 

    கடலூர் போலீஸ் சூப்பிரண்டு, பண்ருட்டி டிஎஸ்பி, ஆகியோர் உத்தரவின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,  சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவத்தூர் கெடிலம் ஆற்றுப்பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் கடத்துவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து.உடனே போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்து மணல் அல்லிக்கொண்டிருந்த நபர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார். உடனே போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் தப்பி ஓடியது அதே ஊரை சேர்ந்த வெற்றிவேல் (எ) தேவவிரதன் என்பது தெரியவந்தது. அவர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பாலாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 வந்த மாட்டு வண்டிகளை சோதனை செய்தனர்.

    அதில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்து போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

    இது சம்பந்தமாக 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • திருநாவலூர் அருகே மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீஸ் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு காவலர் மனோகரன் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது கிழக்கு மருதூர் கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்றபோது, கிழக்கு மருதுறையை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), ஜெகதீசன் (44) சோமாசிபாலயம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (60) ஆகிய 3 பேரும் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்த 3 மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் சப் இன்ஸ்பெக்டர் அரசு, மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கடுக்கனூர், செய்யாற்று படுகை அருகே 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்திக் கொண்டு வந்தனர்.

    போலீசார் வருவதை கண்டவுடன் 3 பேர் தப்பி ஓட முயற்சி செய்தனர். இதில் மேல்மட்டை விண்ணமங்கலம் புதுக்கோட்டை, பகுதியை சேர்ந்த 2 பேரை மடக்கி பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • பண்ருட்டி போலீஸ் டி.எஸ்பி. சபியுல்லா உத்தரவின் பெயரில் புதுப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் டி.எஸ்பி. சபியுல்லா உத்தரவின் பெயரில் புதுப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பொன்னங்குப்பம் கிராமத்திற்கு மேற்கே உள்ள மந்தவெளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சாக்கு பையில் மணல் இருவர் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    போலீசார் வருவதை கண்ட அவர்கள் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போலீசார் அவர்கள் பொன்னகுப்பம் பகுதியை சேர்ந்த ஏழுமலை 55 என்பவரை கைது செய்தனர்.

    தப்பி ஓடிய சுபாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • டிராக்டர் பறிமுதல்
    • தனிப்படை போலீசார் சோதனையில் சிக்கினார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் பாலாற்றில் இருந்து அதிகளவில் மணல் கடத்தப்ப டுவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்டதனிப்படை போலீசார் நேற்று ஆம்பூர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஒரு டிராக்டரை மடக்கி சோதனை செய்தனர்.

    இதில் பாலாற் றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைய டுத்து டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    • லாரி பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே கள்ள தனமாக மணல் கடத்திய லாரியை நாட்டறம்பள்ளி தாசில்தார் லாரியை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஷ் நிலையத்தில் ஒப்படைத்தில் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது போலிசார் வழக்கு பதிவு.

    நாட்டறம்பள்ளி தாசில்தார் க. குமார் தலைமையில் நேற்று முன்தினம் இரவு மண்டல துணை வட்டாட்சியர் வருவாய் அலுவலர் விக்னேஷ் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அடங்கிய வருவாய்த்துறையினர் கனிம கடத்தலை தடுக்கும் வகையில் பச்சூர் பஞ்சாயத்து கவுண்டர் வட்டம் என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்திய போது அதில் இருந்த டிரைவர் டிப்பர் லாரியை ரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டார்.

    பின்பு அருகில் சென்று பார்த்தபோது டிப்பர் லாரியில் சுமார் 4 யூனிட் மணல் இருந்தது பின்பு விசாரித்த போது மேற்படி டிப்பர் லாரி வெலக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் நவமணி என்பவருக்கு சொந்தமானது அதன் டிரைவர் மேல்பச்சூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என தெரிய வந்தது இதனையடுத்து மாற்று டிரைவர் மூலம் டிப்பர் லாரியை நாட்டறம்பள்ளி போலீஷ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது சம்பந்தமாக பச்சூர் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் நேற்று நாட்டறம்பள்ளி போலிஷ் நிலையத்தில் மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தார் புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலிஷ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திருச்சி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் மேலவாளாடி மேம்பாலம் பகுதியில் ரோந்து சென்றார்
    • போலீசார் தங்களை நெருங்குவதை கண்ட மணல் கடத்தல் காரர்கள் மூன்று பேரும் மாட்டு வண்டியை நடுரோட்டில் போட்டுவிட்டு குதித்து தப்பி ஓடினர்.

     திருச்சி :

    திருச்சி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் மேலவாளாடி மேம்பாலம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது லால்குடி மேல வாளாடி பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர்( வயது 42) ஆனந்த் (25) மற்றும் பெயர் விவரம் தெரியாத இன்னொரு நபர் என 3 பேர் சேர்ந்து மாட்டு வண்டியில் மணலை கடத்திக் கொண்டு சென்றனர். இதனைப் பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைக்க முற்பட்டனர்.

    போலீசார் தங்களை நெருங்குவதை கண்ட மணல் கடத்தல் காரர்கள் மூன்று பேரும் மாட்டு வண்டியை நடுரோட்டில் போட்டுவிட்டு குதித்து தப்பி ஓடினர். பின்னர் போலீசார் மாட்டு வண்டி மற்றும் மணலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொக்கலிங்கபுரம், பாப்பாக்குடி, காடுவெட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 பேரை கைது செய்தனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சொக்கலிங்கபுரம், பாப்பாக்குடி, காடுவெட்டி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காடுவெட்டி அருகே உள்ள மாரியம்மன் கோவில் வழியாக சென்ற 2 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் காடுவெட்டி செங்கால் ஓடையில் இருந்து திருட்டு தனமாக மணல் ஏற்றிக்கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, காடுவெட்டி மெயின்ரோடு தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 56), வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • டிராக்டர் பறிமுதல்
    • சிறையில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சான்றோர் குப்பம் கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கோவிந்தராஜ் வயது (25) என்பவர் அனுமதி இன்றி டிராக்டரில் மணல் கடத்தி வந்த போது டிராக்டரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    இரவு நேரத்தில் இவர் ஆம்பூர் பாலாற்றில் இருந்து மணலை கடத்தி வந்து சான்றோர்கப்பம் மாதகடப்பா பகுதியில் பதுங்கி வைத்து மணல் வியாபாரம் செய்து வந்ததாக தெரிவித்தார்.

    போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து கோவிந்தராஜ் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    ரோந்து பணியில் இருந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு இவர்களை மடங்கி பிடித்து விசாரணை செய்ததில் திருட்டுத்தனமாக மணல் அள்ளியது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே இருவேல்பட்டில் மலட்டாறு ஒன்று உள்ளது. இந்த ஆற்றில் நேற்று இரவு 2 பேர் மினி லாரியில் அனுமதி இன்றி மணல் அள்ளிக் கொண்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு இவர்களை மடங்கி பிடித்து விசாரணை செய்ததில் திருட்டுத்தனமாக மணல் அள்ளியது தெரிய வந்தது.

    உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து இதற்கு காரணமான பண்ருட்டி வட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரை கைது செய்தனர். மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் தப்பி ஓடிய காரப்பட்டு பகுதியை சேர்ந்த குமார் என்பவரை தேடி வருகின்றனர். 

    • திருவெண்ணைநல்லூர் அருகே ஆற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • னி லாரியில் மணல் அள்ளிக்கொண்டு பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி கோவில் அருகே வந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று கரடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (வயது 21) குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த், ராஜசேகரன் மினி லாரியில் மணல் அள்ளிக்கொண்டு பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி கோவில் அருகே வந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சந்தேகப்படும் படி வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்ததில் திருட்டுத்தனமாக ஆற்றில் மணல் அல்லியது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுத்தனமாக மணல் அள்ளி கொண்டு வந்த நெடுஞ்செழியனை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அரவிந்த் ராஜசேகரனை வலைவீசி தேடி வருகின்றனர். மினி லாரி செய்யப்பட்டது.

    ×